Thursday 5 May 2022

தேவகோட்டை  நடுநிலைப்  பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 

 எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள் வங்கிக்கு செல்லும்போது எனக்கு சொல்லி கொடுக்கிறாள் - பெற்றோர் பெருமிதம்










தேவகோட்டை ​ ​ - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.
                             

                   விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம்  வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.ஆசிரியை முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.மாணவிகளின்   அபிராமி அந்தாதி,திருக்குறள் நடனம் நடைபெற்றது. மாணவியர் கல்விகடவுள் சரஸ்வதியை வணங்க  பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை தொடர்ச்சியாக எட்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.எட்டாம்  வகுப்பு மாணவி நதியா   உறுதி மொழி வாசிக்க எட்டாம்  வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு தீப  ஒளியை  ஏழாம்  வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில்  மாணவி திவ்யஸ்ரீ ஏற்புரை வழங்கினார்.நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள்    நன்றி கூறினார்.விழாவில் மாணவ,மாணவியரின் நாடகம்,திருக்குறள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ ,மாணவியர் பிரியா விடை பெறும் விழாவில்  ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவ ,மாணவிகளிடம் வழங்கினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 
வீடியோ :
 
 https://www.youtube.com/watch?v=915rrayMm7k
https://www.youtube.com/watch?v=PidsTXyD2_o


 
 மேலும் விரிவாக :
 
 
 வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுத்த பள்ளி 

எட்டாம் வகுப்பு மாணவி தேவதர்ஷினி   : இந்த பள்ளியில் நான் சேர்ந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.வங்கி ,வேளாண்மை கல்லூரி,மதுரை வானொலி நிலையம் சென்றது,வானொலி நிலையம் நிகழ்ச்சியில் பங்கேற்றது,திருச்சி அண்ணா கோளரங்க போட்டிகளில் பங்குபெற்றது என அனைத்துமே எனக்கு மறக்க முடியாத நிகழ்வு.நான்கு ஐ.எ .எஸ்.,ஐந்து ஐ.ஆர்.எஸ்.என அனைவரிடமும் கேள்விகள் கேட்டது,அவர்களை சந்தித்தது,பல்வேறு நாடுகளில் இருந்து பல நிலைகளில் உள்ளவர்களுடன் கலந்துரையாடல் செய்தது என அனைத்துமே அருமை.நான் படித்த இந்த பள்ளியில் நல்ல குடிமகளாக உருவாகி மீண்டும் வந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு கொள்வேன் என்று நம்பிக்கையுடன் செல்கின்றேன்.என்று பேசினார்.
 
கலெக்டரிடம் பரிசு பெற்றதை பெருமையாக எண்ணுகிறேன் :

 எட்டாம் வகுப்பு மாணவி நதியா : கொரோனா காலத்தில் எங்களுக்கு குவைத் நாட்டிலிருந்து செஸ் சொல்லி கொடுத்தது, கொரோனா நேரத்தில் எங்கள் வீட்டுக்கே வந்து ஆசிரியர்கள் படிக்க அறிவுரை வழங்கியது,கூகிள் மீட் மூலம் எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தது, அதிகமான போட்டிகளில் பங்கு பெற வைத்து மாவட்ட அளவில் வெற்றி பெற்று சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்றது , இஸ்ரோ சிவன் அவர்கள் எனக்கு பாராட்டு கடிதம் அனுப்பியது என அனைத்துமே மறக்க இயலாத நினைவுகள். நான் வரும்காலத்தில் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் நல்ல நிலைக்கு செல்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது என பேசினார்.
 
 
  எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள் வங்கிக்கு செல்லும்போது எனக்கு சொல்லி கொடுக்கிறாள் - பெற்றோர் பெருமிதம் 
 
நதியாவின் அம்மா பேசும்போது : எட்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் வங்கி ,போஸ்ட் ஆபீஸ் செல்லும்போது எனக்கும்,எனது வீட்டுக்காரருக்கும் பல படிவங்களை பூர்த்தி செய்ய கற்றுக்கொடுத்துள்ளாள்.அனைவரிடமும் பேசி எங்களுக்கு உதவி கரமாக உள்ளாள் .இந்த பள்ளியில் படித்து அதிகமான சான்றிதழ்களையும்,பரிசுகளையும் பெற்றுள்ளாள் என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.
 
 
 

No comments:

Post a Comment