Monday 24 May 2021

 கொரோனாவை கண்டு பயப்படாதீர்கள் ! தைரியமாக எதிர்கொள்ளுங்கள் எளிதில் மீண்டு விடலாம் ! நம்பிக்கை தரும் பெண்மணி 


 

முதலில் பயம் - தைரியம் வந்தது எப்படி?

                           நண்பர்களே ! எனது பெயர் மீனாட்சி. வயது 40. எனது மகன் பெயர் கேஷவ். வயது 16. எங்கள் இருவருக்கும்  உடல் அசதி மற்றும் தொண்டை வலி போன்றவை 08/05/2021 அன்று இருந்தது.08/05/2021 2021 அன்று தனியார் லேப்  மூலமாக  கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டோம்/ 10 /05/2021 அன்று காலை ஏழேகால் மணிக்கு தொலைபேசி வாயிலாக எங்கள் இருவருக்கும் கோரோனோ தோற்று உள்ளது என தெரிவித்து மருத்துவர்களை சந்திக்குமாறு தெரிவித்தார்கள். எங்கள் இருவருக்கும் சிடி ஸ்கேன் செய்து அதன் மூலம் நுரையீரல் பாதிப்பு மிக, மிக குறைவாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதனால் கோரோனோ பரவல் எனக்கும் எனது குடும்பத்துக்கும் பயம் பாதியாக குறைந்தது. 

 சரியான நேரத்தில் பயத்தை போக்கி, நம்பிக்கை தந்த மருத்துவர்கள் :

               மேலும் எங்களது குடும்ப நண்பர் லெ . சொக்கலிங்கம் மூலம் திசைகள் குழுவில் உள்ள மருத்துவர் மாரி ராஜன் (புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவர் )  அவர்கள்  எங்களது சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து பயப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்கள். எங்களுக்கு மிகவும் தைரியப்படுத்தி பேசி  தைரியமாக இருங்கள். உங்களுடைய ஆக்ஸிஜன் லெவலை மட்டும் பல்ஸ்  ஆக்ஸி மீட்டரை கோண்டு ஒரு நாளைக்கு ஒரு தடவை செக் செய்து கொள்ளுங்கள். அது குறையாத வரை எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.  பயப்படவும் தேவையில்லை. எனவே மாத்திரைகளை மட்டும் உட்கொள்ளுங்கள் என்று எங்களுக்கு தைரியப்படுத்தி எங்களுக்கு நல்ல நம்பிக்கை அளித்தார். பிறகு நண்பர் லெ .சொக்கலிங்கம் மூலம் திசைகள் குழுவில் பயணிக்கும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றும் விமல் அவர்களையும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினோம்.அவர்கள் பயப்பட தேவையில்லை என்று கூறி எங்களுக்கு மாத்திரை மற்றும் ஊசிகளை எழுதி அனுப்பினார்கள். 10 நாட்களுக்கு உட்கொள்ளுமாறு தெரிவித்தார்கள். தனி அறையில் இருக்குமாறும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.  இதன்படி பத்து நாட்கள் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டேன் மாத்திரையை மட்டும் எடுத்துக்கொண்டேன். 

 ஊசி ஏன் போடவேண்டும் - சரியான விளக்கம் தந்த மருத்துவர் :

       எனக்கு ஊசி என்றால் பயம் .எனவே அதனை தவிர்த்தேன். ஐந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவரை தொடர்பு கொண்டு தாங்கள்  கூறியதுபோல் மாத்திரை எடுத்துக் கொண்டோம். ஊசி போடவில்லை என தெரிவித்தேன் .அதற்கு அவர்கள் தங்களுக்கு 40 வயது என்பதால் நான் தெரிவித்த ஊசி ஐந்தாவது கண்டிப்பாக போடவேண்டும் என்றும், இதனை போட்டுகொண்டால்    பிற்காலத்தில் எவ்வித பின் விளைவுகளும் வராது எனவும் தெரிவித்தார். நானும் மருத்துவர்  சொன்னது போன்று ஐந்து ஊசிகளை தொடர்ந்து போட்டுக்கொள்வதற்கு முடிவு செய்தோம். 

