Friday 10 May 2019

ஐந்து ரூபாயில் அசத்தல் குளியல்

கோடையிலும் கொட்டும் அருவி

குளு ,குளு காடுகளுக்குள் அசத்தல் பயணம்











அருவி குளியல்,ஆற்றில் நீச்சல்,காடுகளுக்குள் குளிர்ந்த பயணம் என கோடை விடுமுறையில் அசத்தலான பயணத்தை காரைக்குடியில் ( லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை ) ஆரம்பித்து கோபி செட்டிபாளையம் சென்று அடைந்தோம்.

ஆனந்தமாய் அருவியில் குளித்து பொறித்த மீன் சாப்பிடுதல் :
                                                       கோபியில் எங்களை அவினாசிலிங்கம் அய்யா அவர்கள் அன்புடன் வரவேற்றார்கள்.அவர்களது வீட்டில் தங்கி முதல் நாள் காலை முதலில் பச்சமலை முருகன் கோவில் சென்றோம்.அங்கு முருகனை தரிசித்து விட்டு அங்கிருந்து பாரியூர் சென்றோம்.பாரியூர் கொண்டத்தம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டு அருகில் உள்ள வாய்க்களில் முழுவதும் ஓடிய தண்ணீரை கண்டு ரசித்தோம்.காலை விட்டு தண்ணீரில் சில மணி நேரம் உற்சாகம் அடைந்தோம்.நம்மை சுற்றி எங்கும் உள்ள பச்சை பசேல் வயல் வெளியை ஆனந்தத்தோடு  பார்த்தோம். பிறகு அங்கிருந்து கொடிவேரி பாலத்தில் இருந்து தண்ணீரின் அழகை ரசித்தோம்.பிறகு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி கொடிவேரி அருவியில் ஆசை தீர நீண்ட நேரம் குளித்தோம். பயமில்லாத ,குளிர்ச்சியான குளியல்.பிறகு ஈரத்தலையுடன் வெய்யலில் உலர வைத்துக்கொண்டு நேராக பாலத்தின் அடியில் சுட,சுட பொறித்த ரோகு மீனை சாப்பிட்டோம்.பிறகு அங்கிருந்து கோபி சென்றோம்.கோபியில் அன்னாரது வீட்டில் அருமையான உணவு சாப்பிட்டோம்.

அழகான பவானி சாகர் அணை :
                                          மதியம் கோபியில் இருந்து கிளம்பி பேருந்து மூலம் சத்தியமங்கலம் சென்றோம்.பேருந்து நிலையத்தில் எங்களை அன்புடன் வரவேற்றார் கொத்தமங்கலம் ஆசிறியர் சார்லஸ் .அவருடன் காரில் பயணம் செய்து அவரது பவானி சாகர் வீட்டுக்கு சென்றோம்.அரசு அலுவலர்கள் பயிற்சி மையம் ,மீன் வளர்க்கும் இடம் முதலியவற்றை பார்வையிட்டோம்.ஆசிரியரின் வீட்டுக்கும் சென்றோம்.வீட்டில் அவரது அப்பா,அம்மா ,மனைவி ,குழந்தைகளுடன் சிறிது நேரம் அளவளாவினோம்.மகிழ்ச்சியாக இருந்தது.அவரது வீட்டின் அருகே உள்ள ஆற்றையும் சென்று பார்த்து ரசித்தோம்.பவானி சாகரில் எப்போதுமே மின்சாரம் தடைபடுவது இல்லை.காரணம் அங்கு இருந்துதான் பல ஊர்களுக்கு தண்ணீர் சென்றுகொண்டு உள்ளது.எனவே தண்ணீர் எடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மின்சாரம் உள்ளது.நல்ல குழு,குழு என்ற இடம். ஆசிரியர் வீட்டில் இருந்து காரில் கிளம்பி நாங்கள் பவானி சாகர் அணைக்கு சென்றோம்.அங்கு மேலே செல்ல அனுமதி இல்லை.யானைகள் அதிகமாக வருவது என்கிறது காரணம்.பிறகு நாங்கள் பார்க் உள்ளே சென்று பார்த்தோம்.மிக மோசமான பராமரிப்பில் உள்ளது.உட்கார இடமும் இல்லை.சரியான பராமரிப்பில் செடிகள் வளரவும் இல்லை.பவானி சாகர் அணையின் அழகை நீண்ட தூரத்தில் இருந்து ரசித்து விட்டு கிளம்பினோம்.அங்கு இருந்து பண்ணாரி அம்மன் கோவில் சென்றோம்.

