Saturday 11 July 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

 தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

 I am really proud and happy to take part in a programme  at your school. The program was neatly arranged. The cultural programme,  legal awareness play conducted by the students as exposed  their intelligence. I thank the Headmaster and other staff members.

M P.முருகன் ,
சட்ட பணிக்குழுவின் தலைவர் ,
நீதிபதி,
சார்பு நீதிமன்றம்,
தேவகோட்டை.





                                                     தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ள வரிகள் ஆகும்.

நீதிபதி அவர்களுடன் அருமையான சந்திப்பு :
 

                                தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்களுடனான சந்திப்பு அருமையானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து எங்கள் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது .முதலில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு கிருபாகரன் மதுரம் அவர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் சார்பு நீதிமன்றத்தில் தற்போதைய நீதிபதி முருகன் அவர்கள் பங்கேற்றார்கள். அவர்களுடன் நீதிமன்ற நீதிபதி மோகனா, அரசு வழக்கறிஞர் சொர்ணலிங்கம் ஆகியோரும் பங்கு கொண்டனர். சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்கள் மிகவும் அன்புடன் மாணவர்களிடம் பேசினார்கள்.

 என்னை பிரமிப்பில் ஆழ்த்திய பள்ளி -நீதிபதி வியப்பு :
                                எங்கள் பள்ளியில் நுழைந்து பள்ளி பதிவேடுகளை பார்த்துவிட்டு மாணவர்களிடம் பேசுகையில், என்னை பிரமிப்பில் ஆழ்த்திய பள்ளி உங்கள் பள்ளி.நீங்கள் இமய மலைக்குச் சென்றால் எப்படி உணர்வீர்கள் பிரமிப்பாக  இருக்கும். அதுபோலவே இந்த பள்ளிக்கு வந்ததும் எனக்கு பிரமிப்பாக இருந்தது. உங்கள் பள்ளிக்கு வாழ்த்துக்கள். வாழ்க்கையில் பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும் என்று வாழ்த்தினார்கள். கதை சொல்வதில் மிகவும் ஆர்வமானவர் நீதிபதி அவர்கள். எளிமையான கதையின் மூலம் மாணவர்களின் மனதில் பல்வேறு தகவல்களை  விதைத்தார்கள். 


கதைகளின் மூலம் மாணவர்களுக்கு சட்டத்தை புரிய வைத்த நீதிபதி :

                 குரு - சிஷ்யன் கதையை கூறினார்கள். மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம் என்று விவரித்தார்கள். சட்டம் என்பது யானையின் அங்குசம் போன்றது என்று மிகத் தெளிவாக கூறினார்கள்.குற்றம் என்ற புற்றுக்குள் கையை விட்டால் சட்டம் என்கிற பாம்பு கடிக்கும் என்கிற ஜப்பானிய பழமொழியை தெளிவாக விளக்கினார்கள் . பாலை அழியாத நிலைக்கு மாற்றலாம் என்கிற தகவலையும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு என்பதையும், குற்றம் நடப்பதற்கு முன்பே நல்வழிப்படுத்துவது சட்டப்பணி குழுவின் பணி என்று விளக்கினார்கள். சட்டம் என்பது உத்தரவு என்றும், ஆணவத்தால் ஆடினால் அது அழிவை  தரும் என்றும், ஒழுக்கத்துடன் திறமையை வெளிப்படுத்துங்கள் என்று மாணவர்களை அன்போடு கேட்டுக் கொண்டார்கள். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் நீதிபதி முருகன் அவர்கள் பல்வேறு பதில்களை கொடுத்தார்கள். இந்த நிகழ்வு எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாகும். 

பல்வேறு பணி சூழல்களுக்கு இடையில் நிகழ்வுக்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்த நீதிபதி :

          மீண்டும் செப்டம்பர் மாதத்தில் விண்வெளி வீராங்கனையாக பயிற்சி பெற்றுள்ள உதயகீர்த்திகா அவர்கள் பள்ளிக்கு வந்த போது, நீதிபதி முருகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். பல்வேறு பணி சூழல்களுக்கு இடையில் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் நீண்ட நேரம் இருந்து, செல்வி உதயகீர்த்திகாவின் தகவல்களையும் கேட்டுக்கொண்டு,  பாராட்டு தெரிவித்து பள்ளியில் இருந்து கிளம்பி சென்றார்கள். அப்பொழுதும் மாணவர்களுக்கு பொறுமையாக புரியும் வகையில் கதை கூறினார்கள். அந்த கதையின் மூலமாக மாணவர்களுக்கு பல்வேறு விவரங்களை தெளிவுபடுத்தினார்கள். பிறகும்  அவர்களுடனான எனது தொடர்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 

