முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேகர் பள்ளி மாணவர்களிடம் இத்திட்டம் குறித்து பேசுகையில், இத்திட்டத்தின் அட்டையை பெற ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் அதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து செய்து சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
கூகுளில் தேடியும் அதற்கான படிவத்தை நாமே டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு குடும்பதுக்கும் ஒரு மருத்துவ காப்பீடு அட்டை போதுமானது.
ஒவ்வொரு ஆபரேஷனுக்கு அதற்குத் தேவைப்படும் தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. நாம் எந்த ஊரில் வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம்.
எந்த மருத்துவமனையிலும் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். அந்த மருத்துவமனை இந்தத் திட்டத்தின் கீழ் வருகிறதா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஆடையின் மூலமாக நாம் 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மூலமாக குறிப்பிட்ட சில பரிசோதனைகளையும் நாம் இலவசமாக செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் பொதுமக்களிடம் அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தத் திட்டத்தில் அட்டை பெற முயற்சி செய்யுங்கள்.
வருட வருமானம் 120000 இருந்தால் அனைவரும் இந்த அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் கார்டில் பெயர் இருக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும்.
கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இந்தப் படிவத்தை சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.உடனே மருத்துவ அட்டைக்கான எண் வழங்கப்படும்.அதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு சேகர் பேசினார்.மாணவர்கள்,ஆசிரியர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சேகர் இத்திட்டம் தொடர்பாக விளக்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=x6Xtne5i7_E
No comments:
Post a Comment