சில்லறையை சிரித்து கொண்டே கொடுக்கும் கண்டக்டர்
பயணிகளிடம் அன்பான புன்னகையுடன் பேருந்தை வழிநடத்தும் நடத்துனர்
நண்பர்களே இன்று சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் அரசு பேருந்தில் பயணம் மிகவும் இளம் வயது நடத்துனர் அனைத்து பயணிகளிடம் அன்புடனும் அரவணைப்புடனும் பேசினார்.
முகத்தில் எப்பொழுதுமே ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. எனக்கே மிகப்பெரிய ஆச்சரியம். ஏனென்றால் பல நடத்துனர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பார்கள்.
ஆனால் இந்த நடத்துனரோ மிகவும் எளிமையாக அனைவரிடமும் பேசினார். கோபத்தை காண்பிக்கவில்லை. கோபப்படவும் இல்லை.
பயணிகளை அன்புடன் வரவேற்று இருக்கைகள் காலியாக இருந்தால் அன்பாக அழைத்து உட்காரச் சொன்னார். சில்லரை கேட்பவர்களுக்கும் அன்புடன் வழங்கினார். வேண்டுமானால் இன்னும் சிலரை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய் கொடுத்தாலும் சில்லறையை சிரித்துக்கொண்டே வழங்கினார்.
பல பேருந்துகளில் நடத்துனர்கள் கத்தி சண்டை போடுவார்கள். சில நடத்துனர்கள் போலீஸ் ஸ்டேஷன் போகும் அளவிற்கு எல்லாம் கோபங்களை வெளிக் காண்பிப்பார்கள்.
சர்வீஸ் ஆன, வயது அதிகமான கண்டக்டர்கள் கூட பல நேரங்களில் கோபங்களை வெளிக் காண்பிப்பார்கள்.
ஆனால் வயது மிகவும் இளமையான நடத்துனர் திலீப் மிகவும் அன்புடன் அனைவருடனும் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பயணிகளுடன் பயணிகளாக வரும் அனைவருடனும் நல்ல முறையில் வரவேற்று பேசினார் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது.
கடந்த மாதத்தில் ஒரு நாள் இதே பேருந்தில் சிவகங்கை டூ திருப்பத்தூர் வந்த போதும் இதே நடத்துனர் தீலீபின் முகத்தில் இதே புன்னகையுடன் பேசினார். அன்றே இவரது அன்பான வரவேற்பை மறக்கமுடியவில்லை.இன்றும் அது தொடர்ந்ததால்தான் இந்த பதிவு.
அரசு பேருந்தில் இவரது செய்கை மிகவும் அருமையானது. திலீப்பை வாழ்த்துவதற்கு 7550360413 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.
தோழமையுடன்
லேனா
காரைக்குடி
No comments:
Post a Comment