Monday 21 September 2020

 அகில இந்திய வானொலியில் தொடர்ந்து 18 வாரங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சாதனை செய்த பள்ளி 

 பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 











 தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு மணித்துளி ஆளுமை வளர்ச்சிக்காண போட்டி நிகழ்ச்சி தொடர்ந்து 18 வாரங்கள் அகில இந்திய வானொலியான மதுரை பண்பலை வானொலி  மற்றும் கொடைக்கானல் பண்பலை வானொலியிலும் ஒலிபரப்பானது . தொடர்ந்து நான்கரை மாதங்கள் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பானதில் பங்கேற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

 

                         மாணவர்களின் ஆளுமை திறனை அதிகமாக வளர்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய வானொலியில் ஒரு மணித்துளி நிகழ்ச்சி தொடர்ந்து 18 வாரங்கள் கொடைக்கானல் மற்றும் மதுரை பண்பலையில் ஒலிபரப்பானது. நிகழ்ச்சியை மதுரை வானொலி நிகழ்ச்சி பொறுப்பாளர் ராஜாராம் என்ற சவித்ரா முழுமையாக நடத்தி ஒலிப்பதிவு செய்தார். வானொலி நிலைய உதவியாளர் ஜெயச்சந்திரன் ஒலிப்பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மாணவர்கள் ஆர்வமுடன் இப்போட்டியில் பங்கேற்றனர். மாணவர்களின் பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல், கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போட்டியே ஒரு மணித்துளி போட்டியாகும். இந்தப் போட்டியானது தொடர்ந்து 18 வாரங்கள் கொரோனா  நேரத்திலும் மக்களை சென்றடையும் வகையில் ஒலிபரப்பனாது  குறிப்பிடத்தக்கது. தமிழக அளவில் நடுநிலைப்பள்ளியில் இந்நிகழ்வு இப்பள்ளியில் தான் முதலாவதாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து நான்கரை மாதங்கள் ஒலிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற  மாணவர்  ஐயப்பன் முதல் பரிசாக ரூபாய் ஆயிரமும், இரண்டாம் பரிசாக மாணவி கீர்த்தியா ரூபாய்  300ம்,  மாணவி நதியா  மூன்றாம் பரிசாக ரூபாய் 200ம்  பெற்றனர்.  கடந்த பிப்ரவரி மாதமே இந்நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து 18 வாரங்கள் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சியைக் கேட்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள். அவர்களது பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் குரல் வானொலியில் கேட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர்.நிகழ்ச்சியின் இடையில் நல்ல பாடல்கைளை மாணவர்கள் சிந்திக்கும் வண்ணம் வடிவமைத்து கொடுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு மணித்துளி ஆளுமை வளர்ச்சி காண போட்டி அகில இந்திய மதுரை பண்பலை வானொலி மற்றும்  கொடைக்கானல் பண்பலை வானொலியில் தொடர்ந்து 18 வாரங்கள் ஒலிப்பரப்பானது. நிகழ்ச்சியில்  பங்கேற்ற மாணவர்கள் அய்யப்பன்,கீர்த்தியா,சிரேகா , ஜோயல் ரொனால்ட்,ஈஸ்வரன் ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து நான்கரை மாதங்கள் இந்நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானதற்கு பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார்கள்.

 

 நிகழ்ச்சியில் பங்கேற்றது மற்றும் கேட்டது தொடர்பாக மாணவர்களின் கருத்துக்களை வீடியோக்களில் காணலாம் :

 https://www.youtube.com/watch?v=QECyR8UA80c

 https://www.youtube.com/watch?v=-2KqynaAc2w

 https://www.youtube.com/watch?v=cc8ypWQrYn4

https://www.youtube.com/watch?v=BssW8RC4P8M

 https://www.youtube.com/watch?v=4J7VjnokLHk

 

 

 

 

 

 

No comments:

Post a Comment