Sunday, 12 August 2018

படைப்பாளிகளை உருவாக்குபவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே 

வார இதழின் உதவி ஆசிரியர் பேச்சு

எழுத்தாளர் மாணவர்களுடன் கலந்துரையாடல் 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எழுத்தாளர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
                                   நிகழ்வுக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கல்கி வார இதழின் உதவி ஆசிரியர் பொன் .மூர்த்தி மாணவர்களிடம் பேசும்போது , மரம் எவ்வாறு முதலில் பூத்து ,காய்த்து ,கனியாகி நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ அதுபோல் விதை ஊன்றப்பட்டு மரமாகிறது.இந்த விதைகள் ஊன்றப்படும் இடம் தொடக்கப்பள்ளிகளே ஆகும்.கற்ற கல்வியோடு உயர்ந்த கொள்கையோடு உன்னத பழக்கத்தோடு தன்னம்பிக்கை,கடினமுயற்சி,தனித்திறமை,நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உங்களை மேம்படுத்தி கொள்ள தொடர்முயற்சி எடுக்க வேண்டும்.இதற்கு இந்த பள்ளி நல்ல வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.இவ்வாறு பேசினார்.மாணவர்கள் காயத்ரி,மாதரசி,வெங்கட்ராமன்,அய்யப்பன்,சந்தியா உட்பட பலர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் 
 பள்ளியில் எழுத்தாளர் பொன் . மூர்த்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார். 

No comments:

Post a Comment