Sunday, 20 May 2018

ரொக்க பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 


      தேவகோட்டை -   தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் தொடர்ந்து மூன்று நாட்கள் 4286 பாடல்களை பாடி சான்றிதழ் மற்றும் பரிசாக பணமும்  பெற்ற சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து மூன்றாவது  ஆண்டாக பெரிய புராணத்தில் உள்ள 4286 பாடல்களையும் தொடர்ந்து மூன்று நாட்கள் பாடி இப்பள்ளி மாணவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் பெறுவது குறிப்பிடத்தக்கது.

              விழாவில்  பங்கு கொண்டு பெரியபுராணத்தில் உள்ள 4286 பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்ரி,கார்த்திகேயன்,ஈஸ்வரன்,சக்திவேல்,சபரி,நித்ய கல்யாணி,சந்தியா, பாக்யலெட்சுமி,கிஷோர்குமார்,ஐயப்பன்,வெங்கட்ராமன் ஆகியோருக்கு   கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் ரொக்க  பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் , பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன், சித்ரா சுப்பிரமணியன் ,கவிஞர் பழனியப்பன் ,தெட்சிணாமூர்த்தி   ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை முத்து மீனாள் ஆகியோருக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.


பட விளக்கம் : தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் 4286 பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு பரிசு மற்றும் சான்றிதழ்களை கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள்  வழங்கினார்.உடன்  பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன், சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் ,  சித்திர சுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment