உலக புகை பிடித்தல் எதிர்ப்பு தினம்
வேண்டாம் புகையிலை வேண்டாம், புகை உயிருக்கு பகை , புகை பிடித்தால் புற்றுநோய் இலவசம்- தலைப்பில் போட்டிகள்
பற்ற வைக்கிறாய் சிகரெட் துண்டை மனிதா பற்றி எரிகிறது உன் நுரையீரல்
கவிதை வாயிலாக புகைபிடித்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புகை பிடித்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது.
மாணவர்களுக்கு இணையம் வழியாக உலக புகை பிடித்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துலட்சுமி, செல்வ மீனாள் ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். மாணவர்கள் வேண்டாம் புகையிலை வேண்டாம்,புகை உயிருக்கு பகை , புகை பிடித்தால் புற்றுநோய் இலவசம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதைகளை வீடியோவாகவும், ஓவியங்கள் வரைந்தும் அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்றனர்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புகை பிடித்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , செல்வமீனாள் , முத்துலட்சுமி ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி அதிக அளவில் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்தனர்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=caJ-amThXkk
https://www.youtube.com/shorts/Ycd1stNF0j0


No comments:
Post a Comment