Sunday 18 October 2015

தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி 


நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி  1ம் ஆண்டு நிறைவு  பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி 




                         நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் சார்பாக நடைபெற்ற 1ம் ஆண்டு நிறைவு விழா பேச்சு போட்டி மதுரையில் நடைபெற்றது.இதில் சுமார் 5 மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இன்று அரசு விடுமுறையாக இருந்த போதும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்தின் ஆலோசனையின் படி ஆசிரியை திருமதி தி.முத்து  மீனாள் மற்றும் ஆசிரியர் திரு.சோமசுந்தரம் ஆகியோர் காலை 5.30 மணிக்கு மாணவர்களை தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றனர்.இவர்களது பெற்றோர் யாரும் வர இயலாத நிலையில் தினசரி வேலைக்கு சென்றால்தான் சம்பளம் கிடைக்கும் என்கிற நிலையில் ஆசிரியர்களே இவர்களை போட்டிக்கு அழைத்து சென்றனர்.6 முதல் 8 வகுப்பு வரை உள்ள பிரிவில் 20 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.இதனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட ஒரே  பள்ளி ஆகும். 20 பேரில் இப்பள்ளி மாணவர்கள் 5 பேர் தவிர மீதமுள்ள அனைவரும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆவார்கள்.தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசு உதவி பெறும்   இப் பள்ளி மாணவர்கள் போட்டி போட்டு பேசி மாணவி மு.தனலெட்சுமி என்பவர் வெற்றி பெற்றார்.இவர் வரும் 25 ம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதி சுற்றில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.இவரது தாயார் வீட்டு வேலை செய்து வரும் சொற்ப பணத்தில் இவரை படிக்க வைக்கிறார்.போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கி கொண்டு மாணவர்களும்,ஆசிரியர்களும் வீட்டுக்கு வந்த சேர்ந்த நேரம் இரவு 9 மணி ஆகும்.இப்பள்ளி ஆசிரியர்களும்,தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கமும் இணைந்து தான் இம்மாணவர்களை தொடர்ந்து ஊக்கபடுத்தி போட்டிகளில் வெற்றி பெற வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களை நாமும் பாராட்டுவோமாக.


No comments:

Post a Comment