Monday 13 July 2020

நெருக்கடியான நிலையிலும் போராடி பணத்தை பெற்று கொடுத்த ஆசிரியர் கூட்டணிக்கு நன்றி!நன்றி!நன்றி!




                      தோழர்களுக்கு வணக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பென்சன் திட்டத்தை நீக்க கோரி தலைநகர் டெல்லியில் நடைபெற இருந்த  பேரணியில் கலந்து கொள்ள நான் சார்த்திருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழியாக செல்வதற்கு எனது பெயரை பதிவு செய்திருந்தேன். டெல்லி சென்று வர முன் தொகையாக  பணமும் செலுத்தி இருந்தேன். எனது தந்தையும் உடன் அழைத்துச் செல்வதாக  இருந்தேன். பேரணி செல்வதற்கு முன்பாக வட்டார , மாவட்ட நிர்வாகம் வழியாக மாநில அமைப்புக்கு பயணம் செய்வதற்கு ஏதுவாக முன்பணம் செலுத்தி இருந்தேன். பயணம் குறித்து மேலும் சில தகவல்களை மாநில தலைவர் , மாநில செயலாளர், மாநில துணைத்தலைவர் ஆகியோரிடமும் கலந்துரையாடி பல்வேறு திட்டமிடல்களை செய்து கொண்டேன்.  டெல்லி வரை   எனது தந்தையுடன் செல்வதனால் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஊரையும் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம் என்று எண்ணி திட்டமிடலின் போது மாநில தலைவர்  தோழர் மணிமேகலை அவர்கள் எனக்கு சில தகவல்களை கூறி உதவி செய்தார்கள். திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அவர்களும் இது போன்று திட்டமிடல் செய்வதாகவும், அவர்களை என்னைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்கள். நானும் அவர்களை தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்களை பெற்றுக் கொண்டு திட்டமிடல் செய்து வந்தோம். பேரணிக்கு டெல்லி வரை செல்வது இதுவே முதல் முறை என்பதால் பல தோழர்கள் இடமும் பல்வேறு தகவல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டும் பெற்றுக் கொண்டும் இருந்தேன். பேரணி நாட்கள் நெருங்க நெருங்க கொரோனாவின்  கொடூரம் அதிகமாக இருந்தது. சிபிஎஸ் யை விட கொரோனோவின்  கொடூரம் ஒன்றும் பெரிதல்ல என்று பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.  காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்வதற்கு ஒன்றரை மாதம் முன்பாகவே ட்ரெயின் டிக்கெட் புக் செய்து விட்டேன். சென்னையிலிருந்து டெல்லி செல்வதாக திட்டம். மீண்டும் டெல்லியில் இருந்து மதுரை வரும் வரை மேக் மை ட்ரிப் வழியாக விமானத்தில்  ரிட்டன் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். டெல்லியிலும் அறை வாடகைக்கு முன்பணம் செலுத்தி இருந்தேன்.இந்த நேரத்தில் கொரோனோவின் கொடூரம் அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் டெல்லி திட்டம் கைவிடப்பட்டது என்று பரவலான பேச்சு வந்து கொண்டிருந்தது.  அப்போது ட்ரெயின் டிக்கெட்டையும் கேன்சல் செய்ய வேண்டும், விமான டிக்கெட்டையும் கேன்சல் செய்ய வேண்டும் என்று இரண்டு முக்கிய கட்டங்கள் இருந்தது. அது போக டெல்லியில் புக் செய்து இருந்த அறையையும் கேன்சல் செய்ய வேண்டும். பேரணி நடக்குமா நடக்காதா என்று பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது .இதற்கிடையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்ப்பதற்காக மூன்று விதங்களில் முறையாக  டிக்கெட்டுகளும் பதிவு செய்து வைத்திருந்தேன். அதற்கும் பணம் செலுத்தி இருந்தேன். ஆனால் அதனை கேன்சல் செய்தால் பணம் திரும்பி வராது என்கிற தகவலையும் அறிந்திருந்தேன்.எனக்கு பேரணியில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆர்வம் அதிகம் இருந்தது.எனது தந்தையோ, கொரோனா அதிகம் பாதிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள்.எனவே நான் வரவில்லை என்று கூறினார்.அவரை சரி செய்து , நம்பிக்கை கூறி ,வாருங்கள் பார்த்து கொள்ளலாம் என்று கூறி தைரியப்படுத்தி வைத்து இருந்தேன்.( இது போன்று கொரனோ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியாது என்பது உண்மை.) எனது மனைவியோ, தயவு செய்து டிக்கெட்டை கேன்சல் செய்து விடுங்கள்.பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறினார்.நானும் திருநெல்வேலி பொருளாளர் தோழர் பால்ராஜுடன் பேசும்போது,அதெல்லாம் ஒன்றும் செய்யாது ,நீங்கள் தைரியரமாக வாருங்கள் என்று கூறினார்கள்.நானும் செல்வது என்று முடிவு செய்துவிட்டோம்.சென்று வந்து விடுவோம் என்று நினைத்தேன்.ஆனால் நாள் ஆக ,ஆக தகவல்கள் சுமாராக வந்ததது.

                            இதுபோன்ற சூழ்நிலையில் ட்ரெயின் டிக்கெட் கேன்சல் செய்வதற்கு சில நாட்களே இருந்த நிலையில் SFTI முக்கிய பதவியில் இருக்கும் தோழர் ராஜேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு பேரணி தொடர்பாக சில தகவல்களை கேட்டிருந்தேன். மாலை 7 மணி அளவில் தோழர்  அவர்களுக்கு தொடர்பு கொண்டேன். இரவு 9.50 மணி அளவில் தோழர் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது .சொக்கலிங்கம் நீங்கள்தானே, டெல்லியில் பேரணி கேன்சல் செய்யப்பட்டு விட்டது. எனவே உங்களது டிக்கெட்டுகளை நீங்கள் கேன்சல் செய்து கொள்ளுங்கள் என்று சரியான முறையில் எனக்கு மீண்டும் தகவல் கொடுத்து உதவினார்கள்.

                       தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மிகச் சிறப்பான ஒரு விஷயம் என்னவெனில், அடிப்படை உறுப்பினர் முதல் அனைவரும் அனைத்து பொறுப்புகளில்  இருப்பவர்களிடமும் குறிப்பாக  வட்டாரம் ,மாவட்டம், மாநிலம் என்று அனைத்து பொறுப்புகளிலும்  இருப்பவர்களிடமும்  தகவல்களை நாம் எளிதாக பேசி பெற்றுக் கொள்ளலாம் என்கிற சுதந்திரம் இருந்து வருகிறது.இந்த முற்போக்கு சிந்தனை உடைய இயக்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதன் காரணமாகத்தான் அனைவரிடம் பழகுவதற்கான  வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கலந்து பேசி முன் பதிவு செய்வதற்காக நாங்கள் கொடுத்த முன்பண தொகையில் சொற்பமான தொகையை மட்டுமே கழித்து கொண்டு மீதமுள்ள தொகையை அப்படியே எங்கள் கணக்கில் வரவு வைத்து உள்ளனர். எனக்கும் எனது தந்தைக்கும் சேர்த்து  மீதமுள்ள தொகையை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக 7/7 /2020 அன்று எனது கணக்கில் தோழர் புரட்சி தம்பி அவர்களால் வர வைக்கப்பட்டது.மிக சரியான முறையில் திட்டமிடல் செய்து நாங்கள் கொடுத்த காசையும் திருப்பிக் கொடுத்து உதவி செய்த வட்டார ,மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கு இந்த நேரத்தில் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ஒரு மிகப்பெரிய பேரணியை ஏற்பாடுகள் செய்து கொரனோ  காரணமாக அதில் தொய்வு ஏற்பட்ட போதும் சரியான திட்டமிடல் செய்து எங்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.எனக்கும் ஜனாதிபதி மாளிகை செல்வதற்கான டிக்கெட், நான் தங்க ஏற்பாடு செய்த அறை வாடகை, ட்ரெயின் டிக்கெட் கேன்சல் செய்த தொகை,விமான டிக்கெட் கேன்சல் செய்தாலும் பணம் வராது என்கிற தகவல் போன்றவை வருத்தகமாக இருந்தாலும் , தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் , நானே மறந்து இருந்த நேரத்தில் சரியான முறையில் தொடர்பு கொண்டு செலுத்திய முன்பணத்தை திருப்பி கொடுத்தது மிகுந்த சந்தோசமாக இருந்தது. மிக அன்பான முறையில் என்னிடம் பல்வேறு தகவல்களை தோழமையுடன் எடுத்துக்கூறிய எங்களது வட்டார செயலாளர் தோழர் அதிசயராஜ்,  மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் புரட்சி தம்பி, மாவட்ட செயலாளர் தோழர் முத்துப்பாண்டியன், மாநில செயலாளர் தோழர் மயில் ,மாநில தலைவர் தோழர்  மணிமேகலை , திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் மற்றும் செயலாளர் பால்ராஜ் ஆகிய அனைவருக்குமே  இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 

 தோழமையுடன் ,
லெ . சொக்கலிங்கம்,
TNPTF உறுப்பினர்,
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம்.
8056240653



 ஆகியோருக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்

No comments:

Post a Comment