Saturday 17 August 2024

 

இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. - டி 3   வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு




தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியுள்ள புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக  எஸ்.எஸ்.எல்.வி. - டி 3  
  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

                                                 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஓ.எஸ்-08 எனும் செயற்கைக்கோள் ஆகும். 

                  குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் 24 மணி நேரமும் பூமியை கண்காணிக்கும். சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
என்கிற தகவலை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார் .


பட விளக்கம்: 
 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக   ஏவியுள்ள எஸ்.எஸ்.எல்.வி. - டி 3 ராக்கெட்   வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=JXRYdWIWfYU

No comments:

Post a Comment