Monday 8 July 2024

 அறிவியல் குறுந்தகடு ஒளிபரப்புதல்
 
கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால்  தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் 


அறிவியலில் மேற்படிப்பு படிக்க தூண்டும் பெருந்தொடர்  குறுந்தகடு

 







தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசககம் நடுநிலைப் பள்ளியில் கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால்  தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் ஒளிபரப்புதல் துவக்க விழா நடைபெற்றது.
                                              பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசுகையில்,அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குனர் அழகப்பா ராம் மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும் , இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் கடந்த ஆறு  ஆண்டுகளுக்கு முன்னர் இப்பள்ளிக்கு வழங்கினார். தொடர்ந்து ஆறு  ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்டு வரும்   காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் குறுந்தகடு  இளம் வயது மாணவர்களை அறிவியலில் மேற்படிப்பு படிக்க தூண்டும் வகையில் ஊக்கப்படுத்தி வருகிறது.    

                              இயற்பியலை 26 மணியளவில் 52 அரை மணி நேரக் காட்சிகளாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் துணைப் பாடமாக இரு பகுதிகளாக கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் எழுதி தயாரிக்கப்பட்டது .அறிவியல் தொடர்பான தகவல்களை நேரடியாக நடிகர்கள் அந்த அறிவியல் அறிஞர்களின் கதாபாத்திரங்களாக தொடர்ந்து நடித்து ,அதன் முழு விவரத்தையும் விரிவாக விளக்கும் காட்சி அமைப்பு பாராட்டக்கூடியது .வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று கடைசி பாட வேளையில் ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு  ஒளிபரப்பு செய்யப்பட்டு அதனில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு வினாடி-வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுவதாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர்  செய்து இருந்தார்.தொடர்ந்து எட்டாம்   ஆண்டாக ஒளிபரப்பபடுவது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால்  தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் ,அவைகளின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு ஒளிபரப்படும் துவக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.


வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=64zlRC4fJGo



No comments:

Post a Comment