Wednesday 29 May 2019

  உண்டியல் சேமிப்பில் கஜா புயல் நிவாரணம் -பிளாஸ்டிக் -டெங்கு - தேர்தல் விழிப்புணர்வு என 

சமுதாயத்தோடு இணைந்து செயல்படும் பள்ளி 





 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த கல்வியாண்டில் சுமார் 25க்கும் மேற்பட்ட சமுதாய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
                                  சமுதாய நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதால் மாணவர்களுக்கு இளம் வயதில் பல்வேறு நற்சிந்தனைகள் தோற்றுவிக்கபடுவதாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.மாணவர்கள் பல்வேறு சமுதாய நிகழ்வுகளில் பங்கேற்க பள்ளியில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதால் மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் இடையில் பள்ளி ஒரு பலமாக செயல்படுகிறது.மாணவர்களும்  பல்வேறு புதிய தகவல்களை தெரிந்துகொள்வதுடன் அதனை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் எடுத்து சொல்வதிலும் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.இதனால் இளம் வயதில் சமுதாயத்தின் நிகழ்வுகள் மாணவர்களுக்கு தெளிவாக தெரிகிறது.இதனால்தான் எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் பல்வேறு சமுதாயத்தோடு தொடர்புடைய நிகழ்வுகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம் .இந்த ஆண்டு 25க்கும் மேற்பட்ட சமுதாய தொடர்புடைய நிகழ்வுகளில் இப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் என்று கூறினார்.

                                             தேவகோட்டை கீழக்குடியிருப்பு பகுதியில் மக்கள் அதிகம் உள்ள வீதிகளில் மாணவர்களுடன் சென்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் , த .மு.எ .ச.- கலை இலக்கிய இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மாணவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் ,   நகர சிவன் கோவிலில் சேக்கிழார் விழாவில் நடைபெற்ற பெரியபுராணம் மூன்று நாள் முற்றோதல் நிகழ்வில் பொது மக்களுடன் மாணவர்கள் பங்கேற்றது, வாரம்தோறும்  நகர சிவன்கோவிலில் நடைபெறும் வாரவழிபாட்டில் பொது மக்களுடன் மாணவர்கள் பங்கேற்றது,டெங்கு காய்ச்சல் பரவிய நேரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில்   நாடகம் மூலம் பொதுமக்களுக்கு
 விழிப்புணர்வு ஏற்படுத்தியது,புதிய முறையில் டெங்கு விழிப்புணர்வு முகாமை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சப் கலெக்டர் தலைமையில் பள்ளியில் நடத்தியது,விபத்துகள் இன்றி பொதுமக்கள் தீபாவளி கொண்டாடடும் வகையில் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடியது,கந்தர்சஷ்டி விழாவில் பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியது,சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தியது,பள்ளியை சுற்றி உள்ள பொதுமக்களுடன் இணைந்து  சமத்துவ பொங்கல் கொண்டாடியது,பெற்றோரை அழைத்து அவர்களுக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கியது,பி.எஸ்.எல்.வி ஏவுகணை ஏவியவதற்கு வாழ்த்து தெரிவித்தல் நிகழ்வு,காஸ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி தெரிவித்தல்,பொது மக்களுக்கு பள்ளியில் நீதியரசர்கள் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தி சட்டம் தொடர்பான பயிற்சி வழங்கியது,தீயணைப்பு துறையின் மூலம் பேரிடர் மேலாண்மை பயிற்சி ,பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு சென்று மாணவர்களின் மூலம் நாடகம்,உரையாடல்,கவிதை வழியாக தேர்தல் விழிப்புணர்வு ,பள்ளியில் பொதுமக்களுக்கு ரங்கோலி போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது,தமிழகத்தில் புதிய முறையில் அஞ்சல் அட்டை மூலம் பொதுமக்களுக்கு சப் கலெக்டர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது,மதுரை வானொலியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது,தூய்மை இந்தியா திட்டத்தில் தேவகோட்டை முக்கிய வீதிகளின் வழியாக சென்று சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது,கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு பள்ளி மாணவர்களின் உண்டியல் வசூல் மூலம் நிவாரண உதவி வழங்கியது ,தொற்றா நோய் விழிப்புணர்வு நிகழ்வை பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு அரசு மருத்துவர் வரவழைத்து சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்உண்டியல் சேமிப்பில் கஜா புயல் நிவாரணம் ,பிளாஸ்டிக்-டெங்கு-தேர்தல் விழிப்புணர்வு என இந்த கல்வி ஆண்டில் 25க்கும் மேற்பட்ட சமுதாய முன்னேற்றம் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்றதாக தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.








No comments:

Post a Comment