Sunday 8 May 2022

 ஆளுமை மிக்க  நிகழ்ச்சி  தலைவருக்கு வாழ்த்துக்கள் 

 மதுரை அகில இந்திய வானொலியில் நிலைய நிகழ்ச்சி தலைவர் திருமதி. தாராதேவி அவர்கள் மறக்க முடியாத ஆளுமை



 

                             நண்பர்களே சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் எங்கள் பள்ளியில் இருந்து கிளம்பி மதுரை   அகில இந்திய வானொலி வானொலி நிலையத்தை சென்றடைந்தோம். புதிய நிகழ்ச்சி தலைவராக திருமதி.தாராதேவி அவர்கள் இருந்தார். நாங்களும் அவரிடம் எங்கள் பள்ளியை அறிமுகப்படுத்தி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி தொடர்பான பல்வேறு தகவல்களை அவரிடம் எடுத்துரைத்தேன்.  என்னிடம் மிகவும் அன்புடன் பல்வேறு தகவல்களையும் கேட்டுக்கொண்டார்கள்.  

                                   நிகழ்ச்சி தலைவர் , நிறுவனத்தின் பொறுப்பாளர் அன்புடன் எங்களைப் போன்று புதியதாக சந்தித்தவர்களிடம் பேசி பல்வேறு தகவல்களை கேட்பது என்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக அவருடைய ஆளுமை தன்மையை கண்டு நான் வியந்தேன் . உடனடியாக மதுரை பண்பலையில் நிகழ்ச்சி தயாரிப்பாளரை அழைத்து எங்கள் பள்ளி மாணவர்களின் ரெக்கார்டிங் முடிந்தவுடன் ஒரு  மணி நேரம் லைவ் ப்ரோக்ராம் கொடுங்கள் என்று தெரிவித்தார்கள். எங்களது மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வைஷ்ணவி மற்றும் கோகுல் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு மணி நேரம் லைவ் ப்ரோக்ராம் கொடுத்தார்கள். 

 

சிறந்த ஆளுமை தன்மை :

                                       இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக எடுத்து இருந்தாலும் எங்கள் மாணவர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்க தயாராக இருந்தார்கள் என்பதே உண்மை.  இந்த அருமையான யோசனையை உடனடியாக யோசித்து திருமதி. தாராதேவி அவர்கள் எங்கள் பள்ளிக்கு இந்த அருமையான சந்தர்ப்பத்தை வழங்கினார்கள். இதுவே ஆளுமை தன்மையாகும். 

                                           சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து அதனை செயல்படுத்திய  நிகழ்ச்சி  தலைவர் தாராதேவி அவர்களுக்கும், இந்த நிகழ்வில் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய திரு.  ஜேக்கப்  அவர்களுக்கும், திரு. மாரிமுத்து அவர்களுக்கும், மாணவர்களுடன் இனிமையாக உரையாடிய ஆர்.ஜெ.க்கள் செல்வி.வைஷ்ணவிதேவி அவர்களுக்கும்,திரு.கோகுல்   அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

அன்போடு விசாரித்த ஆளுமை :

                                        நிகழ்ச்சி ஒலிப்பதிவு முடிந்து மாணவர்கள் வானொலி நிலையத்தின் உள்ளே அமர்ந்து சாப்பிட தயாராகும்போது திருமதி.தாராதேவி அவர்கள் மாணவர்களிடத்திலும் ,எங்கள் இடத்திலும் ஆர்வத்துடனும்,அன்புடனும் வந்து மாணவர்களுக்கு மதிய உணவுக்கு ஏதேனும் உதவி வேண்டும் என்று அன்புடன் விசாரித்தார்கள்.மேலும் மாணவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் ஆர்வத்துடன் வந்து மாணவர்களுடன் புகைப்படமும் எருது கொண்டு சென்றார்கள்.

                            அரசு நிறுவனத்தின் மிக பெரிய பொறுப்பில் இருக்க கூடிய நிகழ்ச்சி தலைவர் எங்களுடன் ஆர்வத்துடன் வந்து பேசியது,செயல்பட்டது மறக்க முடியாத நிகழ்வாகும்.மீண்டும் ஒரு முறை திருமதி.தாராதேவி அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன். 

மாணவர்களின் வாழ்வில் மறக்க முடியாத தருணம் :

                                                   இந்நிகழ்வில் மாணவர்கள் வெளியே நான்கு ,நான்கு பேராக சென்று பேச,அதனை அப்போதே மற்ற மாணவர்கள் வானொலியில் கேட்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்திலும்,பரவசத்திலும் ஆழ்த்தியது.இது மாணவர்களிடத்தில் புதிய மாற்றத்தினை,வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. 

 

 நன்றி கலந்த அன்புடன் 

லெ . சொக்கலிங்கம்,

 தலைமையாசிரியர் ,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

 தேவகோட்டை ,

சிவகங்கை மாவட்டம்

 

 

 

No comments:

Post a Comment