Wednesday 6 July 2022

   முட்டை,கீரை,பருப்பு மூன்றையும்  உணவில் சேருங்கள் 

 

   இதயமும் சிறுநீரகமும் நன்றாக செயல்பட   இரவு உணவை 7 மணிக்கு அவசியம் சாப்பிட வேண்டும்

 

அரசு மருத்துவர் அறிவுரை 




 

 தேவகோட்டை - ஜூலை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இதயமும் சிறுநீரகமும் நன்றாக செயல்பட   இரவு உணவை 7 மணிக்கு அவசியம் சாப்பிட வேண்டும் என அரசு மருத்துவர் பேசினார்.

                       ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.திருவேகம்பத்துர் அரசு ஆரம்ப சுகாதர நிலைய  மருத்துவர் மீரா கணேஷ் மாணவர்களிடம் பேசும்போது, அதிகமாக தொலைபேசியை பார்ப்பதால் தலைவலி பார்வைக் குறைபாடு அதிகரித்து வருகின்றது. பள்ளி மாணவர்களிடம் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. காலை உணவை கட்டாயம் உட்கொள்ள வேண்டும். காலை உணவை உட் கொள்ள வில்லை என்றால் அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. பல்சொத்தை அதிகமான அளவில் பள்ளி மாணவர்களிடம் காணப்படுகிறது. எந்த உணவை  சாப்பிட்ட பின்பும் வாய்  கொப்புளிக்க  வேண்டும் . மேலும் இரவு நேரங்களில் அவசியம் பல் துலக்க வேண்டும். வயதுக்கு ஏற்ற எடையும் , உயரமும் இருக்க வேண்டும். முட்டை, புரோட்டீன் நிறைந்த உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும். ஸ்னாக்ஸ் ஐட்டங்களை தவிர்க்க வேண்டும். பழம், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். உணவில் கட்டாயம் முட்டை, கீரை ,பருப்பு இருக்க வேண்டும். 20 முதல் 30 வரை தினமும் உக்கி  போடுங்கள். அதுதான் உங்களின் உடல்நலனுக்கு நல்லது. ரத்த சோகை அதிகமாக மாணவப்பருவத்தில் காணப்படுகிறது. அதனை சரி செய்ய அரசாங்கம் இரும்புசத்து மாத்திரைகளை வழங்குகிறது. அவற்றை நல்ல முறையில் வாரந்தோறும் வியாழக்கிழமை பயன்படுத்துங்கள். இவ்வாறு பேசினார்.செவிலியர் விஜிலா,மருந்தாளுனர் பாரதிக்கனி ஆகியோர் உடன் இருந்தனர்.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இதயமும் சிறுநீரகமும் நன்றாக செயல்பட   இரவு உணவை 7 மணிக்கு அவசியம் சாப்பிட வேண்டும் என அரசு மருத்துவர் பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=Oy9p1dMl5Ew

 https://www.youtube.com/watch?v=w9_L-7GFVNg

 

 

 

No comments:

Post a Comment