Wednesday 12 September 2018

 வீணான பொருட்களில் இருந்து பூத்தொட்டி, குப்பை தொட்டி,பை ,பைல் ,தொப்பி செய்து அசத்திய மாணவர்கள் 

தூய்மை விழிப்புணர்வு நிகழ்வு 

சுகாதார கண்காட்சி 




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.
                                       விழிப்புணர்வு நிகழ்வில்   ஆசிரியை முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.மாணவர்களுக்கு சுற்றுப்புற சுகாதாரம்,  தூய்மை சார்ந்த விவரங்களையும் அதன் பயன்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விளக்கி கூறினார்.வீணான பொருட்களை கொண்டு உள்ளூர் கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் விதமாக கலைநயத்துடன் கூடிய குப்பை தொட்டி, நியூஸ் பேப்பரில் இருந்து பூத்தொட்டி,தொப்பி,பை ,பைல் தயாரித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.சுகாதார கண்காட்சியும் நடைபெற்றது.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்வில் வீணான பொருட்களை கொண்டு உள்ளூர் கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் விதமாக கலைநயத்துடன் கூடிய பூத்தொட்டி , குப்பை தொட்டி, நியூஸ் பேப்பரில் இருந்து தொப்பி,பை ,பைல் தயாரித்த மாணவர்கள் தாங்கள் செய்த பொருள்களுடன் உள்ளனர்.

No comments:

Post a Comment