Monday 10 September 2018

மாணவர் தலைவர் பதவியேற்பு 

மாணவ சட்டசபை  பதவியேற்பு விழா 




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  மாணவ சட்டசபை   பிரதிநதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பதவியேற்பு விழா நடைபெற்றது.
                              
                                 விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும்  ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்    தலைமை தாங்கினார்.தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி புதிய மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் .பதவியேற்ற மாணவ தலைவர்கள் உறுதிமொழி வாசித்து,ஒப்புகை சீட்டில் கையெழுத்திட்டு தங்களின் புகைப்படம் ஒட்டிய சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.மாணவ  தலைவராக காயத்ரியும், துணை தலைவராக அய்யப்பனும் பதவியேற்று கொண்டனர் .தலைவர்கள் இருவரும் வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.தேர்தல் அலுவலராக ஆசிரியர் கருப்பையா செயல்பட்டார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்ற தலைவர்களுக்கு தே பிரித்தோ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி பதவி பிரமாணம் செய்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.




மேலும் விரிவாக :

 
மாணவர் தலைவர் பதவியேற்பு 

மாணவ சட்டசபை  பதவியேற்பு விழா 

புதிய மாணவ சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு 

விறுவிறுப்பான வாக்கு பதிவில் வெற்றி பெற்ற மாணவர்கள்

 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் ஜனநாயக முறைப்படி மாணவர்களுக்கான  தேர்தல்  வாக்குச்சாவடி அமைத்து ஒட்டு போடப்பட்டு ,கையில் மை வைத்து ,வாக்கு பதிவு நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதன் தொடர்ச்சியாக மாணவ சட்டமன்ற முதலமைச்சர் உட்பட மாணவ அமைச்சர்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து பதவியேற்பு விழா நடைபெற்றது.


 

                                                               விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும்  ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்    தலைமை தாங்கினார்.தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி புதிய மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் .பதவியேற்ற மாணவ தலைவர்கள் உறுதிமொழி வாசித்து,ஒப்புகை சீட்டில் கையெழுத்திட்டு தங்களின் புகைப்படம் ஒட்டிய சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.மாணவ  தலைவராக காயத்ரியும், துணை தலைவராக அய்யப்பனும் பதவியேற்று கொண்டனர் .தலைவர்கள் இருவரும் வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.கல்வி அமைச்சராக நித்யகல்யாணியும்,வேளாண் துறை அமைச்சராக சிரேகாவும்,மக்கள் தொடர்பு துறை அமைச்சராக பாக்யலட்சுமியும்,உணவு துறை அமைச்சராககிருத்திகாவும்,சுகாதார துறை அமைச்சராக சந்தியாவும் பதவியேற்று கொண்டனர்.மாணவர்கள் புதிய பொறுப்புகளை சிறப்பாக செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.தேர்தல் அலுவலராக ஆசிரியர் கருப்பையா செயல்பட்டார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்ற தலைவர்களுக்கு தே பிரித்தோ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி பதவி பிரமாணம் செய்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.


பரபரப்பான வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி
நன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ முதலமைச்சர்
பள்ளி மாணவ முதலமைச்சர் சி.காயத்ரி 
பள்ளி மாணவ முதலமைச்சர் சி.காயத்ரி தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மாணவ துணை முதல்வர் பெ.அய்யப்பன் தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.






No comments:

Post a Comment