Friday 24 May 2019

 களப்பயணம் மூலம்அனுபவ  கல்வியை  வழங்கும் பள்ளி 






 

 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்த சுழலிலும் மறக்காது.வாழ்க்கையின் என்றுமே மறக்க கூடாது என்ற நோக்கில் தான் வாழ்க்கைக்கு தேவையான இடங்களுக்கு களப்பயணம் அழைத்து செல்கின்றனர்.
                                         களப்பயணம் அழைத்து செல்வது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது:
                                                       மாணவர்கள்  களப்பயணம் செல்லும்போது  நேரடியாக வாழ்க்கைக்கான கற்றலை தெரிந்து கொள்கின்றனர்.எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து முடித்து செல்லும் மாணவர்கள் அதன் பிறகு குடும்ப மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக படிக்கக்கூடிய சூழ்நிலை இல்லாததால் 10ம் வகுப்பு,12ம் வகுப்புக்கு பின்னர் படிப்பார்களா என்று தெரியாத நிலை இருந்தது.இதனை கருத்தில் கொண்டு தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு மாணவர்களை அழைத்து சென்று இயற்பியல்,வேதியியல் ,தாவரவியல்,விலங்கியல்,மூலிகை தோட்டம்,நூலகம் என அனைத்தையும் நேரில் பார்த்த பிறகு ,அவர்கள் கண்டிப்பாக இந்த கல்லூரியில் படிப்பேன் என்று நோக்கத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள்.அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கல்லுரி படிப்பு படிப்போம் குறிக்கோளை ஏற்படுத்தி கொள்ள களப்பயணம் உதவியாக உள்ளது.கல்லூரியில் களப்பயணத்தில் பேராசிரியர்களிடம் மாணவர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும்போது அவர்களது கல்வி அறிவு மேம்படுகிறது.பள்ளியில் புத்தகத்தை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு இது புதிய அனுபவத்தை கொடுக்கும்.மேலும் பொருளாதாரத்தில் ,சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இது போன்று கல்லூரிகளுக்கு அழைத்து வரும்போது அவர்கள் பிற்காலத்தில் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு குறிக்கோளாக உண்டு பண்ண வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.

              கல்லூரி படிப்பு முடித்த பின்புதான் எனக்கு பல்கலைக்கழகம் தொடர்பாக தெரியும்.இந்த ஆண்டு 6,7,8 வகுப்பு படிக்கும் மாணவர்களை பல்கலைக்கழகம் அழைத்து சென்று நேரில் விளக்கினோம் .
                                          அஞ்சல் அலுவலகத்துக்கு அழைத்து சென்று வந்த பிறகு மாணவி காயத்ரியின் தாயார்  பள்ளிக்கு நேரில் வந்து ,சார் அஞ்சல் அலுவலகத்தில் என் மகள் என்னை அழைத்து சென்று படிவங்கள் பூர்த்தி செய்து ,மேலாளர் இவர்தான் என்று கூறி அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்து கணக்கு துவக்கி கொடுத்தார் என்று சொன்னபோதுதான் களப்பயணத்தின் நன்மை தெரிந்தது.
                                      
                            வங்கிக்கு அழைத்து சென்று நேரில் விளக்கியபோது ,கல்லுரி படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பிறகு கூட வங்கி படிவம் பூர்த்தி செய்ய தெரியாத நிலையில் உள்ள போக்கை மாற்றி மாணவர்களுக்கு  வங்கி தொடர்பான கிரீன் கார்டு பெறுதல்,ATM மெஷினை பயன்படுத்தி பணம் எடுத்தல் , சுவைப் மெஷின் பயன்படுத்துதல்என்பது உட்பட எளிதாக பல்வேறு விஷயங்களை கற்று கொடுக்கிறோம்.இது போன்று இன்னும் பல இடங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்கிறோம்.இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களை களப்பயணம் மூலம் நீதிமன்றம்,பல்கலைக்கழகம்,கல்லூரி,விவசாய பண்ணை,வங்கி ,பாஸ்போர்ட் அலுவலகம் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று விளக்கம்  பெற்றனர்.