 வியக்கவைத்த பண்ணாரிஅம்மன் கோவில்:
ஆச்சரியப்படுத்திய சேலை தயாரிப்பு :
                      பவானி சாகரிலிருந்து பண்ணாரி அம்மன் கோவில் செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் வாழை தோப்புகளும் ,மல்லி செடிகளும் காண அழகாக இருந்தது.அங்கிருந்து செல்லும் வழியில்  தொட்டம்பாளையம்                  என்ற ஊரில் முழுவதுமே சேலை  தயாரிக்கும் இடமாக உள்ளது.சேலைகள் தயாரிப்பின் அருமையான இடம்.பார்ப்பதற்கே அருமையாக இருந்தது.இயற்கை அழகை ரசித்து கொண்டே பண்ணாரி அம்மன் ஆலயம் சென்றோம்.மிக பிரமாண்டன கோவில் .பார்ப்பதற்கே மனதுக்கு அமையதியாக இருந்தது.அம்மனை தரிசித்து விட்டு அங்கு இருந்து கிளம்பி சத்தியமங்கலம் காரில் வந்து சேர்ந்தோம்.மீண்டும் அங்கு இருந்து நேராக பேருந்தின் மூலம் கோபி வந்து சேர்ந்தோம்.கோபியில் அவினாசிலிங்கம் அவர்களின் வீட்டில் இரவு உணவு அருந்திவிட்டு அடுத்த நாள் சுற்றுப்பயணம் செல்வதற்கு திட்டமிட்டோம்.

காவிரியில் (தளக்காடு ) ஆனந்த குளியல் :

                                              காலையில் 7 மணி அளவில் கோபியில் பேருந்தில் கிளம்பி சத்தியமங்கலம் வந்து சேர்ந்தோம்.அங்கு இருந்து பேருந்தில் 27 கொண்டை வளைவுகளை தாண்டி திம்பம் வந்து சேர்ந்தோம்.திம்பத்தில் காலை உணவை சாப்பிட்டு விட்டு , காரில் கிளம்பி ஆசானுர் ,சாம்ராஜ் நகர் வழியாக தளக்காடு காவிரி ஆறு ஓடும் பகுதிக்கு சென்றோம்.அங்கு சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நன்றாக குளித்து விட்டு ,1700 வருடத்துக்கு முன்பு கட்டிய வைத்தியநாதர் சுவாமிகளையும், கீர்த்தி நாராயணனையும் வழிபட்டு ,அங்கிருந்த கோவில் மணல் வழியாக நடந்து செல்ல கூடிய மணல் பிரதச்சனத்தை பார்வையிட்டு பிறகு காரில் கிளம்பி செல்லும் வழியில் மரத்தடியில் அமர்ந்து அருமையான மதிய உணவை முடித்து  விட்டு சிவசமுத்திரா அருவி சென்றோம்.

பார்த்து ரசிக்க வேண்டிய சிவசமுத்திரா அருவி :

சிவசமுத்திரா நீர்விழ்ச்சியில் இரண்டு பக்கமும் சல ,சலவென கொட்டும் அருவியின் அழகை தூரத்தில் நின்று ரசிக்கமட்டுமே இயலும் ஜெகஞ்சுக்கி என்று அந்த இடத்துக்கு சென்றோம்.அருமையான நீர் வீழ்ச்சி.கோடையில் கண்ணனுக்கு குளிர்ச்சி.

