Sunday 8 May 2022

 

தொடக்க நிலை மாணவர்களுக்கு அறிவியல் கற்பித்தல்












தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் தொடக்க நிலை மாணவர்களுக்கு எளிய அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

                                      ஆசிரியை முத்துலெட்சுமி   வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  பயிற்சியாளர் அரங்குலவன்   அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை மூன்று முதல் ஐந்து வரை உள்ள மாணவர்களுக்கு செய்து காண்பித்து விளக்கினார்கள்.
ஊசி துளை காமிரா ,மந்திர பெட்டி ,ரேடியோ மீட்டர் போன்றவற்றை  தெளிவாக விளக்கினார் . மாணவர்கள்  ஆர்வமுடன் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்   நன்றி கூறினார்.அ .மு.மு.  அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக
பயிற்சியாளர் அரங்குலவன்  தொடக்க நிலை   மாணவர்களுக்கு  நேரடியாக அறிவியல் சோதனைகளை   விளக்கினார் .


 

வீடியோ :

 https://www.youtube.com/watch?v=9R58oSJOiY0

 https://www.youtube.com/watch?v=MeRYnjByPuA

 

 

 

 

No comments:

Post a Comment