மேலும் விரிவாக :
 
நீதிமன்றத்துக்கு களப்பயணம் :
              தமிழகத்தில் முதன்முறையாக இந்த ஆண்டு கோர்ட்டுக்கு களப்பயணம் அழைத்து சென்றோம்.தூக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மாவட்ட நீதிபதிகளுக்கு மட்டுமே உண்டு,சினிமாவில் வருவது போல்  கண்கள் துணியால்  கட்டி பொம்மை எல்லாம் நீதிமன்றத்தில் இருக்காது, புத்தகம் வைத்து சத்தியம் வாங்க மாட்டோம் -மனசாட்சியோடு வாயால் மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்  என நீதிமன்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை நீதியரசர் மாணவர்களுக்கு விளக்கினர்கள் .மாணவர்களும் நீதிமன்ற நடைமுறைகளை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.

பாஸ்போர்ட் அலுவலகம் :
                                               தமிழகத்தில் முதன்முறையாக இந்த ஆண்டு மாணவர்கள் பாஸ்போர்ட் அலுவலகம் அழைத்து சென்றோம்.பாஸ்போர்ட் எவ்வாறு பெறுவது என்பது தொடர்பாக மாணவர்கள் நேரடியாக கற்று கொண்டனர்.

அரசு தோட்டக்கலை துறைக்கு களப்பயணம் :
 
    பண்ணை சுற்றுலா திட்டத்தின் மூலம் அரசு தோட்டக்கலைப்பண்ணைக்கு ஆண்டு தோறும் நேரடியாக களப்பயணம் அழைத்து சென்று குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி எவ்வாறு செய்வதுவிண்பதியம்,மண் பதியம் இடுதல் எவ்வாறு செய்வது? மென்த்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு எவ்வாறு செய்வது?

கவாத்து  எவ்வாறு செய்வது? மாணவர்களுக்கு  நேரடி செயல் விளக்கம் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு முதன்முறையாக டிராக்டர் ஒட்டவும் மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது.

பல்கலைக்கழத்துக்கு களப்பயணம் :
                      தமிழக்தில் முதன்முறையாக அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அழைத்து சென்றோம்.பல்கலைக்கழகம் கழகத்தில் உள்ள அறிவியல் புலம்,வரலாறு புலம் போன்றவற்றை நேரில் பார்த்தனர்.பல்கலைக்கழக துணைவேந்தருடன் சிண்டிகேட் அரங்கில் மாணவர்கள் கலந்துரையாடல் நடத்தினார்கள்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு களப்பயணம் செல்லுதல் :

 எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச்சென்று ஒரு நாள் முழுவதும் இயற்பியல்,வேதியியல்,விலங்கியல்,தாவரவியல்,கணினி பொறியியல் ஆய்வகங்களுக்கு அழைத்து சென்று நேரடி விளக்கம் சொல்லுதல்

காவல் நிலையம் - களப்பயணம் செல்லுதல் :
                                 
        காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காவல் நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் விரிவாக விளக்கப்பட்டது.

ரேடியோ நிலையம் அழைத்து செல்லுதல் :
          அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலி நிலையத்துக்கு மாணவர்களை தொடர்ந்து அழைத்து சென்று நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது

பாரத ஸ்டேட் வங்கி அழைத்து சென்றபோது வாடிக்கையாளரின் அனுபவம் :
  பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்று சுவைப் மெஷின் தொடர்பாகவும்,ATM தொடர்பாகவும் கற்று தரும்போது அவர்கள் பெற்றோர்களுக்கும் அவர்களது வீட்டை சுற்றி உள்ளவர்களுக்கும் சொல்லி கொடுக்கும் வகையில் நேரடி அனுபவம் வாயிலாக கற்று கொள்கிறார்கள்.தொடர்ந்து நான்கு வருடமாக அழைத்து செல்லும் எனக்கு ,முதல் வருடம் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்  ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது: நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் ,வேலைக்கு சென்ற பிறகும் பல வருடங்கள் வங்கிக்கு சென்றது கிடையாது.பயம் தான் காரணம்.வேலைக்கு வந்த பிறகு வேறு வழியில்லாமல் IOB வங்கிக்கு பயந்து கொண்டே சென்றேன்.ஏன் பயம்? எனக்கு வங்கி படிவம் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தெரியாது.அப்புறம் தட்டு தடுமாறி வங்கி அலுவலர் உதவியுடன் பூர்த்தி செய்தேன்.நீங்கள் 8 ம் வகுப்பு படிக்கும்போதே மாணர்வகளை பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து வந்து அனைத்து விஷயங்களையும் சொல்லி கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.அது எனக்கு மிகப்பெரிய ஊக்கப்படுத்தும் வார்த்தையாக இருந்தது.தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அழைத்து செல்கிறேன்.அதுவே மிகப்பெரிய கல்வி அனுபவம் ஆகும்.வங்கியிலும் முழு ஒத்துழைப்பு அழைத்து உதவி செய்கிறார்கள். 

விவசாய கல்லூரிக்கு களப்பயணம்  :

                  தொடர்ந்து மூன்றவாவது ஆண்டாக விவசாய கல்லூரிக்கு அழைத்து சென்று ஆட்டு பண்ணை,பன்றி வளர்த்தல்,விவசாயம் செய்வது தொடர்பாக விளக்கமாக சொல்லுதல்,நேரடி செயல் விளக்கம் அளித்து வருகிறோம்.மேலும் விவசாய நிலத்தில் இறங்கி சேற்றில் மாணவர்கள் நாற்று நட்டனர்.

 அஞ்சலகத்திற்கு  களப்பயணம் :

அஞ்சலகத்திற்கு நேரடி களப்பயணம் சென்று 
 பார்கோடு மூலம்  கணினியில் எவ்வாறு பதிவு செய்தல்? மற்றும் அஞ்சலகம் தொடர்பாக மாணவர்களுக்கு நேரடி விளக்கம்கொடுத்தல்

திருச்சி அண்ணா கோளரங்கத்துக்கு களப்பயணம் செல்லுதல்  :  திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கத்திற்கு மாணவர்களை அழைத்து சென்று நேரில் விளக்கம் கொடுத்து வருகிறோம்.
*எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச்சென்று ஒரு நாள் முழுவதும் இயற்பியல்,வேதியியல்,விலங்கியல்,தாவரவியல்,கணினி பொறியியல் ஆய்வகங்களுக்கு அழைத்து சென்று நேரடி விளக்கம் சொல்லுதல் 


 களப்பயணம் செல்லுதல் தொடர்பாக நகராட்சி ஆணையாளர் கருத்து  :
                                   
                                இந்த ஆண்டு நான்காம் ஆண்டாக   தமிழக அரசின் தோட்டக்கலை துறை பண்ணைக்கு அழைத்து சென்றோம் .அங்கு தோட்டக்கலை துறை அலுவலர் தருமர் எங்களுக்கு பதியம் போடுதல்,குழித்தட்டு நாற்றங்கால் இடுவது,ஒட்டு செய்வது,கவாத்து செய்வது என அனைத்துமே ஆசிரியைகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவருக்கும் புதிய தகவலாக,விவசாயம் தொடர்பாக இளம் வயது மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி அவர்கள் சில நாள் கழித்து என்னிடம் பேசும்போது முன்பே தெரிந்துஇருந்தால் தானும் வந்து கற்று கொண்டு இருப்பதாக சொன்னார்.என்னிடம் பல பேர் இதனை சொன்னார்கள்.அமெரிக்காவில் இருந்து என்னிடம் பேசிய பிரித்வி என்கிற தமிழ்நாட்டு பெண் ,எனக்கு மரம் என்றாலே என்னவென்று தெரியாமல் போய்விட்டது.நீங்கள் இளம் வயது மாணவர்களுக்கு அருமையான விஷயத்தை சொல்லி கொடுத்து வருகிறீர்கள் என்று சொன்னர்கள். 

அனுபவம் வாய்ந்த கல்வியை வழங்கும் பள்ளிக்கு பாராட்டு - துணைவேந்தர் பெருமிதம் :
 அனுபவம் வாய்ந்த கல்வியே சிறந்த கல்வி ஆகும்.நீங்கள் வங்கி ,பல்கலைக்கழகம்,வேளாண்மை கல்லூரி,கோர்ட்,பாஸ்போர்ட் அலுவலகம்,கல்லூரி,தபால் அலுவலகம்,வேளாண்மை பண்ணை போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று அனுபவ அறிவு பெற்று உள்ளீர்கள்.நேரடி அனுபவம் மூலமே சிறந்த கல்வியை பெற இயலும்.அதனை உங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.அதன் மூலம் அனுபவம் வாய்ந்த கல்வியை உங்களுக்கு அளிக்கிறார்கள்.
                                     
                                                   

No comments:

Post a Comment