பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வருடம் முழுவதும் மானவர்களுக்கு பாடல்கள் பாடுவதற்கு பயிற்சி கொடுத்து கோடை விடுமுறையில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து சேக்கிழார் விழா பெரியபுராணம் முற்றோதுதல் நிகழ்வில் பங்கேற்க வைத்த தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் அவர்களுக்கு சேக்கிழார் விழா குழுவின் சார்பாக கோவிலூர் ஆதினம் மெய்யப்ப சுவாமிகள் பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்தார்
ரூபாய் 4600 ரொக்க பரிசு பெற்று மாணவர்கள் அசத்தல்
4286 பாடல்கள் பாடி மொத்தமாக ரூபாய் 4600 மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் தொடர்ந்து மூன்று நாட்கள் 4286 பாடல்களை பாடி சான்றிதழ் மற்றும் பரிசாக பணமும் பெற்ற சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பெரிய புராணத்தில் உள்ள 4286 பாடல்களையும் தொடர்ந்து மூன்று நாட்கள் பாடி இப்பள்ளி மாணவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் பெறுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment