Monday 17 May 2021

அவசியமின்றி வெளியே வரவேண்டாம் - அருகே மரணத்தை அழைக்கவேண்டாம் 

இணையம் வழியாக  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

கொரோனா ஆத்திசூடி கூறி அசத்திய மாணவி



தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  இணையம் வழியாக  மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் .
                           
                            தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தீவிர தன்மை  அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில்  மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில்  சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள்  முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,முத்துமீனாள் , ஸ்ரீதர் ஆகியோர் முயற்சி  எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கவிதை ,பேச்சு போட்டிகள்  ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் நடத்தினார்கள்.பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ளது.வாட்சப் உள்ள மாணவர்கள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் நதியா,நந்தனா,ஜோயல் ரொனால்ட்,விஜயபாண்டி,கன்னிகா,கனிஷ்கா,தேவதர்ஷினி,மெர்சி,கீர்த்தியா உட்பட பலர் பங்கேற்றனர்.

                              
  ஊரடங்கு நேரத்திலும் தொடர்ந்து ஆசிரியர்கள் , பெற்றோர்கள் உடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் நலன் குறித்தும்,  புத்தகங்கள் படிப்பது குறித்தும் அறிவுறுத்தி வருகிறார்கள்.மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அவர்களுடைய மனநிலைகள் மாறாமல் இருப்பதற்காக இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து ஆசிரியர்கள் எடுத்து வருவதாக தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.இதற்கு மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும்  நல்ல வரவேற்பு உள்ளது.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  இணையம் வழியாக  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள்  முத்துலெட்சுமி, செல்வமீனாள் , முத்துமீனாள் , ஸ்ரீதர் ஆகியோர் செய்து இருந்தனர்.

 

வீடீயோக்கள் 

 https://www.youtube.com/watch?v=xw8EXzZp2CA

 https://www.youtube.com/watch?v=m03B5asRZ1Y

 https://www.youtube.com/watch?v=q04cDIBU7ww

 

 


No comments:

Post a Comment