நீதிமன்றத்தில் உலக மகளிர் தினத்தில் பங்கேற்ற நிகழ்வு :

                சமீபத்தில் கூட உலக மகளிர் தினத்தில் நீதிபதி முருகன் அவர்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்களையும், என்னையும் நீதிமன்றத்திற்கு வரச்சொல்லி அந்த நிகழ்வில் பங்கேற்க செய்து எங்களை பற்றி நல்ல முறையில் எடுத்துக் கூறினார்கள். நீதிபதி முருகன்  அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் எங்கள் பள்ளிக்கு வந்ததும், தொடர்ந்து எங்களை பாராட்டும் விதமாக பல்வேறு தகவல்களை கூறிக் கொண்டிருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது. 

நீதிபதியிடம் இயல்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்ற மாணவர்கள் :

                 நீதிமன்றத்திற்குள் செல்வதற்கே பலர் பலமுறை யோசிக்கும் சூழ்நிலையில், நீதிபதி அவர்களே பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் உரையாடி நல்ல  தகவலை எடுத்துரைப்பது என்பது மிகப்பெரிய நிகழ்வாக மாணவர்களுக்கு அமைந்துள்ளது. மிக இயல்பாக நீதிபதி அவர்களின் அருகில் சென்று இளம் வயது மாணவர்கள் கேள்விகளை கேட்டு பதிலை பெறுகிறார்கள்.  இதன் மூலமாக நீதிபதி அவர்களும் பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இந்த நிகழ்வுகள் மாணவர்கள் மனதிலும், ஆசிரியர்களுக்கும்  மறக்கமுடியாத நிகழ்வாக பதியப்பட்டுள்ளது.

நன்றிகள் பல :

              இந்த அருமையான வாய்ப்பை அளித்துள்ள நீதிபதி அவர்களுக்கும், தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருந்து பல்வேறு தகவல்களை  வழங்குவதற்கும்  நீதிபதி முருகன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதிமன்ற அலுவலர்கள்  அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 
  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,   சிவகங்கை மாவட்டம்.   

 8056240653 


 
சட்ட விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிதிமன்ற  நீதிபதி முருகன் பேசுகையில் ,
 என்னை பிரமிப்பில் ஆழ்த்திய பள்ளி 
                      நீங்கள் இமயமலைக்கு சென்றால் எப்படி உணர்வீர்கள் ,பிரமிப்பாக இருக்கும்.அதுபோலவே இந்த பள்ளிக்கு வந்ததும் எனக்கு பிரமிப்பாக இருந்தது.உங்கள் பள்ளிக்கு வாழ்த்துக்கள்.வாழ்க்கையில் பெரிய பதவிகள் உங்களை தேடி வரும்.

 குரு - சிசியன் கதை
                       ஒரு குரு இருந்தார்.அவருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர்.குருவும்,சீடர்களும் தனி,தனியாக குதிரையில் சென்றனர்.அப்போது குருவின் தலைப்பாகை கீழே விழுந்து விட்டது.அதனை சீடர்கள் எடுக்கவில்லை.நீண்ட தூரம் சென்ற பிறகு குரு கேட்டதற்கு சீடர்கள் அய்யா ,நீங்கள் எடுக்க சொல்லவில்லை அதனால் நாங்கள் எடுக்கவில்லை என்று சொன்னார்கள்.பிறகு குறு கீழே எது விழுந்தாலும் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.உடனே சீடர்கள் இருவரும் கீழே விழுந்த சாணத்தையும் எடுத்து சென்றனர்.குரு மீண்டும் அவர்களை கடிந்து கொண்டு ,எதனை எடுக்க வேண்டும்,எதனை எடுக்க கூடாது என்று ஒரு லிஸ்ட் கொடுத்தார்.ஒரு நாள் குதிரையில் செல்லும்போது குரு கீழே விழுந்து விட்டார்.பின்னால் வந்த சீடர்கள் குருவை இறங்கி பார்த்தனர்.குரு கொடுத்த லிஸ்டை பார்த்தனர்.அதனில் குருவை தூக்க வேண்டும் என்று இல்லாததால் கிளம்பி சென்று விட்டனர்.இது போன்று சிசியர்களாக நீங்கள் இருக்கமாட்டிர்கள் என்று எனக்கு தெரியும் .இப்படி குரு -சீடர்களாக இல்லாமல் உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரும் ,உங்களையும் போல் நல்ல அறிவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம்
                     நல்லவர்கள் யாருக்குமே சட்டம் தேவையில்லை.நீங்கள் தவறு செய்யும்போது உங்கள் மனசாட்சி சொல்லும் ,நீங்கள் செய்வது தவறுதான் என்று.அப்போதே அதனை திருத்தி கொண்டால் நீங்கள் சட்டம் பற்றி கவலைப்பட தேவையில்லை.மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம் ஆகும்.நாம் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும்.