கட்டிட கலை அழகை நேர்த்தியாக சொல்லும் சோம்நாத்பூர் :
                                                        நீர்விழ்ச்சியில் சில மணி நேரம் கழித்து விட்டு அங்கிருந்து சோம்நாத் பூர் நோக்கி சென்றோம்.சோம்நாத்பூர் அருமையான கட்டிட கலை அழகு.நாங்கள் சரியாக மாலை 5.25மணிக்கு அங்கு சென்றோம்.5.30 மணி வரைதான் அங்கு உள்ளே சென்று பார்க்க இயலும் .சரியான நேரத்துக்கு சென்று சுமார் 5.50 மணி வரை உள்ளே உள்ள கட்டிட கலை அழகை ரசித்து பார்த்தோம்.அவசியம் காண வேண்டிய இடம்.15 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.15 வயதுக்கு மேல் ஒருவருக்கு ரூபாய் 25 கட்டணம்.

நஞ்சுகொடாவில் இரவு தங்கல் :
                                           மாலை 6 மணி அளவில் சோம்நாத்பூரில் கிளம்பி அங்கிருந்து நஞ்சுகொட ஊருக்கு சென்றோம்.அங்கு தாளவாடி அருகே உள்ள தொட்டபுரத்தை சார்ந்த பிரசன்னகுமார் என்ற நண்பர் வீட்டில் தங்கினோம்.நஞ்சுகொடாவில் ராம்பிரகாஷ் ஹோட்டலில் உணவு சாப்பிட்டோம்.நஞ்சுகொடா சர்களில் ராம்பிரசாத் ஹோட்டல் உள்ளது.இரவு நல்ல ரெஸ்ட் கிடைத்தது.
நஞ்சுண்டேஸ்வரர் தரிசனம் :
                              மூன்றாம் நாள் காலை 7 மணி அளவில் பிரசன்னகுமார் வீட்டில் இருந்து கிளம்பி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றோம்.அருமையான கோவில்.மிக பெரிய அளவில் அமைந்து இருந்தது.அங்கு சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக சுவாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து மீண்டும் காலை உணவை பிரசன்னகுமார் அவர்களுடன் உணவை ராம்பிரகாஷ் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கபிணி அணை நோக்கி சென்றோம்.

ஜில்,ஜில் காற்றுக்கொடுத்த ஆலமரம் :
                                                        கபிணி அணை செல்லும் வழியில் பேகுளுர் தாண்டி இடையல்லா என்கிற ஊரின் முன்பாக அதிகமாக சாலை முழுவதும் ஆலமரம் அமைந்து உள்ளது.ஆலமரம் அமைந்து உள்ள இடத்தில் தரை முழுவதும் ஜில்,ஜில் என்று உள்ளது.மதியம் 12 மணிக்குக்கூட அதிகமான குளிர்ச்சி  உள்ளது குறிப்பிடத்தக்கது. இடையல்லா தாண்டி சென்ற உடன் நுகு அணை வருகிறது.பார்க்கவேண்டிய அணை .அருமையான பூக்களுடன் கண்ணனுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

கபிணி அணை உள்ளே அருமையான குளியல் :

பிறகு அங்கிருந்து கபிணி அணை நோக்கி சென்றோம்.கபிணி அணை உள்ளே பார்வையிட அனுமதி இல்லை.அங்கு உள்ள பாதுகாவலர் தகவலின்படி நாங்கள் நேராக கபிணி அணை உள்ளே சென்று நீரில் இறங்கி ஆனந்தமாக காலை நனைத்து குளித்தோம்.பிறகு அங்கிருந்து வயநாடு கிளம்பி சென்றோம்.செல்லும் வழியில் குருவா தீவு செல்லலாம் என எண்ணி சென்றோம்.செல்லும் வழியில் கர்நாடக வண்டியில் உள்ள சுற்றுலா பயணிகளை சந்தித்தோம்.அவர்களோ ,வயநாடு வேண்டாம்.மிகவும் சுமாரான சீதோஷண நிலை உள்ளது.குருவா தீவும் சுமார் 50 கிலோமீட்டர் பயணம் செய்து பூட்டி கிடக்கிறது என்று சொன்னார்கள்.உடனடியாக நாங்கள் எங்கள் திட்டத்தை மாற்றி மீண்டும் நஞ்சுகூடா வழியாக சாம்ராஜ் நகர் வந்தோம்.மதியம் ஹாண்ட் போஸ்ட் என்ற ஊரில் அருமையான மதிய உணவு சாப்பிட்டோம்.சாதம் ,காளி உடன் நல்ல உணவு.மனதுக்கு நிறைவு.

