Monday 6 August 2018

தேவகோட்டை பள்ளியில் பன்முக திறமையை வளர்த்துக்கொள்ள வந்துள்ள துபாய் நாட்டின் ஒன்றாம்  வகுப்பு மாணவர்

எனக்கு ரொம்ப பிடித்த பள்ளி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

அறிவியல் கண்காட்சி  துபாயில் பள்ளியில் பார்த்ததே கிடையாது - தேவகோட்டை பள்ளியில்தான் பார்த்து பிரமித்தேன் என்று தன் மழலை மொழியில் பேசி அசத்துகிறார் துபாய் நாட்டில் ஒன்றாம் வகுப்பு மாணவர்

  ஓடி,ஆடி பள்ளியில்   விளையாட சொல்வது எனக்கு பிடித்துள்ளது - துபாயில் நான் படிக்கும் பள்ளியில் விளையாண்டதே இல்லை- துபாயில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் தேவகோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் விளையாண்ட அனுபவத்தை தனது மழலை மொழியில் சொல்லி மகிழ்ச்சி




தேவகோட்டை - அரசு உதவி பெறும் பள்ளியில் பன்முக திறமையை கற்றுக்கொள்ள துபாயில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர் தேவகோட்டை  வந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில்  மாணவர்களின்  பன்முக திறனை வளர்க்கும் வண்ணம் பல்வேறு விதமான வாழ்க்கை கல்வியை வழங்கி வருகிறார்கள்.வலைத்தளம்,யூ டியூப் ,பேஸ்புக்கில் கணக்கு துவங்கப்பட்டு பள்ளியில் பல்வேறு ஆளுமைகளுடனான கலந்துரையாடல்,களப்பயணம் ,ஆளுமைகளின் பேச்சுக்கள்,மாணவர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.இப்பள்ளியின் செயல்பாட்டை துபாயில்  வசித்து வரும் மாணவர் சிவபாலன் (வயது 5) இவரது தாத்தா ஐயப்பன் இப்பள்ளி தொடர்பாக இணையத்தில் அறிந்து உள்ளார்.கோடை விடுமுறையில் தேவகோட்டையில்  உள்ள தாத்தா வீட்டுக்கு வந்த சிவபாலன் , பன்முக திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் இப்பள்ளியில் ஆர்வமுடன் பயின்று  வருகிறார்.


இதுகுறித்து மாணவர் சிவபாலன் தனது மழலை மொழியில் கூறுகையில், ‘துபாயில்  உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறேன். அங்கு தற்போது கோடை விடுமுறை. எனது தந்தையின் சொந்த ஊர் தேவகோட்டை.சிறு வயது முதலே துபாயில் தான் உள்ளேன்.ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையில் தாத்தா ஐயப்பன்  வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு எனது தாத்தா அறிவுரையின் படி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   ஒரு மாதம் படிக்க சொன்னார்.தமிழ் எழுத ,வாசிக்க கற்றுக்கொள்ளவும் ,பன்முக திறமையை வளர்த்துக்கொள்ளவும் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் அனுமதியுடன் படிக்க வந்துள்ளேன்.
                                                சமீபத்தில் நடைபெற்ற பள்ளி அறிவியல் கண்காட்சியில் எனக்கு அனைத்தும் பிடித்து இருந்தது.இது தொடர்பாக எனது தாத்தா,பாட்டியிடம் சென்று சொன்னபோது அவர்கள் மிகவும் ஆச்சிரியத்தில் என்னை வியப்புடன் பார்த்தார்கள்.இந்த பள்ளியில் நன்றாக விளையாட சொல்கிறார்கள்.துபாயில் நான் படிக்கும் பள்ளியில் அவ்வளவாக விளையாட சொல்ல மாட்டார்கள்.இங்குள்ள மாணவர்களுடன் ஒன்றாக  அமர்ந்து படிக்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.தமிழும் எழுத கற்றுக்கொண்டேன்.அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வரும்போதும் இந்த பள்ளிக்கு வருவேன் என்று தனது மழலை மொழியில் சொன்னார்.


 சிவபாலனின் தாத்தா ஐயப்பனிடம்  பேசினோம். ``எங்க சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை . என் மகன்  துபாயில்  செட்டிலாகி பல  வருஷமாச்சு. எனது பேரன்கள்  துபாயில் உள்ள   பள்ளியில் படிச்சிட்டு இருக்காங்க. தற்போது கோடை விடுமுறை என்பதால் ,ஒரு மாதத்துக்கு முன்பு விடுமுறையில் தேவகோட்டை வந்தார்கள்.அப்போது ஒரு மாதம் முழுவதும் ,வீட்டில் இருக்காமல் தமிழ் எழுத வாசிக்கவும்,பன்முக திறமையை வளர்க்கவும் தேவகோட்டையில் உள்ள பள்ளியில் விடுமுறைக்கு மட்டும் அனுப்பலாம் என்று எண்ணினேன்.தேவகோட்டையில் பன்முக திறமையை வளர்ப்பதோடு ,மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கி வரும் பள்ளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி என்பதை பல்வேறு இணையத்தளங்கள்,செய்தி தாள்களின் மூலம் அறிந்தேன்.இது போன்று அரசு பள்ளிகளில் படிக்கும்போதுதான் இந்த காலத்து இளம் வயது மாணவர்களுக்கு சமுதாயத்தின் நிலைமை தொடர்பாக தெளிவாக புரியும் என்ற எண்ணத்தோடு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் அனுமதியோடு இப்பள்ளியில் எனது பேரன் ஒரு மாதமாக  படித்து வருகிறார்.சமீபத்தில் இப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பார்த்து விட்டு எங்கள் வீட்டில் வந்து எனது பேரன் பல்வேறு அறிவியல் தகவல்களை பேசும்போது எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.இது தொடர்பாக பள்ளி வழிபாட்டு கூட்டத்திலும் எனது பேரன் தன்னம்பிகையுடன் பேசி உள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தோம்.தற்போது தமிழும் நன்றாக வசிக்கிறார்.அடுத்த ஆண்டு வரும்போதும் இதே பள்ளிக்கு அனுப்ப உள்ளோம் என்று கூறினார். 
 

தலைமையாசிரியர் சொக்கலிங்கம்  கூறுகையில், துபாயில் படித்து வரும் சிவபாலன் இப்பள்ளியில் வந்து பன்முக திறமையை வளர்த்து கொள்வதுடன் தமிழும் எழுத,வாசிக்க கற்றுக்கொள்ள ஒரு மாதம் மாணவரை அனுப்ப வேண்டும் என்று மாணவரின் தாத்தா ஐயப்பன் கேட்டார்கள்.நானும் சரி என்று சொல்லி அவரை முதல் வகுப்பில் அமர வைத்து படிக்க வைத்தேன்.மாணவரும் அனைத்து மாணவர்களுடனும் ஒன்றாக அமர்ந்து ஆர்வத்துடன் கல்வி பயின்றார்.எங்கள் வழிபாட்டு கூட்டத்திலும் தன்னம்பிகையுடன் பேசினார்.துபாயில் படிக்கும் மாணவர் தங்களுடன் அமர்ந்து படிப்பது ,ஒன்றாக சாப்பிடுவது என்பதை எண்ணி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.பள்ளியில் ஊக்கவிக்கப்படும் பயிற்சியின் காரணமாக , மாணவர் சிவபாலன் பலமுறை வழிபாட்டு கூட்டத்தில் பேசி அனைவரையும் ஆச்சிரியத்தில் அசத்தினார்.இது மாணவர்களிடம் நல்ல  மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது .இவ்வாறு கூறினார்.




No comments:

Post a Comment