சட்ட , மருத்துவ , காவல் என அனைத்து உதவிக்கும் பெண்கள் 181 எண்ணுக்கு கால் செய்யலாம்
பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சமூக நல அலுவலர் பேச்சு
உழைப்பே உயர்வு
உங்க ஊர் ரேஷன் கடை திறந்திருக்கா?. ஃபோன்லயே தெரிஞ்சிக்கலாம். தமிழக அரசின் அதிரடி வசதி..!
ரேஷன் கடைக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்புவது பலருக்கும் அன்றாடப் பிரச்சினையாக இருக்கிறது. நீண்ட தூரம் நடந்து சென்ற பிறகு கடை மூடியிருப்பதோ அல்லது நாம் கேட்கும் பொருள் ஸ்டாக் இல்லை என்று சொல்வதோ மிகுந்த மனச்சோர்வை அளிக்கும்.
இந்தத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு எளிய SMS சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 89399 22990 அல்லது 97739 04050 ஆகிய எண்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், கடையின் நிலை மற்றும் இருப்பு விவரங்களை வீட்டிலிருந்தே துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தச் சேவையைப் பயன்படுத்த, குறிப்பிட்ட குறியீடுகளை SMS செய்ய வேண்டும். உங்கள் கடையில் என்னென்ன பொருட்கள் கையிருப்பில் உள்ளன என்பதை அறிய PDS 101 என்றும், அன்றைய தினம் கடை திறந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள PDS 102 என்றும் டைப் செய்து மேற்கண்ட எண்களுக்கு அனுப்பினால், உடனடியாகத் தமிழிலேயே விரிவான தகவல் உங்களுக்கு வந்து சேரும். இதன் மூலம் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்க முடியும். இந்த உபயோகமான தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து, அனைவரும் பலனடைய உதவுங்கள்.