Saturday 18 October 2014

அஞ்சலக  நடைமுறைகள் எப்படி?
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.


மாணவர்களின் கேள்விகளும்,தபால் அலுவலக அதிகாரிகளின் பதில்களும்:




மாணவர்களின் கேள்விகளும்,தபால் அலுவலக அதிகாரிகளின் பதில்களும்:


மாணவி சொர்ணம்பிகாஎந்தெந்த ஊருக்கு எந்த விலையில் தபால் தலை ஒட்டவேண்டும்? என்று கேட்டார்.

தலைமை தபால் அதிகாரி ராமச்சந்திரன் : தபால்களுக்கு பொதுவாக 5 ரூபாய் முதல் எடையை பொறுத்து அதற்குரிய தபால் தலைகளை ஓட்ட வேண்டும் என்றார்.


மாணவி பவனா : விரைவு தபாலுக்கும் , பதிவு தபாலுக்கும் என்ன வித்தியாசம் ? என கேட்டார்.

அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் : பதிவு தபால் யார் பெயருக்கு வந்துள்ளதோ அவர்களிடம் நேரடியாக    கையெழுத்து வாங்கிகொண்டுதான் கொடுக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் வெளிஊரில்,வெளிநாட்டில் எங்கு இருந்தாலும் அவர்கள் எனக்கு வரும் தபால்களை  எங்கள் வீட்டில் உள்ள இன்னாரிடம்  தரலாம் என  அஞ்சல் அலுவலகத்தில் எழுதி கொடுத்திருந்தால்  குறிப்பிட்ட நபரிடம் தபாலை கொடுக்கலாம்.  ஆனால் விரைவு தபால் என்பதை யார் பெயருக்கு வந்துள்ளதோ அவர்கள் வீட்டில் உள்ள யாரிடமும் தந்து விடலாம் என்றார்.



மாணவர் நடராஜன் : எந்தெந்த தலைவர்கள் அஞ்சல் தலையில் இடம் பெற்றுள்ளனர்? என கேட்டார்.

தலைமை தபால் அதிகாரி ராமச்சந்திரன் :தபால் தலையில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் யார்,யார் என்பதையும்,தலைவர்களின் பிறந்த நாளில் புதிது,புதிதாக வெளியிட வாய்ப்புள்ளது என்றார்.



மாணவர் ராம்குமார்: ரெவின்யு ஸ்டாம்ப் எவற்றிருக்கு பயன்படுத்தபடுகிறது? என கேட்டார்.

அஞ்சலக எழுத்தர்  சத்யா :   ரெவின்யு ஸ்டாம்ப் என்பது வருமானத்திற்கு  மட்டும் ஓட்டகூடியது. அதற்கு மட்டும்தான் அதை பயன்படுத்த வேண்டும் என்றார்.



மாணவன் சூர்யா : இ -போஸ்ட் என்றால் என்ன? என கேட்டார்.

அஞ்சலக அலுவலர் செல்வகணேசன் : இ -போஸ்ட் என்பது நாம் அனுப்ப வேண்டிய தகவலை எ -4 தாளில் எழுதி கொடுத்தால் அதனை மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்து அனுப்பி விடுவோம் .அது உரிய நேரத்தில் உரிய நபருக்கு சென்று கிடைத்து விடும் என்றார்.



மாணவி மங்கையர்க்கரசி : புக் - போஸ்ட் என்பது என்ன?  என்று கேட்டார்.

அஞ்சலக அலுவலர் ஷேக் அலாவுதீன்: புக் - போஸ்ட் என்பது தபாலை ஒட்டாமல் அனுப்புவது ஆகும்.பெரும்பாலும் திருமண கவர்கள் இது போன்று அனுப்புவது உண்டு.



மாணவர் நவீன் :ஆர் பி எல் ஐ - என்பது என்ன என கேட்டார்? 

அஞ்சலக எழுத்தர் தன்ராஜ் : இது ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும்.இது அனைவரும் சேர்ந்து பயன்பட வேண்டிய ஒன்றாகும்.உங்கள் வீடுகளிலும் ,அனைவரிடமும் சொல்லி இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள் என்றார்.



மாணவி சமயபுரத்தாள் : பின் கோடு  என்பது என்ன என கேட்டார்?

அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன்: அஞ்சலக குறியீட்டு எண் ஆகும். 630 001  என்கிற அஞ்சலக குறியீட்டு எண்ணில் முதலில் உள்ள 6 என்கிற எண் மாநிலத்தையும்,அடுத்து உள்ள இரண்டு எண்கள் மாவட்டத்தையும் , அடுத்து உள்ள மூன்று எண்கள் தபால் சென்று அடைய வேண்டிய தபால் அலுவலகத்தையும் குறிக்கும். நீங்கள் எழுதும் அணைத்து தபால்களிலும் அஞ்சலக குறியீட்டு எண்எழுதி அனுப்பவும்.எழுதி அனுப்பினால்  சேர வேண்டிய நபருக்கு உடனடியாக தபால் சென்று அடைந்து விடும் என்றார்.



மாணவி கிருஷ்ணவேணி : விரைவு தபால் உட்பட அணைத்து முக்கிய தபால்களிலும் ஒரு ஸ்டிக்கர் ஓட்டபடுகிறதே,அது என்ன ஸ்டிக்கர்?  என்று கேட்டார்.

அஞ்சலக எழுத்தர் தன்ராஜ் : ஸ்டிக்கர் ஆனது பார் கோடு உள்ளது ஆகும்.  தபால் கவரில் அதனை ஒட்டி ஸ்கேன் செய்தால் அதில் உள்ள எண்ணை கணிணியில் பார்த்து எளிதாக அனுப்பி விடலாம்.பார் கோடு எண் மூலமாக நீங்கள் அனுப்பிய   தபால் எங்கு, எப்போது போய் சேர்ந்து உள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம் என்றார்.






மாணவர் ருத்திக் ரோஷன் : மை ஸ்டாம்ப் என்பது தொடர்பாக என்ன? என்று கேட்டார்.
தலைமை தபால் அதிகாரி  ராமசந்திரன் : மை ஸ்டாம்ப் என்பது யார் வேண்டுமானாலும் நீங்களே உங்கள் புகைபடத்தை தபால் அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் கொடுத்து உங்கள் புகை படத்துடன் அதனை ஸ்டம்பாக ஒட்டி பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.


மாணவி ரூபா : அஞ்சலகத்தின் சேவைகள் என்ன ,என்ன ? என்று கேட்டார்.

தலைமை தபால் அதிகாரி  ராமசந்திரன் : தொலைபேசி கட்டணம் செலுத்துதல்,தமிழ்நாடு மின்சாரவாரிய கட்டணம் செலுத்துதல், சில குறிப்பிட்ட தனியார் ஓம்னி பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தல்,சில குறிப்பிட்ட அஞ்சலகங்களில் ரயில் முன்பதிவு செய்தல்,ஆர் பி எல் ஐ திட்டம்,பணம் சேமிப்பு கணக்கு,தபால்கள் அனுப்புதல்,பார்சல் சேவைகள்,பணம் அனுப்புதல்,பணம் பெறுதல்,விரைவில் எ டி எம் இயந்திரம் பயன்பாட்டிற்கு வருதல் என பல்வேறு பொது மக்கள் சேவை தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.


மாணவன் பார்த்திபன் : உடனடி மின்னஞ்சல் மணி ஆர்டர் என்பது என்ன? என கேட்டார்.

அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் : மணி ஆர்டர் படிவம் மூலம் பணம் அனுப்ப முடியும்.உடனடி மணி ஆர்டர் படிவம் மூலம் ரூபாய் 50,000 வரை பணத்தை செலுத்தி உடனடியாக இந்தியா முழுவதும் அடையாள அட்டை காண்பித்து குறிப்பிட்ட சில மணி நிமிடங்களில் ரகசிய எண்ணை சொல்லி பணம் அனுப்பி பெற்று கொள்ளலாம் என்றார்.

மாணவன் சூர்யா : அஞ்சலக வேலையில்  எவ்வாறு சேருவது? என கேட்டார் .

அஞ்சலக எழுத்தர் தன்ராஜ்  : அஞ்சலக வேலைக்கு மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் எழுதி அதில் வெற்றி பெற்று பணிக்கு வரலாம் என்றார்.
பட விளக்கம :-IMG-2408,2416 தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் அஞ்சலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
பட விளக்கம :IMG_2425,2431  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் அஞ்சலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
பட விளக்கம் :IMG-2455,2456 தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலக எழுத்தர் தன்ராஜ் அஞ்சலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.

No comments:

Post a Comment