Tuesday, 10 June 2025

 இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா 


ரத்த சோகை நோய் வருவதை தடுக்க மாணவர்கள் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் 

நகராட்சி தலைவர் பேச்சு 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா தேவகோட்டை நகராட்சி தலைவர் தலைமையில்  நடைபெற்றது.

                     ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார் . தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் . தேவகோட்டைநகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கி  மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கி பேசுகையில்,   அரசு பள்ளிக் குழந்தைகளின் உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நன்கு கல்வி கற்க முடியும் என்பதற்காக எல்லா பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வியாழக்கிழமை தோறும் இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கி வருகிறது. 
நல்ல உடல்நலத்தோடு கல்வி கற்றால்தான் பெண்கள் உட்பட அனைவரும் எந்த சூழ்நிலையிலும், சிறப்பாக செயல்பட முடியும். 
ரத்த சோகை நோய் வராமல் இருக்க இளம் வயது முதலே மாணவர்கள் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கும் மாத்திரைகளை மாணவர்கள் தவிர்த்து விடாமல் சாப்பிட வேண்டும்  என்று பேசினார்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை  ஆசிரியர் முத்து மீனாள் செய்து இருந்தார்.இளம் வயது மாணவர்களுக்கு இரும்பு சத்து நிறைந்த சிறப்பு டானிக் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றார்கள் .ஆசிரியை முத்துலெட்சுமி  நன்றி கூறினார்.

பட விளக்கம் :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம்  தலைமையில்  நடைபெற்றது.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .

 

 

வீடியோ : https://www.youtube.com/watch?v=b9YG81xeYe0

No comments:

Post a Comment