Saturday 1 September 2018

திருவீழிமிழலை , திருவிருக்குக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பாராட்டு





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் திருவீழிமிழலை ,திருவிருக்குக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
                                       விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற திருவீழிமிழலை ,திருவிருக்குக்குறள்  ஒப்புவிக்கும் போட்டியில் பங்கு பெற்ற முத்தய்யன் ,தேவதர்ஷினி,ஜெயஸ்ரீ,திவ்யஸ்ரீ,சந்தோஷ்,பிரிஜித்,முகல்யா , உட்பட 20 மாணவர்களுக்கும்,  பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் கருப்பையா   நன்றி கூறினார்.
                     
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் திருவீழிமிழலை ,திருவிருக்குக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment