Tuesday, 22 May 2018

 வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி 

தொடர்ந்து நான்காம் ஆண்டாக
சதத்தை தாண்டியும் தொடரும் சாதனைகள்

களப்பயணம் வழியாக  வாழ்க்கை கல்வியை கற்பிக்கும் பள்ளி ஐ.எ.எஸ்.,ஐ.ஆர்.எஸ்.,விஞ்ஞானிகள்  போன்ற ஆளுமைகளுடன் கலந்துரையாடல், செய்து மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பள்ளி

தன்னம்பிக்கையோடு  வாழ்க்கைக்கான கல்வியை  கற்று கொடுக்கும் பள்ளி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் களப்பயணம் ,ஆளுமைகளுடன் கலந்துரையாடல்,பல்வேறு போட்டிகள் என மொத்தம் 128 நிகழ்வுகள் நடத்தி தொடர்ந்து நான்காவது ஆண்டாக சதத்தை தாண்டியும் சாதனைகள் தொடர்கின்றன.

  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்ளை தன்னம்பிக்கை உடையவர்களாகவும் ,கேள்விகள் அதிகம் கேட்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு களப்பயணங்களையும் ,ஆளுமை திறன் உடையவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து மாணவர்களும் பிற்காலத்தில் கல்வியில்  உயரிய லட்சியங்களை அடையும் வகையில் உருவாக்கி வருகிறார்கள் .அறிவியல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை மாணவர்களிடம் ஊக்கப்படுத்தி அதன் வழியாகவும் அறிவின் அளவை,சுயமாக சிந்திக்கும் திறனை கல்வியில் உயர்த்தியும்,எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
                          இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில்    கேள்விகள் கேட்டாலே  ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்க்கின்றனர்.இது போன்ற நிலையில் அரசு உதவி  பெறும் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு ஆளுமைகளை பள்ளிக்கு நேரடியாக  அழைத்து வந்து மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்க தூண்டி அதன் தொடர்ச்சியாக பல கேள்விகளை மாணவர்களே கேட்கும் அளவிற்கு  அவர்களுக்கு சிந்தனையை தூண்டி அவர்களது கேள்வி ஞானம் இன்று வளர்ந்துள்ளது.இது எப்படி சாத்தியமானது ? சொல்கிறார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் .
தன்னம்பிக்கையை வளர்த்தல் :
                                                       இப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள்,அபிராமி அந்தாதி போன்றவற்றை இசையோடு நடனம் மூலம் புதிய முறையில் பல்வேறு கலைகளை கற்பித்து வருகிறார்கள்.கலைகளின் மூலம்  கற்கும் இளம் வயது மாணவர்கள் இது தொடர்பான ஆளுமைகள்  வரும்போது ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு  மாணவ,மாணவியர் கூட அவர்களிடம் மிக எளிதாக கலந்துரையாடி கேள்விகள் கேட்டு பதில் பெறுவதையும் , ஆளுமைகள் பேசிய பிறகு அவர்கள் சொல்லிய கருத்துக்களை அவர்கள் முன்பாகவே எடுத்து சொல்லும் விதங்களையும் பார்த்து,இது தங்கள் அனுபவத்தில் புதுமையாக உள்ளது என ஆளுமைகள்  கூறி   வியப்பில் செல்கின்றனர். மாணவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் உள்ள நிபுணர்களை பள்ளிக்கே வரவழைத்து கலந்துரையாடல் செய்வது என்பது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் செயலாகும்.

ஒரு கல்வி ஆண்டில் 60க்கும் மேற்பட்ட ஆளுமைகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல் :
                                                                          இந்த கல்வி ஆண்டில் மத்திய அரசின் கலால் மற்றும் சுங்க வரி துறையின் துணை தலைவர் ராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ், மத்திய அரசின் ஜி .எஸ்.டி . துறையின் மதுரை மண்டல  இணை ஆணையாளர் பாண்டி ராஜா ஐ.ஆர்.எஸ்.,இந்திய வருமான வரி துறையின் காரைக்குடி பகுதி இணை ஆணையாளர் ஜமுனா தேவி ஐ.ஆர்.எஸ்,தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜித்,அமெரிக்காவில் வசிக்கும் முகநூலில் பணியாற்றும் ராம் வள்ளியப்பன்,தென்கொரியா நாட்டின் விஞ்ஞானியும் ,பேராசிரியருமான காத்தலிங்கம் ,ஈராக் நாட்டின் விஞ்ஞானியும்,பேராசிரியருமான ராமலிங்கம்,தேவகோட்டை ஜமீன்தார் சோம .நாராயணன் செட்டியார்,உலக தமிழ் சங்கத்தின் செயலர் அமெரிக்காவில் வசிக்கும் அழகப்பா ராம் மோகன்,மீனாட்சி ராம் மோகன்,கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,அரசு தோட்டகலை பண்ணை வேளாண்மை அலுவலர் தர்மர்,தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் ,தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி,மருத்துவ துறையின் திருவேகம்பத்துர் வட்டார மருத்துவ அலுவலர் கமலேஷ்வரன்,மலேசியா நாட்டின் ஆங்கில பயிற்றுனர் நல்ல பெருமாள் ராமநாதன்,கண்ணங்குடி வட்டார மருத்துவ அலுலவர் ராஜாராம்,அரசு மருத்துவர்கள் சிவசங்கரி,தமீம் அன்சாரி,சிந்தியா ராணி,ஓய்வு பெற்ற ஆசிரியர் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன்,அரசு போக்குவரத்து கழகத்தின் தேவகோட்டை கிளை மேலாளர் நாகராஜன்,மத்திய வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும்,விஞ்ஞானியுமான செந்தூர் குமரன் ,தேவகோட்டை காவல் துறை நகர் ஆய்வாளர் முத்துக்குமார்,தேவகோட்டை போக்குவரத்து காவல் துறை துணை ஆய்வாளர் முருகேசன்,தேவகோட்டை சேக்கிழார் விழா குழு செயலரும்,பேராசிரியருமான சபா.அருணாச்சலம்,ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் சொக்கலிங்கம்,தமிழ்நாடு அரசின் தீயணைப்பு துறை அலுவலர் ஆறுமுகம்,தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன்,துணை மேலாளர் சிவக்குமார்,சன் டிவி குலதெய்வம் நடிகர் கணேஷ் பாபு,திருச்சி அண்ணா கோளரங்கத்தின் இயக்குனரும்,விஞ்ஞானியுமான லெனின் தமிழ் கோவன்,தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து,சென்னை எழுத்தாளர் யுவராஜன்,ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ்,தேவகோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதி பாசு , சென்னை ஐ.ஐ.டி .பேராசிரியரும் ,வணிகவியல் துறை தலைவருமான தேன்மொழி,தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை பேராசிரியர்கள் கண்மணி,பாகை கண்ணதாசன்,சென்னை தனியார் துறை தலைவர் ராமசாமி,பாபநாசம் காகித கலைஞர் தியாக சேகர்,அரசு மருத்துவ மனையின் செவிலியர்கள் ஆரோக்கிய செல்வி, மேரி ,கண் மருத்துவர்கள்,ஆளுமை பயிற்றுனர் தம்பியண்ணா விசுவநாதன்,ஆசிரியரும்,என்.எம்.எம்.எஸ்.பயிற்றுனருமான ஆதவஞ்சேரி மோகன்,போட்டோ கலைஞர்கள் ஜெயக்குமார் வெங்கடேசன்,சுப்பிரமணியன்,அகஸ்தியா பௌண்டேஷன் முத்து செல்வன்,திரைப்பட உதவி இயக்குனர் கரு.அண்ணாமலை,டெல்லி ராமகிருஷ்ணா மடத்தை சார்ந்த ஆளுமை பயிற்றுனர் மாதவ ரமணன் , காரியாபட்டி அரசு பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் ராமலிங்கம் , தேவகோட்டை நகர் காவல் துறையின் போக்குவரத்து காவலர்கள் கலா,ராஜ்குமார்,ஓய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆதி ரெத்தினம் உட்பட 60க்கும் மேற்பட்ட ஆளுமைகள் மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்து உள்ளனர்.

வாழ்க்கை பாடத்தை கற்று கொடுத்த களப்பயணங்கள் :
                                                              எங்கள் பள்ளியில் இருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை அறிவியல் மற்றும் கலை கல்லுரிக்கு அழைத்து சென்று இயற்பியல்,வேதியியல் ,விலங்கியல்,தாவரவியல் என அனைத்து பாடப்பிரிவுகளில் சோதனை சாலைகளை பார்த்து கற்று கொள்வதுடன் கல்லூரியில் படிப்பதற்கான ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறோம்.பாரத ஸ்டேட் வங்கி ,அஞ்சலகம்,அரசு தோட்டக்கலை பண்ணை ,உள்ளூர் நூலகம் போன்ற வாழ்க்கையோடு தொடர்புடைய இடங்களுக்கும் நேரடியாக மாணவர்களை அழைத்து சென்று களப்பயணங்களின் மூலம் மாணவர்களுக்கு வாழக்கை பாடத்தை கற்று கொடுக்கின்றோம்.

மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் 78 நிகழ்வுகள் :
                                            இந்த ஆண்டு மட்டும் மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றும் தரும் வகையில் 78 நிகழ்வுகள் நடத்தி உள்ளோம்.குறிப்பாக வளரிளம் பெண்களுக்கான தன்சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு,கோடை விடுமுறையில் சத்துணவு வழங்கிய நிகழ்வு,யோகா விழிப்புணர்வு,மா 3 அமைப்பின் வழியாக மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு,டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு,மாணவர் தேர்தல் நடத்தி அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு,தொழு நோய் விழிப்புணர்வு,கெட்டி மேளம் முழங்க நெல்மணிகளில் அகரம் எழுதும் நிகழ்வு,நிலவேம்பு கொடுக்கும் நிகழ்வு,பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு,திருக்குறள் விளக்க நிகழ்ச்சி,கலை இலக்கிய நிகழ்வில் பரிசு பெற செய்தல் நிகழ்வு,தேசிய ஒருமைப்பாடு உறுதி ஏற்பு நிகழ்வு,பத்திரிகையின் வழியாக கிடைத்த பணத்தை கொடுத்து பாராட்டும் நிகழ்வு,அறநூல் ஒப்புவித்தல் நிகழ்வில் பெற்றோர்களுடன் சென்று காரைக்குடியில் சென்று பங்கேற்க வைத்தல் ,மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்றல் ,தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்,கந்தசஷ்டி விழாவில் இறை வணக்க பாடல் பாடும் நிகழ்வு,கந்த சஷ்டி விழாவில் மாணவர்களின் தனி உரை நிகழ்த்தும் நிகழ்வு,மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு,தேசிய வாக்காளர் தினம்,சுதந்திர தினம்,குடியரசு தினம்,ஜி .எஸ்.டி .தொடர்பாக இணை ஆணையாளருடன் கலந்துரையாடி விழிப்புணர்வு,திரைப்பட நடிகர் ,இயக்குனருடன் கலந்துரையாடல்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி,திருச்சி அண்ணா  கோளரங்க இயக்குனருடன் கலந்துரையாடல் ,பசுமை படை தொடக்க விழா,மாவட்ட கல்வி அலுவலருடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வு,குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல் நிகழ்வு,குடற்புழு தொடர்பாக மாணவர்களுடன் மருத்துவர் கலந்துரையாடல் நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ,பத்திரிக்கையாளருடன் மாணவர்கள் கலந்துரையாடல்,உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு,வானொலி நிலையம் அழைத்து செல்லுதல்,மருத்துவ மேல் சிகிச்சைக்காக மாணவர்களை அவர்களின் பெற்றோருடன் சிவகங்கை தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செலுத்தல்,அனைத்து மாணவர்களுக்கும் ரூபாய் 10இல் வங்கியில் கணக்கு துவங்கி கணக்கு புத்தகம் வழங்குதல்,பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம் நடத்துதல்,ஐ.ஐ.டி .பேராசிரியருடன் மாணவர்கள் கலந்துரையாடல்,பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வு,இந்திய எரிசக்தி துறை சான்றிதழ் வழங்குதல்,மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் நீர் சேமிப்பு தொடர்பான போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்குதல் ,மாணவிகளுக்கு கனரா வங்கியின் ஊக்கத்தொகை வழங்குதல் ,மாணவர்களுக்கு நூலகம் அறிமுகப்படுத்தி நூலக உறுப்பினராக்கி அட்டை வழங்குதல் ,இளம் வயது மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்,வைட்டமின் எ திரவம் வழங்குதல் ,பாவை விழா போட்டிகளில் மாணவர்களை மாவட்ட அளவில் பங்கேற்க வைத்து பரிசுகள் பெறுதல்,அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசுகள் பெறுதல்,ஒளியேற்றுதல் விழா என 78க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

மாணவர்களுக்கான பயிற்சிகள் மொத்தம் 17:
                                   மாணவர்களின்  பல்வேறு ஆளுமைகளை வளர்க்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைகழகத்தில் தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் வாரம் தோறும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு விளக்கம் அளித்தல் ,ஆங்கில பயிற்சி,பத்திரிகையாளர் பயிற்சி,தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி,அறிவியல் ஆய்வக பயிற்சி,ஹிந்தி கற்கும் பயிற்சி,புகைப்படங்கள் எடுப்பது எப்படி?என்பது தொடர்பான பயிற்சி,ஆளுமை பயிற்சி,திறன் வளர்க்கும் பயிற்சி,விழிப்புணர்வு பெற்ற குடிமகன் உருவாகும் பயிற்சி,காகித கலை பயிற்சி ,தோட்டக்கலை பண்ணையில் செடிகள் வளர்க்கும் பயிற்சி என மாணவர்களின் தனித்திறமையினை வளர்க்கும் பயிற்சிகள் அதிகமாக வழங்கப்பட்டது.

தனி மற்றும் கூட்டு திறமையினை வெளிப்படுத்தும் வகையில் 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கு எடுத்தல் :
                    மாணவ    பத்திரிக்கையாளர் ஆவதற்கான போட்டிகள்,பள்ளியில் உள்ளே நடக்கும் வினாடி வினா போட்டிகள்,முத்தமிழ் வேத திருச்சபை போட்டிகள்,மாணவர் தேர்தல்,பாரதி விழா போட்டி,ஆசிரியர் தின விழா போட்டி,ஓவிய போட்டி,எரிபொருள் சேமிப்பு ஓவிய போட்டி,நவசக்தி விழா போட்டிகள்,கந்தர்சஷ்டி ஒப்புவித்தல் போட்டி,அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் அறிவியல் கண்காட்சி போட்டி,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டி,பள்ளி கல்வி திருவிழா போட்டி,பள்ளி கலை திருவிழா போட்டிகள்,சிறுகதை எழுதும் போட்டி,பாடல் ஒப்புவித்தல் போட்டி,பாவை விழா போட்டி,கட்டுரை எழுதும் போட்டி,பேச்சு போட்டி,திருச்சி அண்ணா கோளரங்கத்தில் நடைபெற்ற ஓவிய போட்டி,கட்டுரை போட்டி,காரைக்குடி புத்தக திருவிழாவில் நடைபெற்ற ஓவிய போட்டி,பேச்சு போட்டி,கவிதை போட்டி,காரைக்குடி தமிழ்ச்சங்கம் நடத்திய அறநூல் ஒப்புவித்தல் போட்டி,மத்திய அரசின் பெட்ரோலிய துறை நடத்திய போட்டிகள் உட்பட 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றியும் பெற்று பரிசுகளையும்,சான்றிதழ்களையும் குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் காணலாம் :


பள்ளி பற்றிய சிறு தொகுப்பு


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே இந்த சமுதாயம் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இப்பள்ளி துவங்கப்பட்டது.                            

