தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களையே வெளிமாநிலத்தவர் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு அதிகம் படிக்கின்றனர்
நாளிதழில் வெளியுறவுத்துறை செய்திகளை வாசிப்பது யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு மிக முக்கியம்
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர் தகவல்
ஐ.எஃப்.எஸ் மாணவர்களுடன் கலந்துரையாடல்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் அஞ்சுகா ஐ.எப்.எஸ்.மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். .காரைக்குடியை சேர்ந்த பழனி முன்னிலை வகித்தார் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அஞ்சுகா ஐ.எப்.எஸ் மாணவர்களுடன் கலந்துரையாடி பேசுகையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு பணம் தேவையில்லை. வறுமை குறுக்கிடாது. முயற்சியும் பயிற்சியும் மிக முக்கியமானது.
வெளிமாநிலத்தவர் அதிகமாக தமிழ்நாடு பாடநூல் கழக பாடப் புத்தகங்களையே படித்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகின்றனர். அதனை கேட்கும்போது எனக்கு வெட்கமாக இருந்தது.ஆனால் தமிழ்நாட்டில் அதிகமானோர் என்சிஆர்டி புத்தகங்களை படித்து வருகின்றனர். ஆனால் வெளி மாநிலத்தவரோ தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களையே அதிகம் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு பயன்படுத்துகின்றனர என்பது குறிப்பிடத்தக்கது.
எனது ரோல் மாடலாக ஏபிஜே அப்துல் கலாம் ஐயாவையும், மகாத்மா காந்தியையும், நேருவையும் நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றேன். மாணவர்களிடம் குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடம் அதிகமாக பேசி ஊக்குவித்து அவர்களை போட்டி தேர்வுக்கு தயாராக அதிகமான முயற்சிகளை எடுக்க நினைக்கின்றேன்.
நாளிதழ்களில் பெரும்பாலான தகவல்கள் தலைப்புச் செய்திகளை படிப்பதுடன் வெளியுறவுத்துறை செய்திகளை அதிகம் படிக்க வேண்டும்.. ஏனென்றால் வெளியுறவுத்துறை செய்திகளே யுபிஎஸ்சி தேர்வில், நேர்முகத் தேர்வுகளில் அதிகமாக கேட்கப்படுகிறது .
எனவே நாளிதழ்களில் வெளியுறவுத்துறை செய்திகளையும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொள்கின்றேன். இளம் வயதிலிருந்தே நோட்டில் குறிப்பு எடுத்து அவற்றை உள்வாங்கி புரிந்து மனனம் செய்யாமல் படித்தால் வெற்றி உறுதி.
இளம் வயது மாணவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய அதிகாரப் பதவி களுக்குச் செல்ல வேண்டும் எனவும், அதற்கான முயற்சிகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
எனது தாயும், தந்தையும் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு தான் படித்துள்ளார்கள் . நான் இந்த நிலைக்கு வருவதற்கு எனது அப்பா,அம்மாதான் காரணம் . எனது விடமுயற்சியால் முதல் தேர்விலேயே யூ .பி.எஸ்.சி.தேர்வில் வெற்றி பெற்றுளேன்.
எனவே அப்பா,அம்மா படிக்கவில்லை , வறுமை என்ற வருத்தமெல்லாம் உங்களுக்கு வேண்டாம். நீங்கள் முயற்சி செய்து படித்தால் நிச்சயம் வெற்றி உண்டு இவ்வாறு பேசினார் ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அஞ்சுகா மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவரது தந்தை பழனியும் உடன் இருந்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=HbeqbCrJPsM
https://www.youtube.com/watch?v=yCa_08yfXpY
No comments:
Post a Comment