Monday, 20 August 2018

கருத்துள்ள,வயிறு வலிக்க  சிரிக்க வைக்கும்,ஆபாசம்,அடிதடி இல்லாத அருமையான படம் கோலமாவு கோகிலா 


  வயிறு வலிக்க வைக்க சிரிக்க வைக்கும் படம் 
                                    கோலமாவு கோகிலா படத்திற்கு நேற்று ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) தியேட்டருக்கு சென்று இருந்தேன்.கொஞ்சம் யோசனையோடுதான் சென்றேன்.படம் எப்படி இருக்கோமோ? என்று.ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சூப்பர் படம் பார்த்த அனுபவம்.படத்தின் இரண்டாவது பகுதியில் ஒரு வேனுக்குள் குடும்பத்துடன் நடக்கும் ஒரு காட்சி நீண்ட நேரம் வயிறு குலுங்க இல்லை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடுகின்றனர்.நமது நினைவுகளை எல்லாம் மறந்து நாம் தொடர்ந்து சிரிக்க வேண்டி இருக்கும்.அருமையான கதை அமைப்பு .

சமுதாய அவலங்களை தோலுரிக்கும் கதை அமைப்பு 
                                  சமுதாயத்தில் இப்போது நடக்கும் ,நடந்து கொண்டு இருக்கும் பல்வேறு அவலங்களை மிக எளிதாக மக்களுக்கு புரியும் வகையில் இயக்குனர் விளக்குகின்றார்.அதுவும் போரடிக்காமல் இடை ,இடையே நகைச்சுவை கலந்து தொடர்ந்து கொடுத்துக்கொண்டு உள்ளார்.நன்றாக யோசித்து ,யோசித்து கதையை வடிவமைத்து உள்ளனர்.ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண்களாக  பிறந்து , இப்போதுள்ள மருத்துவ செலவுகளை சமாளிப்பது எவ்வளவு கஷ்டமான செயல் என்பதை அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
                                                    நடுத்தர குடும்பத்தில் பிறந்து அழகாக இருக்கும் பெண் எப்படியெல்லாம் சங்கடப்படுத்தபடுகிறார், அதனால் அந்த பெண் படும் வேதனைகள் என்ன என்பதையெல்லாம் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக காண்பித்து உள்ளனர்.மளிகை கடைகாரர் காதலிப்பது,அதனை எவ்வாறு பிரச்சினை இல்லாமல் சமாளிப்பது, இரண்டாவது பெண்ணை திருமணம் செய்ய கேட்டு வரும் மாப்பிளையை அழகாக சமாளிக்கும் அம்மா நடிப்பு,போதை பொருள் விற்பது தவறு என்று தெரிந்தாலும் அதனை எவ்வாறு ,ஏன் செய்கிறோம் என்று புரிந்து மொத்த கும்பலையும் பிடித்து கொடுப்பதுடன் ,அவர்களின் தலைவனை கொள்ளும் வரை காட்சிப்படுத்தி,அதன் பிறகு காவல் ஆய்வாளரையும் அழகாக டீல் செய்யும் நயன்தாராவின் நடிப்பு சூப்பர்.இதற்கான கதை அமைப்பு அருமை.

நிமிடத்துக்கு நிமிடம் மாறும் கதை :
  
               நாம் யோசிக்கும் வகையில் கதை இல்லாமல் இருப்பது மற்றொரு சிறப்பு .பொதுவாக தமிழ் சினிமாக்களில் சில முடிவுகள் நாம் நினைத்தால் அதுபோல் காட்சிகள் படத்தில் வரும்.ஆனால் இந்த படத்தில் நாம் எந்த முடிவையும் நாம் எடுக்கவே முடியாது.அங்கெங்கெ திரில் வைத்து நம்மை (லெ .சொக்கலிங்கம் ,காரைக்குடி ) சீட்டின் நுனியில் அமர வைத்து படம் பார்க்க வைத்து விடுகின்றனர்.பொதுவாக வில்லன் இறந்த பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோ அல்லது ஹீரோயினிக்கு காவல் துறையில் வேலை கொடுப்பார்கள்.ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்லாமல் ,காவல் துறை ஹீரோயின் மீது நடவடிக்கை எடுக்க முயல அதையும் அருமையாக சமாளித்து வெளியாகிறார் ஹீரோயின்.சூப்பருங்க.

சபாஷ் வாங்கும் இடங்கள் :
                                                 படம் முழுவதுமே சபாஷ் தான் .இருந்தாலும் 

1) ஹீரோயினை காதலிக்க முதல் காட்சியில் வரும் சேகர் கேரக்டர் .நகைச்சுவை அருமை.அதனை சமாளிக்கும் விதம் இன்னும் அருமை.