பசுமை நிறைந்த,யானை நடமாட்டமுள்ள பகுதியில் பயணம் :
தாளவாடி யூனியன் சேர்மனை சந்தித்தல்  :
                      மாலை 5 மணி அளவில் தாளவாடி வந்து சேர்ந்தோம்.அங்கு டீ சாப்பிட்டு விட்டு,யானைகள் அதிகம் நடமாட்டம் உள்ள இக்கலூர் வழியாக தொட்டப்புறம்  சென்றோம்.செல்லும் வழியில் அருமையான காடு இருந்தது.எங்கு பார்த்தாலும் யானை விட்டம் பார்த்தோம்.இக்கலூரில் தாளவாடி யூனியன் சேர்மன் இந்திரா அம்மாவையும் ,ஓய்வு பெற்ற ஆசிரியர் சாந்தா மல்ல தேவர் அவர்களையும் சந்தித்தோம்.அருமையான தேனீர் கொடுத்து,சூடான பஜ்ஜியும் கொடுத்து உபசரித்தனர்.

 யானை காட்டுக்குள் ராமர் பாதம் பார்த்தால் :

அவர்களிடம் விடைபெற்று இக்கலூரில் இருந்து தொட்டபுரம் வரும் வழியில் ராமர் பாதம் பார்த்தோம்.அங்கும் யானை நடமாட்டம் அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள்.பிறகு தொட்டபுரம் சென்று விடுதிகளை பார்த்தோம்.மாலை 6 மணிக்குமேல் ஆகிவிட்டது.
 விடுதி கிடைக்கவில்லை ? பேருந்தும் இல்லை.வாகனமும் கொண்டுபோய் விட்டு,விட்டு வர இயலாது .ஆபத்தான இடத்தில் தங்கல் :
ஆனால் விடுதி கிடைக்கவில்லை.என்ன செய்வது என்று விழி பிதுங்கி நின்றோம்? ஏன் ?
                                         எங்களுடன் வந்த அவினாசிலிங்கம் சார் எங்களுக்கு எப்படியும் தங்கும் அறை பார்த்துவிடுவோம் என்று நம்பிக்கையுடன் சொன்னார்.ஆனால் எங்களுக்கு விடுதி கிடைக்கவில்லை.கடைசி பேருந்தும் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டது.என்ன செய்வது என்று தெரியவில்லை.எங்களது வாகன ஓட்டுனரிடம் சொல்லி எங்களை கொண்டு போய் சத்தியில் விட்டு,விட்டு வாருங்கள் என்றால் அவரோ நான் உங்களை விட்டு,விட்டு மீண்டும் இங்கு வர இயலாது.இரவு 10 மணிக்குமேல் திம்பம் வழியாக உள்ளே வர அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்.பிறகு அவரே எங்களுக்கு ஒரு தோட்டத்து அறையை கேட்டு பெற்று தந்தார்.நாங்கள் தங்கிய இடம் மிகவும் ஆபத்தான இடம்.ஏனென்றால் கரும்பு தோட்டத்துக்குள் நாங்கள் தங்கினோம்.யானை அதிகம் நடமாட்டமுள்ள பகுதி என்பதால் கரெண்ட் கனெக்ஷன் கொடுத்து இருந்தார்கள்.அந்த பேட்டரி இருந்த அறைக்குள் ஐந்து பேரும் படுத்து இருந்தோம்.இரவு பயத்துடனே உறங்கினோம்.
 கரும்பு தோட்டத்துக்காரரின் நெகிழ்ச்சியான அன்பு கொய்யாப்பழம் :
நல்ல வேளையாக காலையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நாங்கள் நல்ல பொழுதுடன் அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தோம்.அப்போது ,தோட்டத்துக்காரர் தொண்டையா அவர்கள் அதிகாலையிலே தோட்டத்துக்குள் சென்று,எங்களுக்காக அன்புடன் கொய்யாப்பழம் பறித்து வந்து கொடுத்தார்.எங்கள் தொட்டது பாதுகாவலர் தொண்டையா மிகவும் நல்லவர்.நல்ல முறையில் எங்களை பாதுகாப்பாக பேருந்து நிலையத்துக்கு அழைத்து வந்து அனுப்பி வைத்தார்.எங்கள் வாகன ஓட்டுநர் இரவு வருவார் என்று எதிர்பார்த்தோம்.ஆனால் அவர் கடைசி வரை வரவேயில்லை.

