WELCOME TO KALVIYE SELVAM

உழைப்பே உயர்வு

Thursday, 17 May 2018

 நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மலர்கள் 

மரம் நடுவோம் ,மழை பெறுவோம்
 
கோடை வெயிலிலும் தொடர்ந்து பாதுகாத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்க்கும் பள்ளி 







தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் கோடை வெயிலிலும் செடிகளுக்கு தண்ணீர் விட்டு மரம் வளர்த்து சோலையாக மாற்றி வருகிறார்கள்.
                                          கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மா 3, பசுமை படை அமைப்புகள் மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணை மூலம் பள்ளியில் மரங்கள் நடப்பட்டன.அவற்றை மாணவர்களே நட்டு வளர்த்து வருகின்றனர்.கொளுத்தும் கோடை வெயிலிலும் மரங்களுக்கும்,செடிகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி மலர்கள் பூத்து குலுங்கும் சோலையாக பள்ளியினை மாற்றி வருகின்றனர்.இது எப்படி சாத்தியமாயிற்று ? சொல்கிறார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

அமைப்புகளின் மூலமாக செடிகள் வழங்குதல் :
                                              மா 3 அமைப்பு ,பசுமை படை மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணை சார்பாக வழங்கப்பட செடிகளை பள்ளி வளாகத்தில் மாணவர்களை வைத்து நட செய்தோம்.

மாணவர் பசுமை படை குழு :
                                     பள்ளி மாணவர்களை கொண்டு பசுமை படை குழு அமைத்தோம்.அதன் வழியாக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு செடி கொடுத்து அதனில் அவர்களின் பெயர்களை எழுதி அந்த செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்க செய்தோம்.அதன் தொடர்ச்சியாக மாணவர்களும் ஆர்வத்துடன் செடிகளுக்கு தினசரி தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர்.இந்த குழுவில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மற்றும் அவருக்கு கீழ் உறுப்பினர்கள் இருப்பார்கள்.அவர்கள் தாங்களாகவே தண்ணீர் கொண்டு வந்து தங்களின் செடிகளுக்கு ஊற்றி விடுவார்கள்.இதில் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால் ஆசிரியர்கள் அதனை சரி செய்து விடுவார்கள்.

மூலிகை செடி,பூத்து குலுங்கும் செடிகள் :
                                         தூதுவளை,துளசி போன்ற மூலிகை செடிகளையும்,செம்பருத்தி,அரளி  போன்ற மலர்களையும் மாணவர்கள் ஆர்வத்துடன் தொடர்ந்து வளர்த்து வருகின்றனர்.அந்த மலர்கள் பூத்து குலுங்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக செல்கின்றனர்.

பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வந்து வெயில் காலத்தில் தண்ணீர் ஊற்றுதல் :
          பள்ளியில் போதிய அளவில் தண்ணீர் இருந்தபோதும்  கடுமையான வெயில் காலத்திலும்  மாணவர்கள் ஆர்வத்தின் காரணமாக  பாட்டில்களில் தண்ணீர் அடைத்து பள்ளிக்கு கொண்டு வந்து தங்கள் வைத்த செடிகளுக்கு பாசத்துடன் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.இதனால் செடிகளும் மகிழ்ச்சியுடன் பூத்து குலுங்கி வருகின்றன.

கீரை,தட்டப்பயறு  ,தக்காளி செடிகள் வைத்து தண்ணீர் ஊற்றுதல் :
                                                  மாணவர்கள் அவர்களாவே ஆர்வமுடன் கீரை போன்ற செடிகளை கொண்டு வந்து தனியாக எழுதி ஒட்டி அங்கு பயிர் செய்து தண்ணீர் ஊற்றி அவற்றை வளர்த்து வருவதுடன் அவ்வப்போது கீரை,தட்டப்பயிறு போன்றவற்றை அறுவடை செய்து பள்ளிக்கும் கொடுத்து வருகின்றனர்.

பள்ளியின் வெளியே நிழல் தரும் மரங்கள் :


       பள்ளியின் வெளியில்  நல்ல நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.மரங்களை வெளியில் நட்டத்துடன் அதனை பாதுகாக்கவும் சில ஏற்பாடுகளை செய்தோம்.காரைக்குடி சென்று கம்பி வலை வாங்கி வந்து அதனை ஆடு,மாடு போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக காப்பற்றுவதற்காக முள்  செடிகளை சுற்றி நட்டு பாதுகாத்தோம்.

                              அவை நன்றாக வளருவதற்காக தினசரி தண்ணீர் ஊற்றினோம்.கடுமையான வெயில் இருந்தும் கூட மரங்கள் சிறிது  வளர்ந்துவிட்ட நிலையில்  அவை பள்ளியின் வெளியில் இருப்பதால் அவற்றை மேலும் பாதுகாப்பாக காப்பற்றவும், பள்ளி கோடை விடுமுறை நாட்களிகளிலும்  தொடர்ந்து தண்ணீர் ஊற்றி அதனை நல்ல முறையில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறோம்.கோடை வெயிலிலும் எப்படி மரங்கள் சந்தோசமாக வளர்ந்து வருகின்றன என்று படத்தில் பாருங்கள்.

ஆடுகளிடமிருந்து செடிகளை காப்பாற்றுவதுதான் மிகுந்த சிரமம் :
                                             வெளியில் கம்பி கட்டி,பாதுகாத்து வளர்த்தும் கூட ஒரு செடி நன்றாக வளர்ந்த நிலையில் ஆடுகள் கால் வைத்து மரத்தில் எக்கி பட்டையை உரித்து சாப்பிட்டதால் அந்த மரத்தை மீண்டும் உருவாக்குவதற்குள் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.எனவே இப்போது நன்றாக வளர்ந்தாலும் முள் செடிகளை போட்டு தொடர்ந்து ஆடுகளிடம் இருந்து பாதுகாத்து வருகின்றோம்.

பள்ளியின் உள்ளே பறவைகளுக்கு உணவாகும் செடிகள் வளர்ப்பு :
                         பள்ளியின் உள்ளே பறவைகளுக்கு உணவாகும் செடிகள் தொடர்ந்து மூன்று ஆண்டாக வளர்த்து வருகின்றோம். தொடர்ந்து செடிகள் மரங்களாக வளர்ந்து தற்போது நல்ல நிழல் தருவதுடன் , பறவைகளுக்கு நல்ல உணவாகவும் அந்த மரங்களில் உள்ள பழங்கள் பயன்படுகின்றன.மேலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பழங்களை உண்பதற்காகவே சில அறிய பறவை இனங்கள் பள்ளிக்கு வருகை தருகின்றன.

மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து ஊக்குவித்தல் :
                       தொடர்ந்து தண்ணீர் ஊற்றி செடிகளை வளர்க்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தண்ணீர் ஊற்றியதற்காக பரிசுகளும் பள்ளியின்  சார்பாக வழங்கப்படுகிறது.

மாணவர்களே தொடர்ந்து செடிகளை வளர்ப்பதால் என்ன ,என்ன நன்மைகள் ஏற்படும் ?
                          மாணவர்கள்  வீடுகளிலும் இது போன்று செடிகளை ஆர்வமுடன் வளர்த்து வருகிறார்கள்.பள்ளியில் அவர்களுக்கு என்று பெயர் கொடுத்து,தனி,தனியாக மரங்களை கொடுப்பதால் தன்னுடைய மரம் என்று ஆர்வத்துடன் தினமும் பாசமாக பார்த்து கொள்கிறார்கள்.இது போக பரிசு வாங்குவதற்காகவும் தொடர்ந்து ஆர்வத்துடன் சில மாணவர்கள் செயல்படுகிறார்கள்.பல நாட்கள் அவர்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பழகி விட்டால் அவர்களுக்கு மரம் வளர்ப்பது இளம் வயதில் பழக்கமாகி விடும்.அத்துடன் அவர்கள் தற்போதே புதிது,புதிதாக பலன் தரும் செடிகளை கொண்டு வந்து நட்டு வைத்து அவர்களாகவே செடிகளுக்கு தண்ணீர் விட்டு பலன்களை பார்த்து வருகின்றனர்.மரம் செழித்தால் மனிதன் செழிப்பான் என்பதை அனுபவ பூர்வமாக பார்த்து வருகின்றோம்.
                               இவ்வாறு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறினார்.


லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.


Posted by kALVIYESELVAM at 05:31
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Archive

  • ►  2025 (150)
    • ►  July (1)
    • ►  June (27)
    • ►  May (26)
    • ►  April (25)
    • ►  March (17)
    • ►  February (30)
    • ►  January (24)
  • ►  2024 (248)
    • ►  December (25)
    • ►  November (19)
    • ►  October (27)
    • ►  September (24)
    • ►  August (31)
    • ►  July (27)
    • ►  June (13)
    • ►  May (12)
    • ►  April (15)
    • ►  March (25)
    • ►  February (16)
    • ►  January (14)
  • ►  2023 (213)
    • ►  December (13)
    • ►  November (22)
    • ►  October (18)
    • ►  September (16)
    • ►  August (17)
    • ►  July (19)
    • ►  June (13)
    • ►  May (11)
    • ►  April (20)
    • ►  March (26)
    • ►  February (14)
    • ►  January (24)
  • ►  2022 (211)
    • ►  December (15)
    • ►  November (20)
    • ►  October (18)
    • ►  September (18)
    • ►  August (20)
    • ►  July (11)
    • ►  June (14)
    • ►  May (29)
    • ►  April (16)
    • ►  March (14)
    • ►  February (9)
    • ►  January (27)
  • ►  2021 (203)
    • ►  December (26)
    • ►  November (10)
    • ►  October (17)
    • ►  September (17)
    • ►  August (24)
    • ►  July (27)
    • ►  June (19)
    • ►  May (13)
    • ►  April (18)
    • ►  March (6)
    • ►  February (11)
    • ►  January (15)
  • ►  2020 (249)
    • ►  December (10)
    • ►  November (16)
    • ►  October (10)
    • ►  September (26)
    • ►  August (14)
    • ►  July (17)
    • ►  June (19)
    • ►  May (28)
    • ►  April (53)
    • ►  March (21)
    • ►  February (13)
    • ►  January (22)
  • ►  2019 (244)
    • ►  December (17)
    • ►  November (17)
    • ►  October (28)
    • ►  September (27)
    • ►  August (19)
    • ►  July (23)
    • ►  June (20)
    • ►  May (14)
    • ►  April (18)
    • ►  March (21)
    • ►  February (16)
    • ►  January (24)
  • ▼  2018 (262)
    • ►  December (23)
    • ►  November (19)
    • ►  October (25)
    • ►  September (21)
    • ►  August (20)
    • ►  July (23)
    • ►  June (20)
    • ▼  May (21)
      • புதிய மாணவர்களுக்கு பள்ளியின் மூத்த மாணவர்கள...
      • விடுமுறைக்கு பின்பு நாளை  பள்ளிகள் திறப்பு   வில...
      • தினமலர் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம...
      •  வில்லுப்பாட்டு,நடனம்,நாடகம் மூலம் பொதுமக்களின் ...
      • Chemical Reaction- chemistry magic
      • Tiger-புலியுடன் எங்கள் பயணம்
      •  வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி  த...
      •  இயற்கையை ரசிக்க சைலன்ட் வேலி சென்று வாருங்கள்  ...
      • பள்ளி தலைமை ஆசிரியருக்கு  பாராட்டு  <!--more--...
      • ரொக்க பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு  <!-...
      • அழகான  ஐஸ் கிரீம் வண்டி செய்து அசத்திய மாணவர்  ...
      • கேளுங்க ,கேளுங்க 19ம் தேதி   கேளுங்க !   ...
      • கேளுங்க ,கேளுங்க 19ம் தேதி   கேளுங்க !    AIR ம...
      •  நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங...
      •   இன்று முதல் (17/05/2018 - 19-05-2018) மூன்று நா...
      • பெற்றோரின் ஒத்துழைப்போடு மதிய உணவில்  அசத்தும்  ...
      • திக்,திக் நிமிடங்களும் ,குடும்பத்துடன் முதல் கைது...
      • Science-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்? நட...
      • விருதுகள் மற்றும் சான்றிதல்களின் நாயகன் ரஞ்சித்...
      • LIGHTING FUNCTION நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஒளிய...
      •  இப்படியும் நடக்குமா? அதிசயம், ஆனால் உண்மை   ...
    • ►  April (18)
    • ►  March (25)
    • ►  February (22)
    • ►  January (25)
  • ►  2017 (238)
    • ►  December (24)
    • ►  November (23)
    • ►  October (19)
    • ►  September (25)
    • ►  August (15)
    • ►  July (14)
    • ►  June (27)
    • ►  May (20)
    • ►  April (26)
    • ►  March (20)
    • ►  February (14)
    • ►  January (11)
  • ►  2016 (221)
    • ►  December (18)
    • ►  November (23)
    • ►  October (17)
    • ►  September (19)
    • ►  August (19)
    • ►  July (21)
    • ►  June (28)
    • ►  May (15)
    • ►  April (11)
    • ►  March (21)
    • ►  February (18)
    • ►  January (11)
  • ►  2015 (187)
    • ►  December (15)
    • ►  November (19)
    • ►  October (19)
    • ►  September (25)
    • ►  August (13)
    • ►  July (11)
    • ►  June (11)
    • ►  May (27)
    • ►  April (11)
    • ►  March (10)
    • ►  February (7)
    • ►  January (19)
  • ►  2014 (492)
    • ►  December (44)
    • ►  November (51)
    • ►  October (99)
    • ►  September (20)
    • ►  August (26)
    • ►  July (19)
    • ►  June (26)
    • ►  May (194)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  February (3)
    • ►  January (3)
  • ►  2013 (9)
    • ►  November (9)

About Me

kALVIYESELVAM
View my complete profile

Search This Blog

Followers

Awesome Inc. theme. Theme images by molotovcoketail. Powered by Blogger.