Saturday 18 October 2014

மெல்ல கற்கும் மாணவர்கள் பட்டியலை
வகுப்பறைகளில் தொங்க விட உத்தரவு

மெல்ல கற்கும் மாணவர்கள் பெயர்பட்டியலை வகுப்பறைகளில் கரும்பலகை அருகில் வைக்க வேண்டுமென முதன்மைகல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம் முதன்மைகல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதன்மைகல்வி அலுவலர் பேசுகையில், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு தேவைப்படும் சிறப்பு கையேடு எண்ணிக்கையை தெரியப்படுத்த வேண்டும். மெல்லக்கற்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தத்தெடுத்த விபரங்கள், மெல்லக்கற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை வகுப்பறைகளில் தகவல் கரும்பலகை அருகில் தொங்க விட வேண் டும்.
தீபாவளி பட்டாசு எவ்வாறு வெடிப்பது என திங்கட்கிழமை காலை வழிபாட்டு கூட்டத்தில் தக்க அறிவுரைகளுடன் செய்முறைகள் மூலம் வெடித்து காட்ட வேண் டும்.
தரம் உயர்த்தப்பட்டமேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தமான இந்தியா திட்டத்தின் கீழ் வீடு, பள்ளிகள், அலுவலகங்கள் சுத்தப்படுத்தும் நடைமுறையை விளக்கி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 35 வகையான கருத்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment