Monday 7 September 2020

பிரியா விடை பெற்று சென்ற மாணவர்கள் 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிரியா விடை பெற்று பள்ளியை விட்டு சென்றனர்.
                                                நடுநிலைப் பள்ளியான இப்பள்ளியில் எட்டாம் வகுப்பில்  தேர்ச்சி பெற்று மேல் வகுப்புக்கு படிக்க செல்லும்போது ஆண்டுதோறும் பிரியா விடை நிகழ்ச்சி ஒளி ஏற்றுதல் விழாவாக நடைபெறுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்களை மட்டுமே பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார். மாற்று சான்றிதழ்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் , முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்கள் இளம் வயதில் ஒன்றாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் படித்து பல்வேறு ஆளுமைகளான இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,நோபல் பரிசு குழு உறுப்பினர் பலாஸ் , இறையன்பு ஐ.ஏ .எஸ்., நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்.,சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், ஐ.ஏ.எஸ்.,ஐ .பி.எஸ்.,நீதிபதிகள்,ஐ.ஆர்.எஸ்.,என பல துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து,கலந்துரையாடியதோடு,  காவல் நிலையம்,வங்கி ,பாஸ்போர்ட் அலுவலகம்,அஞ்சல் நிலையம்,நீதிமன்றம்,கலை மற்றும்  அறிவியில் கல்லூரி,வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,தோட்டக்கலை பண்ணைக்கு சென்று டிராக்டர் ஒட்டியது,அழகப்பா பல்கலைக்கழகம்   என பல இடங்களுக்கு வாழ்க்கைக்கான அனுபவங்களை பெற களப்பயணம் சென்ற நினைவுகளுடன், பல துறை அறிஞர்களின் பயிற்சிகளையும் மறக்க இயலாமல் பிரியா விடை பெற்று சென்றனர்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிரியா விடை பெற்று பள்ளியை விட்டு சென்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்களை வழங்கினார்.மாற்று சான்றிதழ்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் , முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.







No comments:

Post a Comment