                               இப்பள்ளியில்  பின்தங்கிய சமுதாய   மாணவர்களின் கல்வி  மீது அக்கறை கொண்டு அவர்களை ஊக்கபடுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயில வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பள்ளி ஆகும்.   பள்ளி செயலர் திரு.AR.சோமசுந்தரம் அவர்கள்,கல்வி முகவர் .மீனாட்சி ஆச்சி அவர்கள் ஆவார்கள் .

நேரடியாக மாணவர்களை தேடி செல்லல்

                   எந்த விதமான ஏற்ற தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அமைக்கப்பட்டது தான் பள்ளிக் கூடம்.தமிழக அரசின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக சமுதயாத்தில்  மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிகுறவ சமுதாய இன மக்கள்,ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் ( ஊர்,ஊராய் சென்று குறி சொல்பவர்கள் ) சமுதாய மாணவர்கள் ,இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும்   அவர்களின் இருப்பிடம் தேடி சென்று கலை நிகழ்ச்சிகள் வாயிலாக கல்வியின்  புதிய அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி  அவர்கள் பிள்ளைகளையும் இப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள்  என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்.

  தினம்தோறும் அனுபவ கற்றல் 

                            இப்பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்த சுழலிலும் மறக்காது.வாழ்க்கையின் என்றுமே மறக்க கூடாது என்ற நோக்கில் தான் கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளை பள்ளியிலும் ,களப்பயணமாக புத்தக திருவிழா,அஞ்சலகம்,வங்கி,நூலகம்,அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தை புதுமையாக்கி வருகின்றார்கள் .மாணவர்களுக்கு புதிய ,புதிய அனுபவங்களை தினம்தோறும் கற்று கொடுத்து வருகிறார்கள் . 

வார,வாரம் மற்றும் மாத திருவிழாக்கள் 

                       இப்பள்ளியில் வாரா,வாரம் மாணவர்களுக்கு பேச்சு,கவிதை,ஓவியம்,மனக்கணக்கு ,புதிர்கணக்கு,வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை மாதம் ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதனை வாரம்தோறும் போட்டியாக நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறோம்.  மேலும் மாதா,மாதம் பாடங்கள் சார்ந்த வினாடி வினா மாதம் ஒரு பாடம் என எடுத்துக் கொண்டு மாத கடைசியில் போட்டிகள் நடத்தி வருகிறோம்.இதனில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு வெற்றி பெற்று பரிசு பெறுகின்றனர்.ஒரு முறை பரிசு பெற்ற மாணவர் அடுத்த முறை பார்வையாளராக  மட்டுமே இருக்க முடியும் என தெரிவித்துள்ளதால் அனைத்து மாணவர்களும் போட்டிகளில் கண்டிப்பாக பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களின் இளம் வயது மனதில் விதைத் துள்ளோம்.இத்திருவிழாக்கள் மாணவர்கள்  மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


மாணவர்களின் திறமைகளை ஊடகங்களின் வாயிலாக வெளிபடுத்துதல் 
                        இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தை நாளிதழ்களில்,வார இதழ்களில் ,மாத இதழ்களில்,வானொலி,தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக கட்டுரைகளாக ,கவிதைகளாக,ஓவியமாக ,கதைகளாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். 


            
                 மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கி விடமால் முழுமையான அறிவு பெற்றவர்களாக வளரவேண்டும் என்ற நோக்கில்தான் நடுநிலைப் பள்ளி அளவில் பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறோம் .இது தொடரும்.

No comments:

Post a Comment