 குளு ,குளு காடுகள் வழியாக பேருந்து  பயணம் :

காலை 7.40 மணிக்கு பேருந்தில் ஏறி தலைமலை ,பெஜாலட்டி வழியாக திம்பம்,தலமலை வழியாக கோபி வந்து அடைந்தோம்.வரும் வழியில் இயறக்கை கொஞ்சும் அழகான காடுகள்.அதுவும் அடர்ந்த காடுகள்.பார்ப்பதற்கு மனதிற்கு இனிமையான நினைவுகளை வழங்கியது.

பெரியார்,அண்ணா நினைவகம் பார்த்தல் :

கோபியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மாலை 3 மணி அளவில் கிளம்பி ஈரோடு சேர்ந்து , பெரியார் அண்ணா நினைவகம் பார்த்து விட்டு ஈரோடு பேருந்து நிலையம் செல்லும் வழியில் ஒரு அதிசய மனிதரை கண்டேன்.

அசத்திய ஆட்டோ ஓட்டுநர் :

ஆட்டோ ஓட்டுனராகிய அவரது பெயர் சிவாஜி.பெரியார் நினைவகத்தை பார்த்துவிட்டு வரும்போது பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்று கேட்டோம் . அவரும் எங்களிடம் ரூபாய் 60 மட்டுமே கேட்டார்.நாங்கள் முதலில் பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் நினைவகம் வரும்போது எங்களிடம் ஆட்டோ ஓட்டுநர் ரூபாய் 100 கேட்டார்.ஆனால் நாங்கள் பின்னர் விசாரித்தபோதுதான் எங்களுக்கு தெரிந்தது, பேருந்து நிலையம் முதல் பெரியார் நினைவகம் வரை வர ரூபாய் 60 மட்டுமே என்று.அந்த தொகையை சரியாக கேட்டார்.நாங்களும் உடனடியாக சரி என்று சொல்லி அவரது ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்றோம்.அப்போது அவரிடம்,செல்லும் வழியில் பேருந்து நிலையம் அருகில் நல்ல காபி கடை இருந்தால் இறக்கி விடுங்கள் என்று சொன்னோம்.அவரோ,செல்லும் வழியில் ஈரோடு பில்டர் காபி கடையில் இறக்கி விட்டு ,அந்த கடையில் காபி நன்றாக இருக்கும் என்றும்,சாப்பிட்டு விட்டு வாருங்கள் ,நான் காத்து இருக்கிறேன் என்றும் அன்புடன் சொன்னார்.பிறகு நாங்கள் காபி  சாப்பிட அவரையும் அழைத்தோம்.அதற்கு அவரோ,சார் நான் காபி சாப்பிடுகிறேன் ,ஆனால் எனது செலவில் தான் காபி சாப்பிடுவேன்.நான் அடுத்தவர்கள் காசில் டீ ,காபி சாப்பிடுவதில்லை என்று சொன்னார் பாருங்கள்.அருமையான வார்த்தை.எனக்கு அவரை மிகவும் பிடித்து இருந்தது.பிறகு அன்புடன் நாங்கள் காபி குடித்து முடிக்கும் வரை எங்களுடன் இருந்து விட்டு,நிதானமாக எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார்.நானும் அவரிடம் 70 ரூபாய் கொடுத்தேன்.பெற்று கொண்டு மீதி 10 ரூபாயை கொடுத்தார்.நாட்டில் இப்படி நல்லவர்களும் இருக்கிறார்களே என்று எண்ணி கொண்டு அவரிடம் விடை பெற்று கரூர் செல்லும் பேருந்தை நோக்கி சென்றோம்.வாழ்த்துக்கள் தோழர் சிவாஜி அவர்களுக்கு.அவரது மொபைல் எண் :9345108574.

