Sunday 12 July 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

 அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

17/02/2020                                              Supdt of Pos Devakottai.                                               Karaikudi                                         
                                                                                             

              Today I visited Chairman Manicka Vasagam  Middle School in connection with creating awareness on India Post Payments Bank and Aadhaar enabled payment System.

                    I Explained other schemes in post office to students are keenly listened my brief speech and then  asked so many questions to about  the schemes as they were replied. 

                   I have full satisfaction on having visited the school.

                My sincere thanks to sri L. Chokkalingam Hm of the school and All staffs who have well arrangement for the programme.

                                                                          Swaminthan
                                                                           SPOS
                                                                            Karikudi.





 அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ள வரிகள் ஆகும்.


அருமையான ஏற்பாடுகளை செய்து பள்ளிக்கே வந்து ஆதார் எடுத்தபோது முதல் சந்திப்பு :

                               காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களுடனான சந்திப்பு மிகவும் இனிமையானது. பள்ளியின் ஒரு முக்கியமான நிகழ்வுக்கு அன்னார் அவர்களை தொலைபேசி வாயிலாக அழைத்தபோது மற்றொரு முக்கியமான நிகழ்வுக்கு வருகிறேன். தற்பொழுது சொந்த ஊர் செல்கிறேன் என்று தெரிவித்தார்கள். அதிலிருந்து தொடர்ந்து அவர்களுடன் இணைய வழி இணைப்பில் இணைந்து இருந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியாக ஆதார் எடுப்பதற்காக எங்கள் பள்ளி மாணவர்களை எப்பொழுது அஞ்சலகத்தில் அனுப்பலாம் என்று நான் கேட்டபோது,  படிக்கும் பள்ளியிலேயே மாணவர்களுக்கான ஆதார் முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அஞ்சல் துறை தயாராக உள்ளது என்று கூறி அஞ்சல் அலுவலர்களை  பள்ளிக்கு அனுப்பி வைத்து உடனடியாக ஆதார் கார்டை எடுத்து மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு  அன்னார் அவர்களது தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்வு மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்,எங்களுக்கும் மிகவும் மறக்கமுடியாத நிகழ்வாகும் .ஏனென்றால் பெரும்பாலோனோருக்கு ஆதார் அட்டை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வந்து அலுவலர்கள் ஆதார் அட்டை எடுத்து கொடுத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.அதற்கான ஏற்பாடுகளை மிக அருமையாக செய்து கொடுத்தவர்தான் அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் சுவாமிநாதன். 

மக்களின் நண்பனாக அஞ்சல் துறை சிறக்க முழு அளவில் முயற்சிகள் எடுக்கும் கோட்ட கண்கணிப்பாளர் :

                பொதுத்துறையில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனம் எவ்வாறு பொதுமக்களுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் உதவியாக இருக்கும் என்பதை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக அறியலாம். பொதுத்துறை நிறுவனம் நன்றாக வளர வேண்டும், நன்றாக அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் , மக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதில் மிக ஆர்வமும், ஆசையும் உடையவர் சுவாமிநாதன் அவர்கள்.அன்னார்  அவர்களுடைய ஏற்பாட்டில் எங்கள் பள்ளிக்கு ஆதார் எடுக்கும் அஞ்சல் அலுவலர்கள் வந்து வெகுவிரைவாக ஆதார் எடுத்துக்கொடுத்து மிகப்பெரிய அளவில் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். 


 பேப்பர் ,பேனா இல்லாமல்,  ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் அஞ்சல் வங்கி கணக்கு பள்ளிக்கே வந்து இரண்டே நிமிடங்களில் துவக்கி கொடுத்த கோட்ட கண்கணிப்பாளர் :

             அடுத்ததாக  அஞ்சல் வங்கியில் கணக்குகள் தொடங்க வேண்டும் என்றும், சில மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நேரடியாக அஞ்சலக கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், அதை எப்படி செய்யலாம் என்றும் அன்னார்  அவர்களிடம் தொலைபேசி வழியாக நான் கேட்டேன். அப்பொழுது அஞ்சல் துறையில்  வங்கி சேவை உள்ளது என்றும், புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை ,படிவங்கள் எதுவும் தேவையில்லை என்றும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் வங்கி செல்லாமல் வங்கி பாஸ்புக் அல்லது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும்,  வங்கி செல்லாமல் அஞ்சல் அலுவலர் வீட்டுக்கே வந்து பணம் தருவார்கள் என்றும், தபால்காரரின் மூலமாக அனைத்து விதமான கணக்குகளையும் நாம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து இளம் மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி கணக்கு அட்டை பெற்றுக் கொடுப்பதற்கு மிகப்பெரிய அளவில் அன்னார்  அவர்கள் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். அஞ்சல் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் மட்டுமே வைத்து, வங்கிக்கு செல்லாமல் கணக்குகளில் இருந்து பணம் பெற புதிய முறையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் .மாணவர்களின் உதவித்தொகை பெறுவதற்கு அந்த வங்கி கணக்கு எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது . ஏனென்றால் வங்கிக்கு கணக்கு துவக்க சென்றால் பல முறை செல்ல வேண்டும் என்பதுடன் ஏகப்பட்ட நகல்கள் கொடுத்து பல முயற்சிகளுக்கு பிறகுதான் கணக்கு துவக்க முடியும் என்பது நடை முறையில் உள்ள சிக்கல்கள் ஆகும்.ஆனால் பேப்பர் இல்லாமல், பேனா  இல்லாமல், எந்த விதமான அலைச்சலும் இல்லாமல் இரண்டு நிமிடங்களில் வங்கி கணக்கினை பள்ளிக்கே வந்து துவங்கி கொடுத்து , அது தொடர்பான புதிய விஷயங்களையும் பல்வேறு தகவல்களையும் எங்களுக்கு அறிமுகப் படுத்தினார்கள் அஞ்சல் அலுவலர்கள். எங்கள் பள்ளி ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தின் மூலமாக வங்கி கணக்கு துவக்கி  கொண்டார்கள். மாணவர்களும் பெரும்பாலானவர்கள்  ஒரு இந்த கணக்கை துவக்கி கொண்டார்கள். ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் இந்த கணக்கை துவக்கியது தான் மிகவும் குறிப்பிடத்தக்கது.ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு க்யூ ஆர் கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி, அஞ்சல் வங்கி தொடர்பாகவும், மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும், கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் மிகப்பெரிய அளவில் பல்வேறு தகவல்களை நேரடியாக மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள். 


பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் அலுவலக களப்பயணத்தில் நேரில் வந்து விளக்கமளித்த கோட்ட கண்கணிப்பாளர் :


                     சில நாள்களில் மீண்டும் எங்கள் பள்ளி மாணவர்களை அஞ்சலக களப்பயணத்திற்கு அழைத்துச் சென்ற பொழுது அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அவர்களே காரைக்குடியில் இருந்து தேவகோட்டை அஞ்சலகம் வந்து   வங்கியின் பல்வேறு தகவல்களையும் எடுத்து உரைத்தார்கள். எவ்வாறு ஒரு பார்சல் பெறுவது, பார்சல் புக் செய்வது எப்படி, சேமிப்பு கணக்கு துவங்குவது எப்படி, அஞ்சலகத்தில் வந்தால் நாம் என்னென்ன விதமான பணிகள் இருக்கின்றன, அதை நாம் எப்படி எல்லாம் செய்ய முடியும் என்பன போன்ற தகவல்களையும், ஒவ்வொரு கவுண்டருக்கும் அழைத்துச் சென்று கவுண்டர்களில் என்னென்ன வேலைகள் நடைபெறுகிறது என்பதையும் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். தேவகோட்டை அஞ்சலகத்தில் உள்ளே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தையும் மாணவர்களை அழைத்துச் சென்று காண்பித்து பாஸ்போர்ட் பெறுவது எப்படி, பாஸ்போர்ட் பெறுவதற்கு என்னென்ன நடைமுறைகள் உள்ளன, பாஸ்போர்ட் பெறுவதற்கான முன் பதிவை நாம் எப்படி செய்யலாம் என்பன போன்ற பல்வேறு தகவல்களை  மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். 


கோட்ட கண்கணிப்பாளருடன் தொடரும் அன்பான நட்பு :


             கல்வி தொடர்பாகவும், பல்வேறு பொது தகவல்களை இன்றளவும் என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றார்கள்.  நாம் இணையத்தின் வழியாக தொடர்பு கொள்ளும்போது, உடனடியாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மிகுந்த ஆர்வம்  உடையவர்கள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்கள். அஞ்சலகம்  நன்றாக செயல்பட வேண்டும், அது அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் உடையவர் சுவாமிநாதன் . மாணவர்களுக்கு முடிந்த வகையில் அஞ்சலகம் தொடர்பான பணிகள் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆர்வம் உடையவர். அன்னாரது தொடர்பு எங்களுக்கு  மிகப்பெரிய வகையில் ஒரு பாலமாக  இருந்தது என்பதே உண்மை. இன்றளவும் அவர்களுடனான நட்பு  தொடர்ந்து வருகின்றன. 

ஆளுமையுடனான கலந்துரையாடல் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது :

                 அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என்கிற பெரிய பதவியில்,பொறுப்பில்   இருக்கக்கூடிய அன்னார்  அவர்கள் எங்கள் பள்ளிக்கு பலமுறை வந்து, மாணவர்களுடன் கலந்துரையாடி சென்றதும், பல்வேறு வகையான மாணவர்களுக்கு உதவக்கூடிய செயல்களை - குறிப்பாக ஆதார் கார்டு எடுப்பது, அஞ்சலக வங்கி கணக்கு சில நிமிடங்களில் துவக்கி கொடுத்தது தொடர்பான தகவல்களை நேரடியாக வந்து மாணவர்களுக்கு விளக்கிய விதம் எங்கள்  பள்ளி மாணவர்களின் மனதில் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும் என்பது உண்மை.

நன்றிகள் பல :

                  அஞ்சல் அலுவலர்கள்  மூலமாக எங்கள் பள்ளி மாணவர்களுக்கு   நடைமுறையில் உள்ள தகவல்களை நல்ல முறையில் செய்த அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அஞ்சலக அதிகாரிகளுக்கும்  நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.


நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 
  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,   சிவகங்கை மாவட்டம்.   

 8056240653 

அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன்  அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :

https://kalviyeselvam.blogspot.com/2019/09/blog-post_20.html#more


https://kalviyeselvam.blogspot.com/2020/02/blog-post_17.html


https://kalviyeselvam.blogspot.com/2019/10/blog-post_9.html#more


அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன்  அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி YOU TUBE வீடியோவாக காணலாம் :


 https://www.youtube.com/watch?v=tC2FSoALJDY

 https://www.youtube.com/watch?v=0rX8v5JeCFU

 https://www.youtube.com/watch?v=sVPS0Qmctz8

 https://www.youtube.com/watch?v=J6YLMN9kaec

 https://www.youtube.com/watch?v=zIQGJ6SQTFE

 https://www.youtube.com/watch?v=NUEQ3XkRcGQ

 https://www.youtube.com/watch?v=9yRdRkr8dlU

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment