Monday 14 September 2020

 கொரோனா காலத்திலும் மாணவிக்கு வீடு தேடி வந்த உதவி

 கல்வி உதவி தொகை வழங்குதல் 



ஊரடங்கு நேரத்தில் மாணவிக்கு  உதவிய மனித நேயம்

தொடர்ந்து  நான்காம்  ஆண்டு உதவியாக ரூபாய் 11,000 வழங்குதல்

கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 31,500 ரூபாய் வழங்கி அசத்தல்

  தொடர்ந்து நான்காம் ஆண்டாக வீடு தேடி சென்று  கல்விக்கு கை கொடுக்கும்   நாளிதழ்   வாசகி 




 

 

 

தேவகோட்டை -

கடந்த, 2016 டிசம்பர் 9, நாளிதழில் இதழில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி, தனலட்சுமி யின் சாதனையைப் பாராட்டி, நாளிதழ் சார்பாக 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான, ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். உறுதி அளித்ததோடு நின்று விடாமல் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு முன்பாக மதுரை பரவையில் இருந்து தேவகோட்டைக்கு மாணவியின் வீடு தேடி வந்து 9ம் வகுப்புக்கு ரூபாய் நான்கு ஆயிரமும்,கடந்த  ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பள்ளி துவங்கும் முன்பே வீடு தேடி வந்து ரூபாய் நான்கு ஆயிரமும்,தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக கடந்த  ஆண்டும் பள்ளி துவங்கும் முன்பே வீடு தேடி வந்து 11ம் வகுப்புக்கு ரூபாய் 10,500ம் கொடுத்து உள்ளார்கள் .
இந்த ஆண்டு கொரோனா காலத்தில் , ஊரடங்கு நேரத்திலும் வயதான அம்மையார் ஜானகி மனித நேயத்தோடு மாணவியை தொடர்பு கொண்டு 12ம் வகுப்புக்கு   மாணவியின் தயார் வங்கி கணக்குக்கு ரூபாய் 11,000 அனுப்பி உதவி செய்துள்ளார்கள். இது குறித்து ஜானகி கூறியதாவது: பல ஆண்டுகளாக, நாளிதழ்  படித்து வருகிறேன்; நாளிதழின்  தீவிர வாசகி. சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர், லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக்கொண்டு வந்த, நாளிதழுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மாணவியின் உயர் படிப்பு முழுவதுக்கும் உதவி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வரும் ஜானகியின் மிகப்பெரிய உதவிக்கு, ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார், மாணவி தனலட்சுமி.



 பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவி தனலெட்சுமிக்கு மதுரை அருகே உள்ள பரவையை  சார்ந்த ஜானகி அம்மாள் தொடர்ந்து நான்காம்  ஆண்டாக ரூபாய் 11,000 தொகையை  மாணவியின் தாயார் வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்துள்ளார்.இதுவரை 31,500 ரூபாய் வழங்கி உள்ளார்.தொடர்ந்து உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.கொரோனா காலத்திலும் வயதான அம்மையாரின் தொடர்ந்து  உதவி செய்யும் மனித நேயத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்,மாணவியின் தாயார் மீனாள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். ( படம் : பைல் படம் )


 

 

 மேலும் விரிவாக :

 

உறுதியளித்ததை தொடர்ந்து நான்காம்  ஆண்டாக நிறைவேற்றி வரும்  நாளிதழ்  வாசகி

 

நாளிதழ் செய்தி   வாயிலாக மாணவியின் கல்விக்கு தொடர்ந்து உதவி வரும் வாசகி

தேடிவந்த உதவி

தேவகோட்டை - 

கடந்த, 2016 டிசம்பர் 9, நாளிதழில் , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி, தனலட்சுமி யின் சாதனையைப் பாராட்டி 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான, ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். 

 சொன்னதை செய்த வாசகி 

                       உறுதி அளித்ததன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டும்,இந்த ஆண்டும் மதுரை அருகே உள்ள பறவை என்கிற ஊரிலிருந்து தேவகோட்டையில் உள்ள மாணவியின் குடிசை வீட்டிற்கே தேடிவந்து கடந்த ஆண்டு 11ம் வகுப்பு படிப்பதற்கான  ரூபாய் பத்தாயிரத்து ஐநூறு பணத்தை கொடுத்தனர். 

