Sunday 26 July 2020

அப்துல் கலாம் நினைவு நாள்

ஊரடங்கு நேரத்தில் இளைஞர் எழுச்சி நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்து பள்ளி மாணவர்கள் 
























தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் அப்துல் கலாம் நினைவு நாளை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும் , அப்துல் கலாமின் சிறப்புகளை  பேசியும்   நினைவு கூர்ந்தனர் .

                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள்   நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற   மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு  உதவுவது ஆகும் . ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில்   பங்கேற்ற மாணவர்கள் ராஜேஸ்வரி,சண்முகம்,புகழேந்தி,முகேஷ் ,திவ்யஸ்ரீ,பிரதிஷா ,முத்தய்யன் , தேவதர்ஷினி,ஜெயஸ்ரீ,பிரஜித்,வெங்கட்ராமன்,நதியா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இப்பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாட  வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும்  , சதுரங்க பயிற்சிகள்  நடைபெற்று வருவதும்  ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள்  தெரிவித்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம், கவிதை,பேச்சு போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு ஆன்லைன் மூலம் வீடியோக்களை அனுப்பினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தனர். 



   கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு  வீட்டிலேயே பொன்மொழி, கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று பேசிய வீடியோக்களை YOU TUBE யில் காணலாம் :
   அப்துல் கலாம் பொன்மொழிகளை சொல்லும் இளம் வயது மாணவர்கள் நந்தனா,பிரஜித்,முகேஷ்,அட்சயா 

https://www.youtube.com/watch?v=V-07D7ebjiE
 https://www.youtube.com/watch?v=L8d-IM5hZhA
 https://www.youtube.com/watch?v=_LBoFDuq_xE
 https://www.youtube.com/watch?v=00ZyXObFarM
 
  அப்துல் கலாம் குறித்து கருத்துள்ள  கவிதை சொல்லும் மாணவி நதியா 
 
https://www.youtube.com/watch?v=2KXHuUHFAb8
 


 அப்துல் கலாம் குறித்து கருத்துள்ள  கவிதை சொல்லும் மாணவர் வெங்கட்ராமன்

https://www.youtube.com/watch?v=C_tjrq63M2U

 அப்துல் கலாம் குறித்து கருத்துள்ள  கவிதை சொல்லும் மாணவர் முத்தய்யன் 

  https://www.youtube.com/watch?v=C2SZP6V7hlQ

 அப்துல் கலாம் குறித்து கருத்துள்ள பாடல்  சொல்லும் மாணவி  சுவேதா 

 https://www.youtube.com/watch?v=7tYBw1WrVRw
 

 அப்துல் கலாம் குறித்து விரிவாக பேசும் மாணவர் சண்முகம் 

 https://www.youtube.com/watch?v=QKvAN-rK8z0
 






No comments:

Post a Comment