சட்டம் என்பது யானையின் அங்குசம் போன்றது 
                        யானை அனைவருக்கும் தெரியும்.யானை எவ்வாறு அதன் அங்குசத்தை பயன்படுத்துகிறதோ அது போன்று நாமும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும்,சிகப்பு விளக்கு எறிந்தால் போக கூடாது என்கிற சுய கட்டுப்பாடு வரவேண்டும்.அப்போதுதான் நாம் மனிதர்களாக,அறிவு உடையவர்களாக விளங்குவோம்.



 குற்றம் என்ற புற்றுக்குள் கையை விட்டால் சட்டம் என்கிற பாம்பு கடிக்கும் - ஜப்பானிய பழமொழி
                       தவறு செய்யாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.தவறு செய்து விட்டால் சட்டம் தண்டிக்கும்.குற்றம் செய்ய சிந்திப்பது தவறு.அதனை விட குற்றம் செய்ய முயற்சிப்பது அதனை விட குற்றம் ஆகும்.ஜெயில் வாழ்க்கை என்பது மிகவும் நம்மை பாதிப்பது ஆகும்.நல்ல சாப்பாடு,நல்ல தண்ணீர் எல்லாம் கிடைக்கும்.ஆனால் நீங்கள் மட்டுமே தனி அறையில் இருக்க வேண்டும்.செல் போன் , வாட்சப்,பேஸ்புக் எதுவுமே பார்க்கமுடியாது.மிகவும் தண்டனை என்பது அதுதான்.குற்றம் செய்தால்தான் தண்டனை உண்டு என்பதை ஜப்பானிய பழமொழி கொண்டு விளக்கினார்.
 

பாலை அழியாத நிலைக்கு மாற்றலாம் 
                         ஒரு கிண்ணத்தில் பால் வைத்து மறுநாள் பார்த்தால் என்னவாகும்? கெட்டுப்போய் விடும்.இந்த பாலை அழியாத நிலைக்கு மாற்றலாம்.பாலை காய்ச்சி,ஆற வைத்து மோர் ஊற்றி அதனை தயிராக மாற்றி ,வெண்ணெய் ஆக்கி,பின்னர் உருவம் மாறி ,மாறி கடைசியில் நெய்யாக மாற்றப்படுகிறது.நெய் - இதற்கு அழிவே கிடையாது.அழியாத நெய் போல் உடல் அழிந்தாலும் ஆன்மா என்ற அழியாத நிலைக்கு செல்ல நல்ல புத்தியோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை உண்டு 
                               தூக்கணாங்குருவி  பறவை பெரிய கட்டிட கலை வல்லுனர் .தலைக்கீழாக தொங்கினாலும் ,கீழே விழாமல் உள்ளே மாடிமேல் ,மாடி போல் கூட்டை காட்டும் ஆற்றல் படைத்தது.சிலந்தி அது போன்று யாரும் நெருங்க இயலாத வலை பின்னக்கூடியது .பொதுவாக திரவம் மேலே இருந்து கீழே ஊற்றினால் உடனே வந்து விடும்.ஆனால் தேன் கூட்டினை கட்டும் தேனீ  அந்தரத்தில் நீரை சேமித்து வைக்கும் ஆற்றல் பெற்றது.தேக்கு மரம் மிகவும் சக்தி வாய்ந்தது.அதனை யாரும் அவ்வளவு எளிதாக உடைக்க இயலாது.ஆனால் தொட்டால் அழிந்து போகும் கரையானை தேக்கு மரத்தில் முதல் நாள் விட்டால் மறுநாள் தேக்கு மரத்தை ஓட்டை போட்டு வெளியே வந்துவிடும் ஆற்றல் கொண்டது.எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை உண்டு.திறமையை அறிந்து செயல்பட்டால் வெற்றி உண்டு.



 
குற்றம் நடப்பதற்கு முன்பே நல்வழிப்படுத்துவதே சட்ட பணிக்குழுவின் பணி 
                             குற்றம் நடந்தால் சட்டம் தண்டனை தரும் என்பது முன்பு உள்ளது.இப்போது குற்றம் நடப்பதற்கு முன்பே எங்களை வரும் காக்க சொல்லித்தான் இதுபோன்று விழிப்புணர்வு முகாம்களை நடத்த சொல்கிறார்கள்.இதனால் நாங்கள் பள்ளி ,கல்லூரி,பொதுமக்கள் இருக்கும் இடங்களில் சென்று விழிப்புணர்வு தருகிறோம்.உங்களை போன்ற சிறுவர்களிடம் இதனை சொல்லும்போது வரும்கால சமுதாயம் நல்ல முறையில் செயல்படும் என்பது உண்மை.

 ஒழுக்கத்துடன் திறமையை வெளிப்படுத்துங்கள்
ஆணவத்தால் ஆடினால் அழிவை தரும்  சட்டம் என்பது உத்தரவு
                    கிளி ,காகம் இரண்டும் ஒரு காட்டில் இருந்தது.கிளி,காகத்தை பார்த்து சொன்னது,நீ என் பக்கத்தில் உட்காராதே என்று சொன்னது.சிறிது நேரத்தில் அங்கு வந்த வேடன் ,கிளியை பிடித்து கொண்டு போய்விட்டான்.காகத்தை ஒன்றும் செய்யவில்லை.காகம் ,வேடன் கிளியை என்ன செய்கிறான் என்று பார்க்கப்போனது, அப்போது வேடன் வீட்டில் கிளியை கூண்டில் அடைத்து அதனை நாக்கில் சூடு வைத்து அப்பா,அம்மா என்று சொல்ல சொன்னான்.அவனது மனைவியோ ,காகத்தின் பாசையில் பேசி காகத்துக்கு உணவு வைத்தார்.கிளி கர்வத்தோடு உள்ளது .அழகாக இருப்பது முக்கியமல்ல.சந்தோசமாய் இருப்பதுதான் முக்கியம்.நம் எண்ணம் நன்றாக இருக்க வேண்டும்.எண்ணம் தவறாக மாறும்போது சட்டம் தேவைப்படுகிறது.ஒழுக்கம் உன்னதமானது.ஒழுக்கத்துடன் திறமையை வெளிப்படுத்துங்கள் .இவ்வாறு பேசினார்.
 
மாணவர்கள் கேள்விகளும் ,நீதிபதி முருகன் பதில்களும் :  
மாணவி கீர்த்தியா :  மிக கடுமையான சட்டம் எது ?
நீதிபதி பதில் : மரணதண்டனை தான் மிக கொடுமையான தண்டனை.  நமது நாக்குதான் இருப்பதில் மிக கொடுமையான ஆயுதம்.அதனை பாதுகாப்பாக பேச பழக்கி கொண்டால் சட்டம் தேவைப்படாது.   
மாணவர் ஜோயல் : ஆற்றில் மணல் எடுத்தால் என்ன தண்டனை?
நீதிபதி பதில் : இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
மாணவி சந்தியா : உங்கள் குறிக்கோள் என்ன ?
நீதிபதி பதில் : என்னுடைய குறிக்கோள் நல்ல மனிதராக வாழ்வது.
மாணவர் வெங்கட்ராமன் : இந்தியாவில் 2019 ஆண்டில் புதிய சட்டம் எது ?
நீதிபதி பதில் : இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த ஜம்மு காஸ்மீர் இப்போது யார் வேண்டுமானாலும்,போகலாம் வரலாம் என்ற சட்டம் தற்போது புதியதாக கொண்டு வரப்பட்டுள்ளது.ஏழையாக இருந்தாலும்,எந்த ஜாதியாக இருந்தாலும் சட்டம் பயில்வதற்கு இலவசமாக படிக்க வாய்ப்பு அளிக்கப்படும் சட்டம் கொண்டுவரப்பட்டது.அதுவும் புதிய சட்டம் ஆகும். 
மாணவர் சபரி : லஞ்சம் வாங்கினவருக்கும்,லஞ்சம் கொடுப்பவருக்கும் வேறு,வேறான தண்டனையா ?
நீதிபதி பதில் : இருவருக்குமே ஒரே தண்டனைதான் .நீதிபதிகளை பொறுத்தவரை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் கிடையாது.எல்லாருமே சமநிலைதான்.
                                            இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதிகள் அன்புடன் பதில் சொன்னார்கள்.                                   



தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :

https://kalviyeselvam.blogspot.com/2019/08/blog-post_10.html#more

https://kalviyeselvam.blogspot.com/2019/09/blog-post_15.html#more



https://kalviyeselvam.blogspot.com/2020/04/blog-post_8.html#more

தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன்  கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி YOU TUBE வீடியோவாக காணலாம் :



https://www.youtube.com/watch?v=OzIenMREa7o








https://www.youtube.com/watch?v=64Jcc49xgq0&t=5s


 https://www.youtube.com/watch?v=QyFQJEWDKlE


 https://www.youtube.com/watch?v=jEn2MlafmuY

 https://www.youtube.com/watch?v=Tt4_vagxJ0g


 https://www.youtube.com/watch?v=NuJuNR-Hd-0










 







No comments:

Post a Comment