Monday 9 May 2022

  பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கிய தாசில்தார் 

 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழா

 


 



தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை வட்டாட்சியர் ரூபாய் 7,000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார். 

                          தேவகோட்டை வட்டாட்சியர் அந்தோணி ராஜ் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பேசுகையில், " தொடக்க கல்வியில் இருந்தே வாசிப்பை பழக்கமாக்க வேண்டும்.இந்த வயதில் புத்தகங்கள் வாசிப்பது கடினமாக இருக்கும், முயற்சியுடன் படிக்க ஆரம்பித்தால், அது வேறு உலகத்திற்கு உங்களை அழைத்து செல்லும். புத்தகங்கள் தன்னம்பிக்கை , தைரியத்தை வழங்க வல்லவை.சில புத்தகங்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில சமூகத்தை பற்றிய சிந்தனையை உருவாக்கும். நல்லபுத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தால் , வாழ்வில் வெற்றியாளராக திகழலாம்" . இந்த பள்ளியில் மாணவர்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றது.வாழ்த்துகள் என்றார்.நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் கருப்பையா, ஸ்ரீதர் ,வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு தேவகோட்டை வட்டாட்சியர் அந்தோணிராஜ் ரூபாய் 7,000 மதிப்பிலான புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் வழங்கினார்.

                                  

No comments:

Post a Comment