Saturday, 31 August 2024

தமிழக அரசின் விலையில்லா புத்தக பை,வண்ண பென்சில்கள், நில வரைபட நூல்  வழங்கும் விழா

பல வண்ண நிறத்தில் புத்தக பை பெற்றதால் மாணவர்கள் மகிழ்ச்சி 

வட்டார கல்வி அலுவலர் வழங்கினார் 















தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலான 
புத்தகபை  உட்பட பல்வேறு பொருள்களை  தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் ரெ . லெட்சுமி தேவி  தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்
 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் அமுதா,அமலா,ரேணுகா , முனீஸ்வரி ஆகியோர்   வழங்கினார்கள்.  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும்  ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
                        புத்தக பை,வண்ண பென்சில்கள், நில வரைபட நூல்  உள்ளிட்ட விலையில்லா பொருள்களை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குறிப்பாக திருக்குறள் எழுதி புதிய பல வண்ண நிறத்தில் புத்தக பை பெற்றதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலான 
புத்தகபை  உட்பட பல்வேறு பொருள்களை  தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் ரெ . லெட்சுமி தேவி  தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்
 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் அமுதா,அமலா,ரேணுகா , முனீஸ்வரி ஆகியோர்   வழங்கினார்கள்.  
                                               








No comments:

Post a Comment