கொரோனா காலத்திலும் வீடு தேடி வந்த உதவி :

               இந்த ஆண்டு கொரோனா காலத்தில் , ஊரடங்கு நேரத்திலும் வயதான அம்மையார் ஜானகி மனித நேயத்தோடு மாணவியை தொடர்பு கொண்டு வங்கி வழியாக மாணவியின் தயார் வங்கி கணக்குக்கு ரூபாய் 11,000 அனுப்பி உதவி செய்துள்ளார்கள்

இந்த நிகழ்வு குறித்து

 மாணவி தனலெட்சுமியின் தாயார் மீனாள் கூறும்போது , 

மதுரையில் இருந்து சொன்னதை செய்யும் வண்ணம் வயதான நிலையிலும் தொடர்ந்து ஆண்டு தோறும் எங்களது வீடு தேடி வந்து ஜானகி அம்மாள் எனது மகளின் படிப்புக்கு உதவி செய்வது எனக்கு மனிதர்களின் ,மீது அதிக நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.சொல்லி விட்டு சென்று விடாமல் இவ்வளவு தொலைவு வந்து அவர்கள் உதவி செய்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.கண்டிப்பாக எனது மகள் நல்ல நிலைமைக்கு வருவாள்.வீட்டு வேலை பார்த்துவரும் நான் எப்படி எனது மகளை படிக்க வைக்கப்போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். கொரோனா காலத்தில், ஊரடங்கு நேரத்தில் எங்களை தொடர்பு கொண்டு எனது மகளின் வாங்கி கணக்குக்கு படிப்புக்காக பணம் அனுப்பி உதவியுள்ளது எங்களுக்கு மிக பெரிய உதவி ஆகும்.நன்றாக படிக்கும் எனது மகளுக்கு இப்பள்ளியின் மூலமாகவும்,நாளிதழின் வாயிலாகவும் படிப்பு உதவி தொகை கிடைத்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,உதவி செய்த ஜானகி அம்மாளுக்கும் ,அவர்களது மகன் கார்த்திகேயன் அவர்களுக்கும் ,நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

 நம்ப முடியவில்லை .அதிசயமாக ,ஆச்சிரியமாக உள்ளது -மாணவி தனலெட்சுமி

                      மாணவி தனலெட்சுமி கூறும்போது : என்னால் நம்ப முடியவில்லை.எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த ஆண்டு தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு , மதுரையில் இருந்து ஜானகி அம்மாள்எனது மேற்படிப்புக்கு உதவி செய்யநேரில் வருவதாக சொன்னார்.எனக்கு பெரிய ஆச்சிரியம். கடந்த ஆண்டும் இதே போன்று மதுரையில் இருந்து வந்து உதவி செய்தனர்.அதே போன்று இந்த ஆண்டும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி  எனக்கு உதவி செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.நாளிதழ் வழியாக எனது திறமைகள் வெளிவந்தது.அதன் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்துள்ள இந்த உதவியை நான் நன்றாக பயன்படுத்தி கொண்டு எனது லட்சியமான IPS ஆவேன்.எனது தந்தை கல் உடைக்கும் வேலை பார்த்தும்,எனது தாயார் வீட்டு வேலை பார்த்தும் என்னை படிக்க வைக்க சிரமப்படும்போதும் எங்கள் பள்ளியின் வாயிலாக எனக்கு கிடைத்துள்ள இந்த உதவிக்கு நாளிதழுக்கும்  ,பள்ளி தலைமை ஆசிரியர்க்கும்,ஜானகி அம்மாள் குடும்பத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

      தொடர்ந்து  கல்விக்கு கை கொடுத்து வரும் ஜானகி அம்மாள் 

                  ஜானகி அம்மாள்  கூறும்போது : நாங்கள் முன்பு வந்தபோதே மாணவி தனலெட்சுமியின் கல்விக்கு உதவி செய்வதாக தெரிவித்து உறுதி அளித்து இருந்தோம்.அதே போல் 2017ம் ஆண்டு 9ம் வகுப்புக்கான படிப்பு உதவி தொகை ரூபாய் 4,000 கொடுத்துள்ளோம்.கடந்த ஆண்டும் 10ம் வகுப்புக்கு படிப்பு உதவி தொகையாக ரூபாய் 4,000 கொடுத்துள்ளோம். தொடர்ந்து மூன்றாம் வருடமாக 11ம் வகுப்பு படிப்பு உதவி தொகை ரூபாய் 10,500 கொடுத்துள்ளோம்.இந்த ஆண்டு கொரோனா காலமாக இருப்பதால் மாணவியை நேரில் சந்திக்க இயலவில்லை.இருந்த போதிலும் இந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையின் நிலை கருதி வங்கி வழியாக அவரது படிப்பு உதவி தொகையாக ரூபாய் 11,000 அனுப்பி இந்த உதவியை செய்துள்ளோம்.மாணவியின் வீடு குடிசை வீடாக உள்ளது.இந்த மாணவி தேசிய திறன் வழி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிந்தோம்.மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.தொடர்ந்து மாணவியின் மேல்படிப்பு தொகை முழுவதையும் ஏற்று கொள்கிறோம். பல ஆண்டுகளாக, நாளிதழை தொடர்ந்து படித்து வருகிறேன்; நாளிதழின்  தீவிர வாசகி. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர், லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக்கொண்டு வந்த, நாளிதழுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

மொத்தத்தில் பத்திரிக்கை  மூலமாக அங்கு ஒரு புதிய உறவு ஏற்பட்டது.பத்திரிக்கை மாணவியின் கல்விக்கும் கை கொடுத்ததுடன் ,இணைபிரியா உறவையும் ஏற்படுத்தியது.


                              எங்கோ பிறந்து,எங்கோ படித்து,எங்கோ வாழ்க்கை நடத்தினாலும் நாளிதழ்  வாயிலாக பள்ளியை தேடி கண்டுபிடித்து மாணவிக்கு உதவிய நாளிதழின் வாசகிக்கு அன்பை,நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும்.இவர்கள் அதிகமாக புத்தகங்களை,பத்திரிக்கைகளை மட்டுமே வாசித்து வருகின்றனர்.வாட்சப்,மெயில்,முகநூல் போன்றவை பார்ப்பது கிடையாதாம்.பத்திரிக்கை,புத்தகங்கள் மட்டுமே பெரும்பாலும் படித்து வருகின்றனர்.அந்த வடிவத்தில் நாளிதழ்  படித்து இவ்வளவு தூரம் வந்தது மிக பெரிய விஷயம்.இது போன்று நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


             இன்று உள்ள பர பரப்பான வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயத்தை பாராட்டி கடிதம் எழுதுவதே மிக பெரிய விஷயம்.அப்படியே எழுதினாலும் அதில் ஏதேனும் பிரதி பலன் உள்ளதா என்று பார்ப்பவர்களே அதிகமான சூழ்நிலையில்,எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சுமார் 120+120 ஆக மொத்தம் 240 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து பள்ளியில் அனுமதி பெற்று மாணவியை சந்தித்து பாராட்டியதுடன் , மேல் படிப்பிற்கான முழு கல்வி தொகையையும் ஏற்று கொண்டு செய்வதாக  கூறியுள்ளது உண்மையில் வரலாற்றில் பதிய கூடிய நிகழ்வாகும் .கொரோனா காலத்திலும் தொடர்ந்து உதவி செய்யும் அம்மையாரின் செயல்பாடு பாராட்டுக்குரியது ஆகும்.

  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் 

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :தொடர்ந்து நான்காம்  ஆண்டாக நேற்று இரவு ஜானகி அம்மையாரின் மகன் கார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு மாணவிக்கு உதவி தொகை வழங்க வருவதாக சொன்னார்கள்.கொரோனா காலமாக இருப்பதால் மாணவியின் வங்கி  கணக்குக்கு  கல்வி உதவி தொகையை அனுப்புவதாக கூறினார்கள்.அதன்படி மாணவியின் தாயாரின் வங்கி கணக்குக்கு   கல்வி உதவி தொகை அனுப்பட்டுள்ளது.சிலர் உதவி செய்வதாக சொல்லி விட்டு  அத்தோடு சென்று விடுவார்கள்.ஆனால் தொடர்ந்து நான்காம்  ஆண்டாக மதுரையிலிருந்து தேவகோட்டை தேடி வந்து உதவி செய்த ஜானகி அம்மாளுக்கும் ,கார்த்திகேயனுக்கும்,நாளிதழுக்கும்  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment