Monday 2 May 2022

 ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வு

 அதிக அன்புள்ளவர்களே  ஆட்டிசம் குழந்தைகள் 

பள்ளி மாணவர்களிடம் இயன் முறை மருத்துவர் பேச்சு 

 





 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆட்டிசம்  தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

                                           பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்..வட்டார கல்வி அலுவலர்கள்  லெட்சுமி தேவி , மாலதி ஆகியோர் மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சி துறையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணவி நதியாவிற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்கக இயன் முறை மருத்துவர் கோகிலா மாணவர்ளிடம் ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில் ,  அறிவும்,அன்பும் நிறைந்து கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்தான் ஆட்டிசம் குழந்தைகள் . அதிகம் அன்புள்ளவர்காளாகவும், நம் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் உள்ளவர்கள் . நாம் பேசுவதை கவனிக்க மாட்டார்கள்.இந்த குறைபாடு ஏழை,பணக்காரர் போன்ற பாகுபாடு இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.இவர்களை கொஞ்சம்,கொஞ்சமாக மேம்படுத்தலாம்.இந்த குறைபாடு உள்ள பெரும்பாலான குழந்தைகள் நம் முகத்தை நேரடியாக பார்க்கமாட்டார்கள்.இவர்களுக்கு நாம் தான் ஆதரவாக இருக்கவேண்டும்.என்று பேசினார். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார் .

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  ஆட்டிசம்  தொடர்பான விழிப்புணர்வு முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க இயன் முறை பயிற்சியாளர் கோகிலா  விளக்கினார். நிகழ்வில் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் லெட்சுமி தேவி, மாலதி ஆகியோர் மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சி துறை போட்டியில்   வெற்றி பெற்ற மாணவி நதியாவிற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

 வீடியோ :

 https://www.youtube.com/watch?v=qUvaAXv373Y

 https://www.youtube.com/watch?v=J12CnRcet94

 

 

No comments:

Post a Comment