Friday 3 October 2014

                                விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை

                               தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை நடைப் பெற்றது.



                                             தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை விஜயதசமி அன்று  பள்ளியில் சேர்க்க வந்திருந்த பெற்றோர்களையும்,மாணவர்களையும்   ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை உரை நிகழ்த்தினார்.தலைமை ஆசிரியர்,ஆசிரியைகள் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து அ ,ஆ சொல்ல வைத்தனர்.ஆசிரியை சாந்தி புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசித்து பயற்சி அளித்தார்.மாணவிகள் மங்கையர்க்கரசி,பூஜா ஆகியோர் அபிராமி அந்தாதி சொல்ல வைத்தனர்.குழந்தைகளின் பெற்றோர்கள் கார்த்திகா,கஸ்துரி,சீனிவாசன்,வெங்கடாசலம்,மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியை முத்துலெட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம்:IMJ-2303,2306,2309 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் அகரம் எழுத வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற்றது.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியை முத்துலெட்சுமி ,பெற்றோர் உள்ளனர்.

பட விளக்கம்:IMJ-2313 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் அகரம் எழுத வைத்து திருக்குறள் சொல்ல வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற்றது.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியை சாந்தி  ,பெற்றோர் உள்ளனர்.



No comments:

Post a Comment