நாம் பிறருக்கு செய்யும் உதவி நம்மை காப்பாற்றும்
ரோட்டரி துணை ஆளுநர் பேச்சு
படிக்கப் புத்தகம் கொடுத்து பரிசும் வழங்கிய பள்ளி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையில் புத்தகங்கள் வாசித்து சிறப்பாக பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளை ரோட்டரி துணை ஆளுநர் வழங்கினார்.
பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் லியாகத் அலி கோடை விடுமுறையில் புத்தகங்கள் படித்து சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பேசுகையில், நாம் நூல்களை வாசிக்கும் பொழுது அந்த நூலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும்.
புத்தகங்கள் வசிப்பதால் நேரம் பயனுள்ள வகையில் நமக்கு செல்லும். நினைவு கூற முடியும். பேச்சு திறன் வளர்கிறது. பொது அறிவு வளர்கிறது.
புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக சிறந்த குணங்களை நாம் பெற இயலும். வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாளராக வந்தவர்கள் புத்தகங்களை வாசித்து அதன் மூலமாகத்தான் வெற்றி பெற்றார்கள்.புத்தகங்களை வாசித்து வெற்றிக்கு வழி வகுத்துக்கொள்ளுங்கள். என்று பேசினார்
சிறப்பான முறையில் புத்தகங்களை வாசித்து கருத்துக்களை எடுத்துக் கூறிய மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையில் புத்தகங்களை சிறந்த முறையில் வாசித்து கருத்துக்களை கூறிய மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ரோட்டரி துணை ஆளுநர் லியாகத் அலி பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=3SiI52waIgw
No comments:
Post a Comment