மருந்து கிடைக்க உதவி செய்த தோழர் ரங்கராஜன் :

     இந்த நேரத்தில் எங்களுக்கு மருத்துவர் கூறிய  இன்ஜெக்ஷன் போடுவதற்கான மருந்து கிடைக்கவில்லை .அதற்காக எனது கணவர் பல இடங்களில் அலைந்து திரிந்து மூன்று ஊசிகளை வாங்கி வந்தார். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அந்த இன்ஜெக்ஷனை வாங்கினோம். ஆனால் ஐந்து ஊசியில் மூன்று போக கடைசி இரண்டு ஊசி  கிடைக்கவில்லை . அதன் பிறகு நண்பர் லெ . சொக்கலிங்கம் வாயிலாக தொடர்பு கொண்டு திருநெல்வேலியில் இருக்கும் மருந்து விற்பனை பிரதிநிதி தோழர் ரங்கராஜன் ( நங்கள் தொடர்பு கொண்டபோது அன்னார் அவர்களின் மகள் கொரோனா பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவமனையில் இருந்தபோதும் எங்களுக்கு சரியான முறையில் தகவல் கொடுத்து உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது - இந்த தகவல் எங்களுக்கு பின்புதான் தெரியும்.தொடர்பு கொள்ளும்போது மருத்துவமனையில் இருப்பதாக மட்டுமே தெரிவித்தார் ) அவர்களின் மூலமாக சென்னை மாதவரத்தில் உள்ள தோழர் சலீம் அவர்களை தொடர்பு கொண்டு எனது அலுவலக  நண்பரின் மூலமாக மாதவரத்தில் இருந்து இன்ஜக்சன் பெற்று எனக்குப் போட்டுக் கொண்டோம். விரைவில் தோழர் ரங்கராஜன் அவர்களின் மகள் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

 கொரோனாவில் இருந்து முற்றிலுமாக மீண்டு உள்ளோம் :

தற்போது  நானும் எனது மகனும் எவ்வித பயமுமின்றி நன்றாக இருக்கின்றோம். 10 /5 /2021 முதல் 24 /05/ 2021 வரை தனிமையில் இருந்து எவ்வித பாதிப்பும் இன்றி முழுமையாக குணம் அடைந்து விட்டோம். மருத்துவரின் அறிவுரையின் படி சரியாக பின்பற்றியாதல் எங்களுக்கு நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டோம். மருத்துவர் மற்றும் நமது தன்னம்பிக்கை , பயம் இல்லாமல் இருந்தால்   முழுமையாக குணமடையலாம் என்பது எனது உணர்வு பூர்வமான நம்பிக்கை.  

 கொரோனா வந்தால் பயப்படாதீர்கள் ! தைரியமாக நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள் !

               எனவே கொரோனா  வந்தால் முதலில் பயம் இல்லாமல் தைரியமாக இருங்கள். தைரியமாக நீங்கள் இருந்தால் கொரோனாவை ஆரம்பத்திலேயே 90 சதவீதம் வெற்றி அடைந்து விடலாம் என்பது எங்களுடைய தனிப்பட்ட கருத்து. இதனை சொல்லும்போது எளிதாக தெரியும்.ஆனால் நிஜத்தில் உங்களுடைய சூழ்நிலையில் அதிக முயற்சி எடுத்துதான் நீங்கள் நம்பிக்கை ஏற்ப்படுத்தி கொள்ளவேண்டும்.அப்போதுதான் மீண்டு வர இயலும்.காரைக்குடி அரசு மருத்துவர் திருமதி.முத்துவடிவு அவர்களும் வாட்சப் வழியாக எங்களுக்கு ஆலோசனைகளை கூறி நம்பிக்கை தந்தார்கள். 

  மனித நேயத்தை வலுப்படுத்திய முகம் தெரியாத   நண்பர்கள் மூலம் கிடைத்த உதவிக்கு நன்றி :

       சரியான  நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை அளித்த மருத்துவர்களுக்கும், உதவி செய்த தோழர்கள் அனைவருக்கும் நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.இக்கட்டான கொரோனா நேரத்தில் முகம் தெரியாத பலரும் எங்களுக்கு உதவி செய்தது மனித நேயத்தை அதிகம் வலுப்படுத்துவதாக  அமைந்துள்ளது என்பதே உண்மை.

 நன்றி கலந்த அன்புடன் 

மீனாட்சி மற்றும் கேசவ்.

பகிர்வு : ஆனந்த் , சென்னை.

                  லெ .சொக்கலிங்கம்,

                   காரைக்குடி .

 

 

 

No comments:

Post a Comment