Sunday 29 May 2022

 டிஎன்பிஎல்க்கு  சுற்றுலா 

ஆலையை பற்றி அறிந்துகொள்ள அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சிவகாசி கற்பக விநாயகர் பேப்பர்ஸ் திரு.வள்ளியப்பன்,திரு.ரஞ்ஜித் , எங்கள் அண்ணன் திரு.மெய்யப்பன் ஆகியோருக்கு நன்றி! நன்றி !நன்றி !



                             நண்பர்களே கரூர் அருகே உள்ள டிஎன்பிஎல் unit-2 க்கு  ஆலையில் தகவல்களை அறிந்து கொள்வதற்காக சென்றிருந்தோம்.     

                            எங்களை திரு. கோபிநாத் என்பவர் மிகுந்த அன்புடன் ரிசப்ஷன் ஹாலில் வரவேற்றார் .அங்கிருந்த ஜெயராஜ் என்பவர் எங்களை காலை உணவிற்காக அழைத்துச் சென்றார். எங்களுக்காக ஒரு ஏசி ரூம் வழங்கப்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு ஆலையின் உள்ளே சென்றோம்.

                                      காலையில் ஆறு மணிக்கெல்லாம் கரூரில் இருந்து கிளம்பி 8 மணிக்கு தோகைமலை அருகே உள்ள  யூனிட் அடைந்தோம். 

                           அங்கு எங்களை கோபிநாத் என்பவர் ரிசப்ஷனுக்கு செல்லுமாறு சொல்லியிருந்தார் . அங்கிருந்து நாங்கள் ஜெயராஜ் என்பவரை சந்தித்தோம். அவர்கள் எங்களுக்கு ஒரு ஏசி அறை ரூமை கொடுத்து இருந்தார். 

                               ஏ சி  ரூமில் சென்று சிறிது நேரம் வரை ஓய்வு எடுத்து விட்டு, அங்கிருந்து நாங்கள் மீண்டும் ரிசப்ஷன் ஹாலுக்கு வந்து காலை உணவை சாப்பிட்டு  விட்டு கிளம்பினோம் . எங்களுடன் கோபிநாத் அவர்களும்  ஒரு காரில் வந்திருந்தார் .  

                                              நாங்கள் டிஎன்பிஎல் இன் உள்ளே நுழையும் பொழுது என்ட்ரி போடப்பட்டு எங்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது . முதலில் குவாலிட்டி கண்ட்ரோல் பிரிவில்  உள்ள நீதி குமார் என்பவர் அனைத்து இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றார். 

                          பல்பு தயாரிப்பது ஆரம்பித்து , லேயர்  பிரிப்பது முதல் மூன்று லேயர், நான்கு லேயர் , இதை எவ்வாறு அது வடிவமைக்கப்படுகிறது என்பதெல்லாம் மிக தெளிவாக எங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

                           அனைத்து பிரிவுகளையும்  நாங்கள் நன்றாக பார்த்தோம்.  சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மிகத்தெளிவாக எங்களுக்கு அனைத்து இடங்களும் சுற்றி காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது. 

                         அதாவது பல்பில் ஆரம்பித்து தயாரிப்பது












தொடர்பாகவும்,  தொடர்ந்து தண்ணீர் தான் இதற்கான மிக முக்கியமான ஒரு தேவை என்பதையும் எங்களுக்கு வலியுறுத்தி, அதன் தொடர்ச்சியாக லேயர் எவ்வாறு பிரிக்கப்பட்டு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையெல்லாம் தெளிவாக எங்களுக்கு விளக்கினார்கள். 

                                    பிறகு லோடிங் ஆவது எப்படி, தனித்தனியாக பிரஸ் செய்யப்பட்டு, தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆட்டோமேட்டிக்காக இயங்கக் கூடிய அனைத்து விஷயங்களையும் எங்களுக்கு நீதி குமார் அவர்கள் விளக்கினார். 

                          பிறகு திரு. கோபிநாத் அவர்களை சந்தித்தோம். அவர் மார்க்கெட்டிங் DGM  இருக்கக்கூடிய திரு.ஸ்ரீதர் பூமிநாதன் அவர்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார்.  அவர்களிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர்களது உறவினர்கள் தேவகோட்டை, காரைக்குடி சார்ந்தவர்கள் என்பதை எனக்கு விளக்கிக் கூறினார் . பிறகு அவரிடம் இருந்து பிரியா விடை பெற்று கொண்டு மீண்டும் மதிய உணவிற்காக சென்றோம் . 

                       மதிய உணவும் மிக அருமையாக செய்யப்பட்டிருந்தது. நன்றாக எங்களை வரவேற்பு  செய்து நன்றாக எங்களுக்கு உணவு வழங்கினார்கள் . பிறகு ரூம் சென்று  சில மணி நேரங்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் கரூரை  நோக்கி நாங்கள் பயணித்தோம் . 

                                   இந்த நிகழ்வு எங்களுக்கு பேப்பர் தொழில்நுட்பம் தொடர்பாக நிறைய தகவல்களை கற்றுக்கொடுத்தது உடன் அங்கு சுற்றுலா தளம் போன்று  புல்வெளிகளும் ,செடிகளும் பராமரிக்கப்பட்டு வருவதையும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

                   நல்ல தகவல்களை நாங்கள்  கற்றுக் கொள்வதற்கு  ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. 

                         டிஎன்பிஎல் ஆலையினுள்  செல்வதற்கு நாங்கள் முதலில் எங்கள் அண்ணன் திரு. மெய்யப்பன் அவர்களை தொடர்பு கொண்டோம். பிறகு  அவர்களின் மூலமாக வேகுப்பட்டியை  சார்ந்த திரு. வள்ளியப்பன் அவர்களை தொடர்புகொண்டோம்.

                                           சிவகாசி கற்பக விநாயகர் பேப்பர்ஸ் திரு. வள்ளியப்பன் அவர்கள் எங்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்து ஆலையின் உள்ளே  செல்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தார். அவர்களது மகன் ரஞ்சித் அவர்களும் எங்களுக்கும் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்து பல்வேறு  தகவல்களை எடுத்துக் கூறினார். 

                                      அனைவரின் ஒத்துழைப்புடனும் நாங்கள் நல்ல முறையில் இந்த ஆலையை சென்று சுற்றிப் பார்த்ததில்  மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

 நன்றி கலந்த அன்புடன் 

லெ .சொக்கலிங்கம், 

வேகுப்பட்டி

No comments:

Post a Comment