2) ஆங்காங்கே சேகர் மளிகை கடையில் வரும் சிறு பையன் வசனங்கள்

3) நயன்தாரா பல இடங்களுக்கு விட முயற்சியுடன் பணம் கேட்டு சென்று நடுத்தர குடும்பத்தில் ஆண்மகன் இல்லாவிட்டாலும் பெண் குழந்தையாக இருந்து முயற்சி எடுக்கும் பல இடங்கள் 

4) தோட்டத்தில் போதை பொருளை பதுக்கி வைக்கும் பாஸாக வரும் மொட்டை பேசும் பல மொழிகள் .பல வசனங்கள் பேசினாலும் நினைவில் நிற்கிறார்.

5) காவல் துறையில் கருப்புஆடு இருப்பதை மிக நாசுக்காக பல கட்டங்களுக்கு பிறகு காட்சிப்படுத்தும் விதம்.

6) ஒரு வேனுக்குள் குடும்பத்தையே கூட்டி வந்து மிக அருமையாக சிரிக்க வைக்கும் காட்சிகள் .வயிறு வலித்து சில நிமிடங்களில் வெளியில் செல்லலாமா என்று சிந்தித்த வைத்த நிமிடங்கள் (இரவு முழுவதும் வீட்டில் சொல்லி,சொல்லி சிரித்து கொண்டு இருந்தோம் )

7) நயன்தாரா பாலியல் கொடுமைக்கு உள்ளனர் என்று எண்ணி கொண்டு மிக முக்கிய கட்டத்திலும் ,நீ அவங்க உடம்பை நினைக்கவில்லை,காதலை தான் எண்ணினாய் ,எனவே நீ அவளை கட்டிக்கொள் என்று சொல்லும் காட்சிகள் அர்த்தமுள்ளது.

8) படம் முழுவதும் சீரியசாக கொண்டு செல்லாமல்,கொஞ்சம் சீரியஸ்,கொஞ்சம் நகைச்சுவை என்று படத்தின் இறுதி வரை அருமையாக எடுத்துச்சென்று விதம் பிடித்து இருந்தது.

9) படத்தை பார்த்து விட்டு வந்து என்னை ( லெ .சொக்கலிங்கம் ,காரைக்குடி ) இவ்வளவு நன்றாக படம் தொடர்பாக எழுத தூண்டியது.

10) இடைவேளைக்கு பிறகு ராகுல் ட்ராவிட் வராத,குடி,குடியை கெடுக்கும் என்கிற வாசகம் பேசப்படாத ,புற்றுநோயை உண்டாக்கும் என்கிற வசனங்கள் வராத படம் இது என்பது தனி சிறப்பு 

11) அடிதடி இல்லாத (லேசான துப்பாக்கி சூடு தவிர  ) தீவிர சண்டைக்காட்சிகள்,ஆபாச காட்சிகள் இல்லாத படம் இது என்பது தனி சிறப்பு.

12) நயன்தாரா உட்பட படத்தில் நடித்த அவரது குடும்பம் முழுவதும் அருமையான நடிப்பு 

13) காஸ்டியூம் செலவே இல்லாத ஒரு படம்.மேலும் இண்டோர் ,அவுட்டோர் செலவு இல்லாத படம்.குறைந்த செலவில் அருமையாக படத்தை எடுத்து நகர்த்தி செல்கின்றனர்.

பல இடங்களில் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் படம்
                                                     சமுதாயத்தில் நடுத்தர மக்கள் படும் துன்பங்களையும் , அதனால் அவர்கள் ஒடிந்து உட்கார்ந்து விடும் நிலையை விடுத்து மாற்றி யோசித்து எவ்வாறெல்லாம் தன்னை சரிப்படுத்தி தனக்கு உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம் என்பதை சிறிய அளவில் யோசிக்க வைக்கும் வகையில் அருமையான கதை அமைப்பு.பாராட்டுக்கள் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு.வாழ்த்துக்கள்.

நிறைவாக ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி )

                                                      ஒரு குழந்தை தனது தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்ய அதிசயம் என்ற மருந்தை தேடி அலைந்ததாகவும் , மெடிக்கல் கடையில் சென்று கேட்டதாகவும் ,அங்கு வந்த புகழ் பெற்ற மருத்துவர் உடனடியாக உதவி செய்ததாகவும் ஒரு கதை உண்டு.அதனை இந்த கதையில் வைத்து பார்த்தாலும் ,நயன்தாரா பல முயற்சிகள் எடுத்து தனது முயற்சியானால் வெற்றி பெறுவதை பார்க்கும்போது உண்மையில் அருமையான கதை அமைப்பு.

லெ .சொக்கலிங்கம் ,காரைக்குடி .
chokklaingamhm@gmail.com

No comments:

Post a Comment