தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுகள் வழங்கும் விழா
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோடை விடுமுறை முடிந்து , பள்ளிகள் திறக்கப்பட்டது.ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கார்த்திகா , கருப்பையா, கலைமணி ஆகியோர் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கினார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.பள்ளி திறந்த அன்றே புத்தகங்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க துவங்கினார்கள்.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.புத்தகங்களை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கார்த்திகா , கருப்பையா, கலைமணி ஆகியோர் வழங்கினார்கள் .
வீடியோ : https://www.youtube.com/shorts/LwYT6glIB8Q
No comments:
Post a Comment