Wednesday, 5 September 2018

ஆசிரியர் தின விழா 

மாணவர்கள் தினப்பட்டியலை பழக்கப்படுத்தினால் எளிதில் வெற்றி பெறலாம் 

கல்லூரி முதல்வர் பேச்சு 




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
                                                   விழாவிற்கு வருகை தந்தவர்களை ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.காரைக்குடி டாக்டர் உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயஸ்ரீ ஆசிரியர் தின உரை நிகழ்த்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.முதல்வர் பேசும்போது ,மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற தினப்பட்டியல் போட கற்று கொள்ளுங்கள்.இலக்கை நிர்ணயித்து ஆறு வழிகளில் அதனை அடைய முயற்சி செய்யுங்கள் என்று பேசினார்.ஆசிரியர் தினம் தொடர்பாக மாணவிகள் கீர்த்தியா,கிருத்திகா ,பாக்கியலெட்சுமி ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவில் காரைக்குடி டாக்டர் உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயஸ்ரீ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment