கேளுங்க ,கேளுங்க 19ம் தேதி கேளுங்க !
சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி !
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சியை நாளை 19ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் கேட்கலாம்.மேலும் இரவு 8.30 மணி அளவில் மதுரை FM 103.3யிலும் கேட்கலாம்.தொடர்ந்து நான்காவது ஆண்டாக இப்பள்ளியின் நிகழ்ச்சிகள் மதுரை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.
AIR மதுரை வானொலியில் 19/05/2018 மே மாதம் 19 ஆம் தேதி மதியம் 2.30 MW (1269 KHZ) மணிக்கும் ,மதுரை FM வானொலியில் 103.3ல் இரவு 8.30 மணிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.அனைவரும் கேட்டு மகிழுங்கள் .இந்த தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 5 மற்றும் 12ம் தேதிகளிலும் அகில இந்திய மதுரை வானொலியில் இப்பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment