Friday 2 August 2024

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்குதல்



 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில்  ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது .

                                       முகாமிற்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .நேரடியாக பள்ளிக்கே வந்து   விட்டமின் ஏ வழங்கும் திட்டத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி  மாணவர்களுக்கு  விட்டமின் ஏ திரவம் வழங்கினர்..முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துலெட்சுமி  செய்து இருந்தார்.பெற்றோர்களும் முகாமில் பங்கேற்றனர்.

                                                          வைட்டமின் 'ஏ' ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கிய பங்காற்றுகிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் வைட்டமின் 'ஏ' தேவையானது.தேசிய அளவில், ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் 'ஏ' திரவம் நாடு முழுவதும், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் ; தமிழக அரசின்  மாணவர்களுக்கன வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   நடைபெற்றது.  தேவகோட்டை நகராட்சி 6வது வார்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி  மாணவ,மாணவியருக்கு திரவம் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=8JiFyNd2LmM
              

No comments:

Post a Comment