Sunday 10 July 2022

 மாநில அளவிலான இணையவழி போட்டிகள்







 

 

  விவேகானந்தர் பொன்மொழிகள் ஒப்புவித்தல் மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

 

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விவேகானந்தர் பொன்மொழிகள் ஒப்புவித்தல் இணைய வழி போட்டிகளில் பங்கேற்றனர்.பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

                                    
                                      சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் சார்பில் பள்ளியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும்  இணையத்தின் வழியாக பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது . சுவாமி விவேகானந்தர் கண்ட எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெற்றது.இப்போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையம் வழியாக பங்கேற்றனர்.பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் , முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இணையம் வழியாக போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.மாநில அளவிலான இப்போட்டிகளை நடத்திய சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்துக்கு பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிப்பட்டது. 

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விவேகானந்தர் பொன்மொழிகள் ஒப்புவித்தல் இணைய வழி போட்டிகளில் பங்கேற்றனர்.பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=0-ufW8y6WUE

 

 

 

 

No comments:

Post a Comment