சுற்றுலாவில் எங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் :

மாணிக்கவாசகம் :  தேவகோட்டையை சார்ந்த அன்னார்தான் எங்களுக்கு அவினாசிலிங்கம் அவர்களை அறிமுகப்படுத்தினார்.நல்ல நண்பரை அறிமுகப்படுத்திய நண்பருக்கு நன்றிகள் .

அவினாசிலிங்கம் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து தற்போது பணி ஓய்வு பெற்றுள்ள அய்யா அவர்கள் எங்களுக்கு சுற்றுலாவின் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அறிமுகம்.காலையில் நாங்கள் வீட்டுக்கு சென்ற உடனே எங்களுக்கு நல்ல உதவி செய்தார் .அன்புடன் எங்களை அவர்களது வீட்டில் தங்க வைத்து அவரது காரில் அழைத்து சென்று சுற்றிக்காட்டினார்.அருமையான நண்பர்.மறக்கமுடியாத பயண அனுபவத்தை ஏற்படுத்தியவர்.நன்றிகள் பல.

வியப்பில் ஆழ்த்திய பெண் ஆளுமை :

தேன்மொழி அம்மையார் : கோபியில் அவினாசிலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி.தேன்மொழி அம்மையார் எங்களுக்கு பவானி சாகர் சுற்றுலா சென்ற அன்றுதான் பழக்கம்.நீண்ட நாள் பழகியவர் போல் எங்களை அன்புடன் பார்த்துக்கொண்டார்.அவரது சுறுசுறுப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது.சமையல் அருமையாக செய்து எங்களுக்கு அன்புடன் பரிமாறினார்.சுற்றுலா சென்றபோதும் எங்களுக்கு அருமையான உணவு அதிகாலையில் எழுந்து செய்து எடுத்து வந்து அன்புடன் பரிமாறினார்.போட்டோக்கள் எடுக்கும்போது ஆர்வமுடன் ,வித,விதமாக யோசித்து எடுத்துக்கொண்டார்.வீட்டுக்கு வந்த பிறகும் சலிக்காமல்,சிறிதுகூட அலுப்பு இல்லாமல் சிரித்த முகத்துடன் வண்டி எடுத்துக்கொண்டு எங்களை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டதுடன் எங்களுக்கு நல்ல சகோதிரியாக பழகினார்.என்னை வியப்பில் ஆழ்த்திய ஆளுமை.பாராட்டுக்கள்.

அந்தோணி சார்லஸ் : (பட்டதாரி ஆசிரியர் ) : நாங்கள் பவானி சாகர் செல்ல வேண்டும் என்ற உடன் எங்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் பட்டதாரி ஆசிரியர் சார்லஸ் அவர்கள்.முதன் முதலில் என்னை  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு NMMS தேர்வுக்காக தொடர்பு கொண்டார்கள்.அதுமுதல் அவரது தொடர்பு என்னை ஈர்த்தது. அவரை சுற்றுலாவின் மூலம்தான் முதன் முதலாக சந்தித்தேன்.எங்களை பவானி சாகர் அழைத்து சென்று,பண்ணாரி அழைத்து சென்று நல்ல உதவி செய்தார் .அன்னாரின் அப்பா,அம்மாவிடம் பேசியது மறக்கமுடியாத அனுபவம்.நண்பருக்கு நன்றிகள் பல.

சென்னிமலை வட்டாரத்தை சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் : அன்னாரை நேரில் சந்திக்கவில்லை.ஆனால் வாட்ஸப்பில் பதிவு இட்ட உடன் எங்களுக்கு அருமையான வழிகாட்டுதலை விளக்கி பதிவிட்டார்.அது எங்களுக்கு நல்ல உதவியாக இருந்தது.

ஈரோடு ஆசிரியை விசாலாட்சி : எங்களுக்கு பயணம் தொடர்பாகவும்,ஈரோடு பெரியார் அண்ணா நினைவகம் தொடர்பாகவும் விளக்கி கூறினார்கள்.
                                                இன்னும் வாட்சப் மூலம் கோவை பேராசிரியர் பிருந்தா கணேசன்,தோழர் பவள சங்கரி உட்பட பலர் பல்வேறு தகவல்கள் பதிவிட்டு உதவி செய்தார்கள்.அனைவருக்கும் நன்றிகள் பல.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653





No comments:

Post a Comment