பரிசளிப்பு விழா
ஆங்கில வார்த்தைகள் ஒப்புவித்தல் போட்டி
விடா முயற்சி வெற்றி தரும்
வங்கி முதன்மை மேலாளர் அறிவுரை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம்
நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வார்த்தைகள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பரிசுகளை கனரா வங்கி முதன்மை மேலாளர் வழங்கினார்.
பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளியில் நடைபெற்ற ஆங்கில வார்த்தைகள் ஒப்புவித்தல் போட்டிகளில் சிறப்பாக கூறிய மாணவர்கள் கனிஸ்கா,சுபிக்ஷன்,நந்தனா,ஹாஷினி,விஜய்கண்ணன்,ஜாய் லின்சிகா லேகா ஸ்ரீ ஆகிய மாணவர்களுக்கு தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் நவீன் மரக்கன்றுகளை பரிசாக வழங்கி பேசுகையில், வாழ்க்கையில் விடா முயற்சி வேண்டும்.தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும்.உங்கள் பணிகளை நீங்களே செய்ய வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கை நல்ல முறையில் அமையும்.
நான் நல்ல முறையில் படித்ததால்தான் கர்நாடகாவில் இருந்து இருந்து தேவகோட்டை வந்து பணிபுரிகிறேன்.படிக்கும் வயதில் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் முயற்சி எடுத்து விடாமல் படியுங்கள்.
உங்களுக்கு நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் கிடைத்துள்ளார்கள். பள்ளியும் நல்ல முறையில் அமைந்துள்ளது.படிக்கும் வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் .என்று கூறினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்..கனரா வங்கி உதவியாளர் பாலா உட்பட பலர் பங்கேற்றனர்
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வார்த்தைகள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் நவீன் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்..கனரா வங்கி உதவியாளர் பாலா உட்பட பலர் பங்கேற்றனர்
வீடியோ :
https://www.youtube.com/watch?v=l6uoAKuwbOo
https://www.youtube.com/watch?v=jSpb8YaK050
No comments:
Post a Comment