Saturday 30 July 2022

 

'என் குப்பை என் பொறுப்பு':மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தூய்மை பணிகளுக்கு என்னை அர்ப்பணித்து கொள்ள என் நேரத்தை ஒதுக்குவேன் - மாணவர்கள் தூய்மை உறுதிமொழி

 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியை சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன்  துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''பள்ளியிலும், பொது இடங்களிலும் குப்பையை வீசக்கூடாது. துாய்மை இந்தியா திட்டம் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலை சுகாதாரமான முறையில் பராமரிப்பது மாணவர்களின் கடமை. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்,'' என்றார். தூய்மை உறுதிமொழியை மாணவர்களும்,ஆசிரியர்களும் எடுத்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார பிரிவு கிருஷ்ணமூர்த்தி,பள்ளி ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,ஸ்ரீதர்,கருப்பையா ஆகியோர் செய்து இருந்தனர்.

 

 

பட விளக்கம் :

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சார்பில்  துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் 'என் குப்பை என் பொறுப்பு'என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=VbDPDSQ9_zw

 

 

 

 

 

No comments:

Post a Comment